For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய் வராமல் இருக்க மருத்துவர்கள் கடைபிடிக்கும் 9 இரகசியங்கள் என்ன தெரியுமா?

|

மனித இனம் இந்த பூமியில் இருக்கும் வரை நோய்களின் வீரியமும் தொடரும். முன்பு இருந்த நோய்கள் இப்போது குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால், இது ஒருபுறம் இருந்தாலும், புது புது நோய்களின் தாக்கம் கூடி கொண்டே போகிறது. இந்த வரிசையில் புற்றுநோய் தான் முதல் இடத்தில் பல ஆண்டுகளாக உள்ளது.

புற்றுநோயை தடுக்க மருத்துவர்கள் கடைபிடிக்கும் 9 இரகசியங்கள் என்ன தெரியுமா..?

புற்றுநோயின் இந்த விஸ்வரூபத்திற்கு காரணம் புற்றுநோய் செல்கள் தான். மற்ற நோய்கள் ஒரு சில உறுப்புகளை மட்டுமே பாதிக்கும். ஆனால், புற்றநோய் தான் உடலில் பெரும்பாலான உறுப்புகளில் குடியேறி உடலை உருகுலைக்கும். அதனால் தான் இதன் வீரியம் மற்ற நோய்களை விட அதிக அளவில் உள்ளது.

புற்றுநோயின் அபாயத்தில் இருந்து தப்பிக்க சில இரகசிய வழிமுறைகளை புற்றுநோய் மருத்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவை என்னென்ன இரகசிய வழிகள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம நிலை

சம நிலை

எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படாமல் இருந்தாலே மிக எளிதில் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதற்கு உடல் நிலை மற்றும் மன நிலை இரண்டுமே சீராக இருக்க வேண்டும்.

மன நிலையை சீராக வைக்கவில்லை என்றால் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு நோய்களின் தாக்கம் எளிதில் நம்மை வந்து சேரும்.

சூரிய ஒளி

சூரிய ஒளி

புற்றுநோய் அபாயம் மனித உடலுக்கு எளிதில் வருவதற்கு சூரிய ஒளியும் முக்கிய காரணம். உடலில் அதிக அளவு சூரிய ஒளி பட்டால் புற்றுநோயின் தாக்கமும் கூடுதலாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

எனவே, சூரியனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

மெடிட்டேரியன் உணவுகள்

மெடிட்டேரியன் உணவுகள்

புற்றுநோய் மருத்துவர்கள் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவுகளை உண்பார்களாம். இது புற்றநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

அதே போன்று சாப்பிடும் உணவில் மஞ்சள், ப்ரோக்கோலி, பூண்டு, போன்ற உணவுகளை அதிகம் சேர்த்து கொள்வார்களாம்.

மூளை திறன்

மூளை திறன்

எப்போதுமே மூளைக்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மூளையின் நியூரான்ஸ்களை மிக சுறுசுப்பாக வைக்கும்.

இதனால் உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்து கொள்ள இயலும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

MOST READ: உடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது! மீறினால் உறவில் சிக்கல் தான்..!

உணவுகள்

உணவுகள்

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை மருத்துவர்கள் அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்வார்களாம். மேலும், அதிக உப்பு மற்றும் அதிக சர்க்கரையை இவர்கள் முழுவதுமாக குறைத்து விடுவார்களாம். கூடவே செயற்கை இனிப்பூட்டிகள், நிறமூட்டிகள் போன்றவற்றை தொடுவது கூட கிடையாதாம்.

பாதுகாப்பற்ற உடலுறவு

பாதுகாப்பற்ற உடலுறவு

புற்றுநோய் மருத்துவர்கள் எப்போதுமே பாதுகாப்பான உறவில் மட்டுமே ஈடுபடுவார்களாம். பலருடன் உறைகள் இன்றி உறவு கொண்டால் அவை ஹச்.ஐ. வி பாதிப்பை உண்டாக்கி விடும்.

ஹச். ஐ. வி வைரஸ் புற்றுநோய் அபாயத்தை மிக எளிதில் நமக்கு உண்டாக்கி விடும். ஆதலால், பாதுகாப்பற்ற உடலுறவை தவிர்த்து விடுங்கள்.

மீன்

மீன்

இன்றைய கால சூழலில் நல்லதை நாம் வெறுத்து ஒதுக்கி தீயவற்றை அதிக அளவில் எடுத்து கொள்கிறோம். அந்த வகையில் அதிக அளவில் இறைச்சி உணவை நாம் சாப்பிடுகின்றோம்.

பெரும்பாலும் இந்த வகை உணவுகளை மருத்துவர்கள் தவிர்த்தே வருகின்றனர். மாறாக மீனை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்கின்றனர். இது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தந்து பலவித பாதிப்பில் இருந்து காக்குமாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

புற்றுநோய் மருத்துவர்கள் தங்களின் உணவில் பதப்படுத்தப்பட்ட உணவுங்களை சேர்த்து கொள்ள மாட்டார்கள்.

காரணம் இவற்றில் உள்ள கார்ச்சினோஜெனிக் தன்மை தான். இந்த பண்புகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் எளிதில் உருவாக கூடும்.

MOST READ: வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

புகைக்கு பகை..!

புகைக்கு பகை..!

புகை பழக்கம் எப்போவாவது இருந்தால் புற்றுநோய் வராது என சிலர் நினைத்து கொள்கின்றனர். ஆனால், இது அப்படி கிடையாது.

புகை பழக்கத்தை சோசியலாக வைத்திருந்தால் கூட ஆபத்து தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை மிக உறுதியாக இவர்கள் கடைபிடிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Cancer Doctors Do to Avoid Cancer

Here we listed some of the things cancer doctors do to avoid cancer.
Desktop Bottom Promotion