For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...!

அதிக சந்தோஷமான மனநிலையிலும், மோசமான மனநிலையிலும் ஒருபோதும் நாம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஏனெனில் அந்த தருணங்களில் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் தவறாகத்தான் இருக்கும்.

|

ஒருவரின் மனநிலை எப்பொழுதும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று கூற முடியாது. நாம் அனைவருமே தினமும் பல்வேறு மனநிலை மாற்றங்களுக்கு ஆளாகிறோம். சில நேரங்களில் கொண்டாட்ட மனநிலையிலும், சில நேரங்களை விரக்தியிலும், சில நேரங்களில் கோபத்திலும் என ஒரே நாளில் நம்முடைய மனநிலை பல மாற்றங்களை சந்திக்கிறிது.

Things you should never do when you’re in a bad mood

அதிக சந்தோஷமான மனநிலையிலும், மோசமான மனநிலையிலும் ஒருபோதும் நாம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. ஏனெனில் அந்த தருணங்களில் எடுக்கும் முடிவுகள் எப்பொழுதும் தவறாகத்தான் இருக்கும். முடிவுகள் மட்டுமின்றி மோசமான மனநிலையில் சில செயல்களையும் செய்யக்கூடாது, அது நமது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இந்த பதிவில் மோசமான மனநிலையில் என்னென்ன செயல்களை செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு சூழ்நிலைகளை கலக்காதீர்கள்

இரண்டு சூழ்நிலைகளை கலக்காதீர்கள்

நீங்கள் கோபமாக அல்லது வருத்தமாக இருந்தால், மற்ற சூழ்நிலைகளிலோ அல்லது இடங்களிலோ உங்கள் கோபத்தையோ விரக்தியையோ வெளிப்படுத்த வேண்டாம். இதனால் நீங்கள் தேவையில்லாமல் ஒருவரை காயப்படுத்தலாம்.

உங்கள் உணர்வுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம்

உங்கள் உணர்வுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம்

உங்கள் மோசமான மனநிலை தற்காலிகமானது மட்டுமே, அது எப்போதும் நிலைக்காது. உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினால் உங்களின் தனிப்பட்ட நோட்டுப்புத்தகத்தில் அதனை எழுதி கிழித்து போட்டுவிடுங்கள். உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவது முட்டாள்தனமானது. இதனால் உங்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

முக்கியமானவர்களுடன் பேசாதீர்கள்

முக்கியமானவர்களுடன் பேசாதீர்கள்

உங்கள் மனநிலை உங்கள் பேச்சையும் பாதிக்கிறது. எனவே மோசமான மனநிலையில் இருக்கும்போது உங்களின் உயரதிகாரிகள், பெற்றோர்கள், உங்களுக்கு பிடித்தவர்கள் போன்றவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். அவ்வாறு பேசும்போது கோபத்தில் நீங்கள் பேசும் சில தேவையற்ற வார்த்தைகள் உங்கள் உறவை சிதைக்கக்கூடும்.

MOST READ: புராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...!

முடிவுகளை எடுக்காதீர்கள்

முடிவுகளை எடுக்காதீர்கள்

கோபமான மனநிலையில் இருக்கும்போது எந்த முடிவையும் எடுக்காதீர்கள். கோபத்தில் எடுக்கும் முடிவு ஒருபோதும் நல்ல பலனை தராது. சிறிது நேரத்திற்கு பிறகு தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று உங்களுக்கு தோன்றலாம் ஆனால் அதனை மாற்றுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லாமல் போகலாம்.

ஷாப்பிங் செல்லாதீர்கள்

ஷாப்பிங் செல்லாதீர்கள்

ஷாப்பிங் செல்வது உங்களின் மோசமான மனநிலையை சரியாக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கோபமான மனநிலையில் ஷாப்பிங் செல்லும்போது உங்களுக்கு தேவையில்லாத பல பொருட்களை வாங்க நேரிடும்.

குடிக்கவோ, புகைக்கவோ வேண்டாம்

குடிக்கவோ, புகைக்கவோ வேண்டாம்

குடிப்பதும், புகைப்பதும் உங்கள் மனநிலையை மாற்றும் என்று நீங்க நினைத்தால் அது கண்டிப்பாக தவறு மேலும் இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் கெடுதலாகும். குடித்த பிறகு நீங்கள் உங்களின் மீதான கட்டுப்பாட்டை இழப்பீர்கள். இதனால் நீங்கள் பல பெரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சரியான தூங்குமூஞ்சிகளாக இருப்பார்களாம் தெரியுமா?

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது

வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது

உங்களின் மோசமான மனநிலைக்கு காரணம் வாக்குவாதம் என்றால் மேற்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். இது எந்த நல்ல முடிவுகளையும் ஏற்படுத்தாது மாறாக உங்கள் இதயத்தை உடைக்கவே செய்யும். எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மோசமான மனநிலையில் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றுவிடுங்கள்.

அதிகமாக சாப்பிடாதீர்கள்

அதிகமாக சாப்பிடாதீர்கள்

உங்களின் மோசமான மனநிலை உங்களை அதிகம் சாப்பிட தூண்டும். உங்களின் எடை அதிகரிப்பிற்கு இது முக்கிய காரணமாகும். மோசமான மனநிலையை கொண்டிருப்பது அனைவருக்கும் பொதுவானது ஆனால் அதனை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். நடனம் மற்றும் இசை போன்றவை நல்ல தேர்வுகளாக இருக்கும்.

வாகனம் ஓட்டாதீர்கள்

வாகனம் ஓட்டாதீர்கள்

மோசமான மனநிலையில் இருக்கும்போது ஒருபோதும் வாகனம் ஓட்டாதீர்கள். நீங்கள் ஆக்ரோஷமான மனநிலையில் இருக்கும்போது, மற்றவர்களுக்கு தீங்கை ஏற்படுத்தலாம். மோசமான மனநிலையில் இருக்கும்போது, நீங்கள் அதைப் பற்றி தொடர்ந்து சிந்திக்கிறீர்கள், இதனால் அது விபத்தில் முடிவடைய வாய்ப்புள்ளது.

MOST READ: முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...!

தூங்க செல்லாதீர்கள்

தூங்க செல்லாதீர்கள்

தூங்க செல்லும்போது எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கோபத்துடன் தூங்க செல்லாதீர்கள். இது உங்களின் மூளைக்கு சேதத்தை விளைவிப்பதோடு, தூக்கத்தையும் கெடுக்கும். தூங்க செல்வதற்கு முன் உங்கள் மனநிலையை தெளிவாக்கி கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things you should never do when you’re in a bad mood

Never do these things when you are in bad mood.
Desktop Bottom Promotion