For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்பவும் தாகமாவே இருக்கா? ஜாக்கிரதையா இருங்க மோசமான இந்த நோயா இருக்கவும் வாய்ப்பிருக்கு...!

தண்ணீர் குடிப்பது என்பது அவசியமான ஒன்று, அதுவும் கோடைகாலங்களில் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிக்க நேரிடும்.

|

" நீரின்றி அமையாது உலகு " என்று கூறுவார்கள். அது முழுக்க முழுக்க உண்மையான ஒன்றாகும். ஏனெனில் உணவில்லாமல் கூட ஒருவரால் உயிர்வாழ முடியும் ஆனால் நீர் இன்றி ஒருநாளை கடத்துவது என்பதே மிகவும் கடினமான ஒன்றாகும். சரியான நேரத்தில் போதுமான அளவு நீர் குடித்தாலே நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ளலாம்.

Unexpected Reasons You Are Always Thirsty

தண்ணீர் குடிப்பது என்பது அவசியமான ஒன்று, அதுவும் கோடைகாலங்களில் வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிக்க நேரிடும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக எந்நேரமும் தாகத்துடன் இருப்பது என்பது ஆபத்தான ஒன்றாகும். ஏனெனில் எப்போதும் தாகத்துடன் இருப்பது சில நோய்களின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்நேரமும் தாகமாக என்னென்ன காரணங்கள் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் அதிகம் உப்பு சாப்பிடுகிறீர்கள்

நீங்கள் அதிகம் உப்பு சாப்பிடுகிறீர்கள்

உப்பு செல்களில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றுகிறது இதன் மூலம் நம் உடலை அதிக தண்ணீர் குடிக்க தூண்டும், அதிக உப்பு சாப்பிடும்போது நீங்கள் குறைவாகவே சிறுநீர் கழிப்பீர்கள். நீர் வெளியேற்றப்பட்ட செல்கள் மூளைக்கு மேலும் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற சிக்னல்களை அனுப்பும், இதனால் உங்களுக்கு தொடர்ந்து தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொண்டு போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

காலை ஓட்டத்திற்கு சென்றால்

காலை ஓட்டத்திற்கு சென்றால்

நீங்கள் வழக்கமான நாட்களை விட அதிக வேர்வை வரும் நாட்களில் அதிக தண்ணீர் குடிக்க நேரிடும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்துக்களை வியர்வை மூலம் இழக்க நேரிடும். அந்த இழக்கும் நீர்ச்சத்தை நீங்கள் சரிகட்டவில்லையெனில் நீங்கள் அதிக தாகத்திற்கு ஆளாகலாம். உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நீர் குடிக்க ஒரு அளவு உள்ளது, அதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது

சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பது

இந்த பிரச்சினை கோடைகாலத்தில் அதிகம் ஏற்படும். வெயில் காலத்தில் வெளிப்புறங்களில் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் உங்கள் உடலில் இருக்கும் நீர்சத்துகள் குறைந்து கொண்டேயிருக்கும். நீங்கள் எந்த செயலும் செய்யாவிட்டால் கூட உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவு குறையத்தான் செய்யும். வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கையோடு நீர் பாட்டில் எடுத்துச்செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாக இருக்கலாம்

சர்க்கரை நோயாக இருக்கலாம்

சர்க்கரை நோயை நீர்ச்சத்து குறைபாடு என்று பலரும் நினைத்து கொள்கிறார்கள். நீரிழப்பு உங்கள் உடல் திரவங்களை பாதுகாக்க விரும்புகிறது. சர்க்கரை நோய் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்கும் படி செய்யும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான மூன்று அறிகுறிகள் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் மங்கலான பார்வை ஆகும். இந்த மூன்றும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுகுவது நல்லது.

MOST READ: பகவான் கிருஷ்ணருக்கு சிவபெருமான் வழங்கிய வரம் என்ன? அதனால் ஏற்பட்ட பேரழிவு என்ன தெரியுமா?

உங்களுக்கு ஏரோஸ்டாமியா இருக்கலாம்

உங்களுக்கு ஏரோஸ்டாமியா இருக்கலாம்

இந்த குறைபாடு இருந்தால் நீங்கள் எப்போதும் வாய் உலர்வாக இருப்பது போலவே உணர்வீர்கள். உங்கள் வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை சுரக்காத போது நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். தொடர்ந்து உங்கள் வாய் உலர்வாகவே இருப்பது போல உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரத்தசோகையாக இருக்கலாம்

இரத்தசோகையாக இருக்கலாம்

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க இரத்த செல்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் ஏனெனில் அவைதான் உங்கள் உடல் முழுவதும் இரத்தத்தை கடத்தி செல்கிறது. ஆரம்பகட்ட இரத்தசோகை எப்போதும் உங்களுக்கு அதிக தாகத்தை ஏற்படுத்தாது, ஆனால் உங்கள் நிலை மோசமாக இருந்தால் உங்களுக்கு அதிக தாகம் இருக்கும்.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள்

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் சில உங்களுக்கு வாயை உலர்வாக்கி உங்களுக்கு அதிக தாகத்தை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் சில உங்களுடைய வாயை உலர்வாக்கும்.

MOST READ: இந்த சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் உங்களுக்கு ராஜவாழ்க்கை காத்திருக்கிறது தெரியுமா?

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது

அதிக தாகம் எடுக்க முதல் காரணம் நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான். சரியான அளவு என்னவென்றால் உணவிற்கு பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது பின்னர் ஒவ்வொரு உணவிற்கு இடையிலும் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பதாகும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unexpected Reasons You Are Always Thirsty

Check out the shocking reasons for why you always feel thirsty.
Desktop Bottom Promotion