For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காட்டு ரோஜா செடியில் வளரும் இந்த பழத்தின் நன்மைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

ரோஸ் கிப்ஸ் நிறைய பயன்பாடுகளுக்கு உதவுகிறது. சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும், வயிற்றுப் போக்கை நிறுத்த பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுகிறது.

|

ரோஸ் கிப்ஸ் என்பது காட்டு ரோஜா செடியில் உள்ள ஒரு வகை பழமாகும். இதை ரோஸ் ஹெப் அல்லது ரோஸ் ஹவ் என்றும் அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருந்து ஊதா கருப்பு கலந்த நிறம் வரை காணப்படுகிறது. இந்த ரோஸ் கிப்ஸ் வளர்வது கோடையின் பிற்பகுதியில் ஆரம்பித்து இலையுதிர் காலம் வரை வளரும்.

Amazing Health Benefits Of Rose Hip

ரோஸ் கிப்ஸ் நிறைய பயன்பாடுகளுக்கு உதவுகிறது. சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கும், வயிற்றுப் போக்கை நிறுத்த பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் ரோஸ் கிப்ஸ் பழத்தில் 58.66 கிராம் நீர்ச்சத்தும், 162 கிலோ கலோரிகள் ஆற்றலும் கிடைக்கிறது. மேலும் இதில்,

* 1.60 கிராம் புரோட்டீன்

* 0.34 கிராம் கொழுப்பு

* 38.22 கிராம் கார்போஹைட்ரேட்

* 24.1 கிராம் நார்ச்சத்துகள்

* 2.58 கிராம் சர்க்கரை

* 169 மில்லி கிராம் கால்சியம்

* 1.06 கிராம் இரும்புச் சத்து

* 69 மில்லி கிராம் மக்னீசியம்

* 61 மில்லி கிராம் பாஸ்பரஸ்

* 429 மில்லி கிராம் பொட்டாசியம்

* 4 மில்லி கிராம் சோடியம்

* 0.25 மில்லி கிராம் ஜிங்க்

* 426 மில்லி கிராம் வைட்டமின் சி

* 0.016 மில்லி கிராம் தையமின்

* 0.166 மில்லி கிராம் ரிபோஃளவரின்

* 1.300 மில்லி கிராம் நியாசின்

* 0.076 மில்லி கிராம் வைட்டமின் பி6

* 4345 IU வைட்டமின் ஏ

* 5.84 மில்லி கிராம் வைட்டமின் ஈ

* 25.9 மைக்ரோ கிராம் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இப்போது ரோஸ் கிப்ஸின் உடல் நல நன்மைகளைக் காண்போம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரோஸ் கிப்ஸ் இதய நோய்களை தடுக்கும் குணம் கொண்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

டைப்-2 நீரிழிவு

டைப்-2 நீரிழிவு

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரோஸ் கிப்ஸ் பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்பு செல்களை கரைக்கிறது. மேலும் இந்த தாவரத்தில் உள்ள வேறு சில பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

உடல் பருமன் அபாயம்

உடல் பருமன் அபாயம்

ரோஸ் கிப்ஸ் சாற்றை தினமும் காலையில் எடுத்துக் கொண்டு வந்தால் அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து விடும். மேலும் வயிற்று கொழுப்பு, வயிற்றின் உள்ளுறுப்பு கொழுப்பு, உடல் எடை குறைப்பு, உடல் எடை நிறை குறியீட்டு எண் பராமரிப்பு போன்ற வேலைகளை செய்கிறது. டயாபெட்டீஸ் மற்றும் மெட்டபாலிக் நோய்க்குறி மற்றும் உடல் பருமன் தெரபி கூற்றுப்படி ரோஸ் கிப்ஸ் உடல் பருமனை குறைக்க மிகவும் சிறந்தது என்கின்றனர்.

புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்

புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்

ரோஸ் கிப்ஸ் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்க 45% வரை உதவுகிறது. உணவு மற்றும் வேளாண்மை அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ரோஸ் கிப்ஸில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மனித புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது.

