For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தியானம் பற்றி இன்றளவும் மக்களால் நம்பப்படும் 5 பொதுவான கட்டுக்கதைகள்!

தினமும் தியானம் செய்வதால் பலவித ஆரோக்கியமான நன்மைகளும் கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைகளுக்கு மத்தியில் தியானம் குறித்து மக்களால் இன்றளவும் நம்பப்படும் பல்வேறு கட்டுக்கதைகளும் உள்ளன.

|

நல்ல தெளிவான மனதையும், ஆரோக்கியமான உடலையும் பெற தியானம் ஒரு சிறந்த வழியாகும். ஆனால் பொதுவாக தினமும் தியானம் செய்வது என்பது மன ஆரோக்கியத்திற்கு மட்டுமே நன்மை தரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தினமும் தியானம் செய்வதால் பலவித ஆரோக்கியமான நன்மைகளும் கிடைக்கின்றன. மனஅழுத்தம் அல்லது உடல் வலி அல்லது தீர்க்கப்படாத உணர்ச்சிகள் போன்ற அனைத்தையும் தியானம் குணப்படுத்தும். இந்த பாரம்பரியம் மிக்க பழக்கவழக்கம் உங்களை எதிர்மறை எண்ணத்தில் இருந்து விலக்கி வைக்கும். நீங்கள் எப்போதாவது மிகவும் நம்பிக்கையற்று உணரும் போது அமைதிக்காக உங்கள் வழியில் தியானம் செய்யுங்கள்.

5 Most Common Myths About Meditation

இவ்வளவு நன்மைகளுக்கு மத்தியில் தியானம் குறித்து மக்களால் இன்றளவும் நம்பப்படும் பல்வேறு கட்டுக்கதைகளும் உள்ளன. இந்த பதிவின் மூலம் அந்த கட்டுக்கதைகள் பற்றி உங்களுக்கு தெரியப்படுத்தவிருக்கிறோம். இதன் மூலம் எது சரி, எது தவறு என்ற முடிவிற்கு உங்களால் வரமுடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1:

கட்டுக்கதை 1:

சத்தமில்லாத அமைதியான சூழ்நிலையில் மட்டுமே தியானப் பயிற்சி செய்ய வேண்டும்

தியானம் செய்வதற்கு அமைதியான இடம் வேண்டும் என்பது அவசியமில்லை. இசையுடன் கூட நீங்கள் தியானம் செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. தியானம் செய்வதன் முக்கிய குறிக்கோள், உங்கள் கவனம் உங்கள் சுவாசத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது மட்டுமே. மக்கள் கூடி இருக்கும் இடத்தில் , சத்தம் அதிகம் உள்ள இடத்தில் கூட தியானம் செய்யலாம். உண்மையில் இந்த விதத்தில் தியானம் செய்வது இன்னும் சவாலான காரியம். இதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களால் சிறப்பாக தியானம் செய்ய இயலும். அதனால் தியானம் செய்ய கவனம் மட்டுமே தேவை, அமைதியான இடம் என்பது அவசியமில்லை.

கட்டுக்கதை 2:

கட்டுக்கதை 2:

தியானம் செய்யும் போது உங்கள் மனதில் எந்த ஒரு சிந்தனையும் இருக்கக்கூடாது

தியானம் என்பது ஒரு எளிய காரியம் அல்ல. பலருக்கும் தங்கள் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த முடியாது, குறிப்பாக தியானம் செய்யத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் சிந்தனைகளை அடக்க முடியாது. அதனால் தொடக்க நிலையில் இந்த சிந்தனைகள் மனதில் எழுவதில் எந்த தவறும் இல்லை.

நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யச் செய்ய உங்கள் மனம் மற்றும் சிந்தனைகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். ஒரு காலகட்டத்தில் நீங்கள் உங்கள் மனதில் ஒரு அமைதியை உணர்வீர்கள், ஆனால் நினைவுகள் மற்றும் சிந்தனைகள் ஒருபோதும் மறையாது. ஆகவே, தியானம் செய்யும் போது அலைபாயும் மனது மற்றும் சிந்தனைகள் உண்டாவது தவறு என்ற எண்ணம் முற்றிலும் சரியல்ல.

கட்டுக்கதை 3:

கட்டுக்கதை 3:

தியானம் செய்யும் போது உட்காந்து கொண்டிருப்பது அவசியம்.

உட்கார்ந்து கொண்டு தியானம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. நிபுணர்களின் கருத்துப்படி, நடந்துக் கொண்டு தியானம் செய்யலாம், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போது தியானம் செய்யலாம், சோபா, மெத்தை போன்றவற்றில் அமர்ந்திருக்கும் போதும் தியானம் செய்யலாம். இது தவிர, படுத்திருக்கும் நிலையில் கூட தியானம் செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. உங்கள் தலை, தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியைத் தளர்த்தி, உங்கள் ஆழ்மனத்துடன் உங்கள் உடல் இணைய அனுமதிக்க வேண்டும். நடந்து கொண்டே தியானம் செய்வது, உட்கார்ந்த கொண்டு தியானம் செய்வதை விட சிறந்த பலனைத் தரும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

கட்டுக்கதை 4:

கட்டுக்கதை 4:

பல மணிநேரம் தியானம் செய்ய வேண்டும்.

எல்லா வேலையையும் நிறுத்திவிட்டு , பல மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து தியானம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இது உண்மை இல்லை. வெறும் 5 நிமிடங்கள் கூட நீங்கள் தியானம் செய்யலாம். இதனால் நீங்கள் மனதளவில் உடனடியாக உற்சாகம் பெற முடியும். சரியான நுட்பத்தை நீங்கள் பின்பற்றினால், 15-20 நிமிடம் தியானம் செய்வது அல்லது நடந்து கொண்டே தியானம் செய்வது போன்றவை போதுமானது.

கட்டுக்கதை 5:

கட்டுக்கதை 5:

தியானம் என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்லது ஆன்மீக பயிற்சி.

தியானம் என்பது யோகாவுடன் தொடர்புடையது, ஆன்மீகத்துடன் தொடர்புடையது அல்ல. தியானம் என்பது மனத்திற்கான உடற்பயிற்சி மட்டுமே. இதனால் மதம் சார்ந்த மற்றும் ஆன்மிகம் சார்ந்த நன்மைகள் எதுவும் கிடைப்பதில்லை. இது ஒரு முழுமையான கட்டுக்கதை.

முடிவு

முடிவு

மேலே கூறிய கட்டுக்கதைகள் பற்றி நீங்கள் இன்றளவும் நம்பிக் கொண்டிருந்தால் இன்று முதல் அதனைக் கைவிடுங்கள். இவற்றைக் கைவிடுவதால் தியானம் மூலம் பெரும் நன்மைகளை முற்றிலும் பெற முடியும். ஆகவே உங்களுக்கு விருப்பமான வழியில் தியானம் செய்யுங்கள். உங்கள் சுவாசத்தில் கவனம் கொண்டு, மனதை அமைதிப்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Most Common Myths About Meditation

Here are some most common myths about meditation that you need not believe. Read on...
Desktop Bottom Promotion