For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யோகா பயிற்சியை மேம்படுத்த உதவும் சில ஆயுர்வேத பழக்கங்கள்!

யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒரு நபரின் ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ற விதத்தில் யோகா பயிற்சி செய்ய ஆயுர்வேதம் உதவுகிறது.

|

உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் ஒரு முழுமையான பயிற்சி யோகா. ஆசனங்கள், பிராணாயாமம் , தியானம் போன்றவை யோகாவிற்குள் அடங்கும் சில பயிற்சிகளாகும். ஆயுர்வேதம் என்பது இயற்கை மருத்துவம் மற்றும் சிகிச்சை முறையாக அறியப்படுவதாகும். ஒரு நபரின் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றில் அந்த நபரின் உடலில் முக்கியத்துவம் மற்றும் அந்த நபரின் குணநலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு தரப்படும் ஒருவித சிகிச்சை இதுவாகும்.

5 Ayurveda Rituals To Deepen Your Yoga Practice

யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒரு நபரின் ஆரோக்கிய நலன்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ற விதத்தில் யோகா பயிற்சி செய்ய ஆயுர்வேதம் உதவுகிறது. இங்கு உங்கள் யோகா பயிற்சியை மேம்படுத்த ஆயுர்வேதத்தை உங்கள் வாழ்வியலில் இணைத்துக் கொள்ள சில எளிய வழிகள் ள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பஞ்சகர்மா

பஞ்சகர்மா

உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் 5 வகையான தூய்மை பயிற்சிகளைக் கொண்டது பஞ்சகர்மா. உடல் மொத்தமும் உள்ள கழிவுகளை வெளியேற்ற கூடிய மற்றும் சமநிலை அடைய உதவும் ஒரு சிறந்த பயிற்சியாக கருதப்படும் இந்த வழிமுறை உடல் மற்றும் மனத்தை ஒருநிலைப்படுத்த மற்றும் வலிமையாக்க உதவுகிறது. இந்த வழிமுறை தோஷத்தில் உள்ள சமநிலையின்மையை அகற்றி யோகா பயிற்சிக்கான ஒரு வலிமையான அடிப்படையை உருவாக்க உதவுகிறது.

உணவு

உணவு

யோகா பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு சாத்வீக உணவை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. இந்த வகை உணவு திட்டத்தில் பழங்கள், விரதம் , குறைந்த அளவு காரம் மற்றும் பதப்படுத்துதல், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. யோகா பயிற்சியை கடினமாக பின்பற்றுகிறவர்கள் இயற்கை முறையில் உடல் குளிர்ச்சியைப் பெறுவதால், இந்த உணவு செரிமானத்திற்கு தேவைப்படும் வெப்பத்தை வழங்கி சமநிலையை உண்டாக்குகிறது.

மிதமான அளவு யோகா பயிற்சி பெறுபவர்களும் பழங்கள், காய்கறிகள், பருப்புகள், மூலிகை தேநீர், இயற்கை சர்க்கரை போன்ற சைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆசனங்கள்

ஆசனங்கள்

ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு உணவை பரிந்துரைக்கும் ஆயுர்வேதம், ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட உடல் இயல்பை பிரகிருதி என்று குறிப்பிடுகிறது. அவ்வாறு ஒவ்வொரு இயல்பிற்கு ஒவ்வொரு தனிப்பட்ட யோகா நிலையை பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம். வாதம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஒரு கால் நிலை, பித்தம் தொடர்பான பாதிப்புகளுக்கு ஒரு பக்க அங்க நிலைகள் போன்றவை நல்ல பலனை கொடுக்கும். கபம் தொடர்பான பாதிப்புகளுக்கு சூரிய நமஸ்காரம் நல்ல பலன் கொடுக்கும். இந்த வகையில் ஆன்மீக வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஆசன பயிற்சி நல்ல பலன் கொடுக்கிறது.

மசாஜ்

மசாஜ்

ஆயுர்வேத சிகிச்சையில் மசாஜ் சிகிச்சை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வழக்கமான எண்ணெய் மசாஜ் செய்வதால் உடல் இறுக்கம் தளர்ந்து, யோகா செய்யக்கூடிய அளவிற்கு உடல் வளைந்து கொடுக்க முடிகிறது. நல்லெண்ணெயில் சமைக்கப்பட்ட மூலிகை கொண்டு மசாஜ் செய்வது யோகா பயிற்சி செய்பவர்களுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. மசாஜ் செய்வதால் மூட்டுகள் மற்றும் தசைகளில் உள்ள இறுக்கம் குறைய உதவுகிறது.

மூலிகைகள்

மூலிகைகள்

யோகா அனுபவங்களை மேம்படுத்த யோகா பயிற்சியாளர்கள் பாரம்பரியமாக மூலிகைகளை தங்கள் உணவு மற்றும் சிகிச்சையில் பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்க அஸ்வகந்தா உதவுகிறது. இது கபத்திற்கு உகந்ததாக உள்ளது. மஞ்சள் மற்றும் குக்குலு போன்றவை நெகிழ்வை மேம்படுத்தி கீல்வாதத்தை தடுக்கிறது. இது வாதத்திற்கு உகந்தது. பிராமி , விழிப்புணர்வு அளவை மேம்படுத்தி , அறிவாற்றல் மற்றும் மனத்தெளிவை தருகிறது. பித்தத்திற்கு இது உகந்தது. கற்பூரம், தைல போன்ற மூலிகைகள் சைனஸ் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை தருகிறது. மேலும் பிராணாயாம பயிற்சிக்கு உதவி புரிகிறது.

முடிவுரை

முடிவுரை

யோகா என்பது ஆசன பயிற்சி மட்டுமல்ல. பிராணயாமம், தியானம் போன்றவற்றை உள்ளடக்கியது. ஆயுர்வேதம் இந்த எல்லா பயிற்சிகளையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும் ஒவ்வொரு தனி நபரின் குணநலன் மற்றும் உடல் நிலைக்கு ஏற்ப இந்த பயிற்சியை தனித்துவப்படுத்த முடியும். மேலும் வாழ்க்கை முறை மேம்பாட்டிற்கு மற்றும் முழுமையான யோகா பயிற்சி வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் சிறந்த முறையில் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Ayurveda Rituals To Deepen Your Yoga Practice

Here are some ayurveda rituals to deepen your yoga practice. Read on...
Desktop Bottom Promotion