ஆர்த்ரிடிஸ் நோயை குணப்படுத்துதல்

ஆர்த்ரிடிஸ் நோயை குணப்படுத்துதல்

ரோஸ் கிப்ஸ் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்று நிறைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஸ்காண்டிநேவிய ஜர்னல் ஆஃப் ருமேட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தினமும் 5 கிராம் ரோஸ் கிப்ஸ் மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்தால் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் இருக்காது. அதே மாதிரி மற்றொரு ஆய்வின் கூற்றுப் படி ரோஸ் கிப்ஸ் முடக்குவாதம் நோய்களையும் சரி செய்கிறது.

நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிப்பு சக்தியை அதிகரித்தல்

ரோஸ் கிப்ஸில் ஏராளமான வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே இது அழற்சியை போக்கி நோயெதிப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும் ஜலதோஷம், ப்ளூ போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

குடல் சார்ந்த பிரச்சனைகள்

குடல் சார்ந்த பிரச்சனைகள்

குடல் சார்ந்த பிரச்சனைகளான மலச்சிக்கல், வயிற்று போக்கு, வயிற்று அல்சர், பித்தப்பை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடந்த ஆய்வின் படி ரோஸ் கிப்ஸ் குடல் புற தசைகளை சுருக்குகிறது. இதனால் இரைப்பை குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

சரும ஆரோக்கிய மேம்பாடு

சரும ஆரோக்கிய மேம்பாடு

ரோஸ் கிப்ஸ் சரும செல்களின் ஆயுட் காலத்தை அதிகரிக்கவும், சுருக்கங்கள் வராமல் தடுக்கவும், சரும ஈரப்பதத்தை காக்கவும் மற்றும் சரும நீட்சித் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் ரோஸ் கிப்ஸில் உள்ள ஆன்டி ஏஜிங் பொருட்கள் சீக்கிரமே வயதாவதை தடுத்து அழகுடன் உடலை மிளிரச் செய்கிறது.

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

ரோஸ் கிப்ஸில் வைட்டமின் சி சத்து இருப்பதால் மற்ற மருந்துகளுடன் தொடர்பு கொள்ள நேரிடலாம். அதுமட்டுமல்லாமல் இது லேசான டையூரிடிக் தன்மையையும் கொண்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த குழாய்களில் த்ரம்போஸிஸ் இருந்தால் இதை எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள். மேலும் ரோஸ் கிப்ஸில் உள்ள ருகோசின் ஈ என்ற மருந்து இரத்தக் கட்டிகளை உருவாக்கக் கூடும்.

 ரோஸ் கிப்ஸ்யை எப்படி பயன்படுத்துவது?

ரோஸ் கிப்ஸ்யை எப்படி பயன்படுத்துவது?

ஒரு நாளைக்கு 5-10 கிராம் அளவில் ரோஸ் கிப்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வரலாம். உலர்ந்த ரோஸ் கிப்ஸ் பொடியிலிருந்து தேநீர் தயாரித்தும் குடிக்கலாம். ரோஸ் கிப்ஸ் எண்ணெய் அரோமோ தெரபிகளில் பயன்படுகிறது.

ரோஸ் கிப்ஸ் டீ தயாரிக்கும் முறை

ரோஸ் கிப்ஸ் டீ தயாரிக்கும் முறை

* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி சூடுபடுத்துங்கள்

* 1 டீ ஸ்பூன் ரோஸ் கிப்ஸ் பொடியை போடுங்கள்

* 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடுங்கள்

* 5 நிமிடங்கள் நன்றாக ஆறட்டும்

* பிறகு தேநீரை வடிகட்டி அதில் தேன் கலந்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits Of Rose Hip

The benefits of rose hip are many. It is used in the traditional Chinese medicine for proper functioning of the kidneys and to stop diarrhoea.
Story first published: Thursday, October 24, 2019, 16:40 [IST]
Desktop Bottom Promotion