For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தால் உடலில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்..?

|

உடலின் முழு இயக்கத்திற்கும் மூல காரணமே இந்த ஹார்மோன்கள் தான். ஹார்மோன் உற்பத்தியின் சமநிலை பாதிக்கப்பட்டால் எண்ணற்ற கோளாறுகள் உடலுக்கு ஏற்படும். ஹார்மோன் அதிக அளவு இருந்தாலும் அது ஆபத்தான நிலையை உண்டாக்கி விடும். அதே போன்று ஹார்மோன் குறைவாக இருந்தாலும் அது பலவித பாதிப்புகளை தரும்.

இந்த ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தால் உடலில் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?

ஆண்களின் உடலிலும் பெண்களின் உடலிலும் இது வெவ்வேறு விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆண்களின் உடலில் சில ஹர்மோனேகள் அதிக அளவு உற்பத்தி ஆகினால் பெண்களின் உடலில் உண்டாகும் மாற்றங்கள் ஏற்படும். இதுவே பெண்களின் உடலில் தலைகீழ் சுழற்சியாக மாற்றம் பெறும். இந்த பதிவில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் உடலில் உற்பத்தியாகினால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உண்டாகும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பு பகுதி

மார்பு பகுதி

பொதுவாக அளவுக்கு அதிகமாக எந்த ஹார்மோன் சுரந்தாலும் அதனால் பாதிப்பு தான் ஏற்படும் என ஆய்வுகள் சொல்கின்றன. அந்த வகையில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் மார்பு பகுதியில் வீக்கம் ஏற்பட கூடும். சிலருக்கு மார்பகங்கள் முன்பை விட பெரிதாகவும் மாற தொடங்கும்.

முடி கொட்டுதல்

முடி கொட்டுதல்

முடி கொட்டும் பிரச்சினைக்கு ஹார்மோன்களும் மூல காரணம் தான். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் உடலில் சுரந்தால் முடி கொட்டும் பிரச்சினை அதிகமாகும். இதற்கும் மனநிலை மாற்றத்திற்கும் தொடர்புண்டு என ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் எடை

உடல் எடை

அதிகமாக சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை கூடாது. அத்துடன் இது போன்ற ஹார்மோன் மாற்றத்தாலும் உடல் எடை கூடி விடும்.

ஈஸ்ட்ரோஜென் அளவு உயர்ந்தால் எடை தானாக கூடி விடும். ஆதலால், ஹார்மோனுக்கும் எடை உயர்வதற்கும் காரணம் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.

MOST READ: அளவுக்கு அதிகமாக சளி உடலில் சேர்வதை எப்படி கண்டுபிடிப்பது?

சோர்வு

சோர்வு

ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பால் எப்போதுமே சோர்வாக இருப்பீர்கள். எதை செய்ய நினைத்தாலும் அதில் ஈடுபாடு இருக்காது. மொத்தத்தில் உங்களை மிகவும் மோசமான நிலைக்கு தள்ள இந்த ஹார்மோனும் ஒரு காரணம்.

மாதவிடாய்

மாதவிடாய்

ஹார்மோன் மாற்றத்தின் தாக்கம் மாதவிடாயையும் பெரும்பாலும் பாதிக்கும். ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரந்தால் மாதவிடாய் சுழற்சியையும் நேரடியாக பாதிக்கும். சில பெண்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் ஏராளமான மாற்றங்களை இது உண்டாக்கும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதற்கு ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பும் காரணம். உடலில் அளவுக்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜென் இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும். தூக்கமின்மைக்கு மூல காரணமே இந்த ஹார்மோன் மாற்றம் தான்.

மனநிலை

மனநிலை

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் நேரடியாக உங்களது மன நிலையை மாற்றம் பெற செய்யும். குறிப்பாக காரணமே இல்லாமல் நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்க செய்யும். மேலும், உளவியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்.

ஹார்மோன் சமன்பாடு

ஹார்மோன் சமன்பாடு

சமநிலையில் ஹார்மோன் சுரக்காமல் இருந்தால் நிச்சயம் மிக பெரிய பாதிப்பு இதனால் உண்டாகும்.மேலும், உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை மாற்றம் ஏற்படும். உள் உறுப்புகளுக்கும், வெளி உறுப்புகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த ஹார்மோனும் ஒரு காரணம்.

MOST READ: வழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs Your Body Has Too Much Estrogen

Here we listing the warning signs that your body has too much estrogen.
Desktop Bottom Promotion