For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா? உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை

இன்றைய காலகட்டத்தில் மூன்றில் ஒரு இளைஞருக்கு இன்சோமேனியா குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. தூக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உங்களின் ஆரோக்கிய குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம்.

|

அனைவருக்குமே தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். தூக்க பற்றாக்குறை ஏற்படும்போது அது உங்கள் உடலில் பல விதத்தில் எதிரொலிக்கும். அதேபோல உங்கள் தூக்க பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பற்றி கூறுவதாக இருக்கும்.

What Your Sleep Habits Are Trying to Tell You

இன்றைய காலகட்டத்தில் மூன்றில் ஒரு இளைஞருக்கு இன்சோமேனியா குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. தூக்கத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உங்களின் ஆரோக்கிய குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். உங்கள் தூக்க பிரச்சினைகளை உங்கள் ஆரோக்கியத்தை பற்றி என்ன சொல்கிறது அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அடிக்கடி விழிக்கிறீர்களா?

அடிக்கடி விழிக்கிறீர்களா?

நீங்கள் தூக்கத்தில் அடிக்கடி விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் உங்களுக்கு ஒரு சீரான தூக்க முறை வேண்டும். கஷ்டப்பட்டாவது தினமும் ஒரே நேரத்தில் எழும் பழக்கத்தை கொண்டு வர முயற்சி செய்யுங்கள். சரியான நேரத்திற்கு தொடர்ச்சியாக விழிக்கும் போது நீங்கள் படுக்கைக்கு செல்லும் நேரமும் சரியான நேரத்திற்கு மாறும். தினமும் வெவ்வேறு நேரத்திற்கு எழுவது உங்கள் உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

எழும்போது சோர்வாக இருக்கிறீர்களா?

எழும்போது சோர்வாக இருக்கிறீர்களா?

நன்றாக தூங்கி எழுந்த பின்னரும் சோர்வாக இருப்பதற்கு பல காரணம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தூங்க செல்வதற்கு முன் நீங்கள் உணவெடுத்து கொள்ளும் நேரமாகும். குறைவான நார்ச்சத்துக்கள், அதிகளவு சர்க்கரை மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும் உணவை சாப்பிடுவது அடிக்கடி உங்களை தூக்கத்தில் விழிக்க வைக்கும், மேலும் உங்களை எழுந்தவுடன் சோர்வாக உணரச்செய்யும்.

படுக்கையில் புரள்கிறீர்களா?

படுக்கையில் புரள்கிறீர்களா?

பெரும்பாலனோர் செய்யும் தவறு என்னவெனில் தூக்கம் வரவில்லை என்றால் தூக்க நிலைகளை மாற்றி மாற்றி புரண்டு கொண்டே இருப்பது. உண்மையில் இது ஒரு தவறான செயலாகும். இதுபோன்ற சமயங்களில் தொடர்ந்து படுத்திருக்காமல் எழுந்து வெளியே சென்று கொஞ்ச நேரம் வேறு வேலையில் ஈடுபடுங்கள். பிறகு வந்து தூங்குங்கள்.

MOST READ:உங்கள் பிறந்த தேதிப்படி என்ன செய்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் நிலைத்திருக்கும் தெரியுமா?

நள்ளிரவில் எழுவது

நள்ளிரவில் எழுவது

தூங்குவதற்கு முன் மது அருந்துவது உங்களுக்கு விரைவாக தூங்க உதவும், ஆனால் இது நள்ளிரவில் உங்களை எழ வைக்கும். மருத்துவர்களின் அறிவுரைப்படி தூங்குவதற்கு முன் மது அருந்துவது நள்ளிரவில் உங்களுக்கு இன்சொமேனியாவை ஏற்படுத்தும். அதற்கு பிறகு மீண்டும் தூங்குவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.

குறட்டை

குறட்டை

சுவாச பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு தூக்கத்தில் குறட்டை, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.இதனால் பகல் நேர தூக்கம், தொண்டைப்புண், காலைநேர தலைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் எடை அதிகமிருப்பதும், மரபணு கோளாறுகளும் இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். இது டைப் 2 சர்க்கரை நோயாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

 காலில் அரிப்பு

காலில் அரிப்பு

நள்ளிரவில் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் பாதத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற உணர்வுகள் தோன்றலாம். அது அமைதியற்ற கால்கள் நோய்க்க்கான அறிகுறி ஆகும். காலை தொடர்ந்து அமைதியற்ற நிலையில் வைத்திருப்பது இந்த நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணமாகும். மாலை நேரங்களில் மது மற்றும் காஃபைன் பானங்களை தவிர்ப்பது இந்த நோயை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும்.

 நேரம் மட்டும் போதாது

நேரம் மட்டும் போதாது

வயது வந்தவர்கள் அவர்களின் உடலை புணரமைக்க குறைந்தது 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்க வேண்டும். தூங்கும் நேரத்தை போலவே தூக்கத்தின் தரமும் மிகவும் முக்கியமானதாகும். தூக்கத்திற்கு இடையே எந்த தொந்தரவும் இல்லாமல் தடையில்லா தூக்கமாக இருக்க வேண்டும்.

MOST READ:லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்

தூக்கத்தில் சிறுநீர் அடிக்கடி வருகிறதா?

தூக்கத்தில் சிறுநீர் அடிக்கடி வருகிறதா?

இந்த பிரச்சினை ஏற்பட முக்கிய காரணம் தூங்குவதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பதாகும். ஆனால் இது மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கலாம். இந்த பிரச்சினை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.ஏனெனில் இது சர்க்கரை நோயாகவோ அல்லது புரோஸ்ட்ரேட் விரிவாக்க நோயாகவோ இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Sleep Habits Are Trying to Tell You

Here’s what sleep experts say your sleep habits reveal about your health.
Story first published: Monday, July 15, 2019, 17:45 [IST]
Desktop Bottom Promotion