For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...!

நமது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று நாம் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி இருக்காது.

|

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள்தான். நமது செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணமாக இருப்பதும் எலும்புகள்தான். நமது உடலின் சின்ன சின்ன அசைவுகளுக்கு கூட நமது எலும்புகள்தான் உதவியாக இருக்கிறது.

Secret Signs Your Bones Are in Trouble

ஆரோக்கியமான வாழ்விற்கு எலும்புகளை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். நமது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று நாம் நினைக்கலாம் ஆனால் உண்மையில் அப்படி இருக்காது. நமது எலும்புகளின் ஆரோக்கிய குறைவு மற்றும் பலவீனத்தை சில அறிகுறிகளின் மூலம் கண்டறியலாம். இந்த பதிவில் உங்கள் எலும்புகள் ஆபத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலவீனமான நகங்கள்

பலவீனமான நகங்கள்

நகங்கள் அடிக்கடி உடைவது உங்களை எரிச்சலடைய வைக்கும், ஆனால் உங்கள் எலும்புகள் வழக்கத்தை விட அதிகமாக உடைந்தால் அது உங்களுக்கான எச்சரிக்கையாகும். உங்கள் நகங்கள் உடைய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் முக்கியமானது கால்சியம் மற்றும் கொலாஜெனின் குறைபாடு ஆகும். கொலாஜன் என்பது உங்கள் தோல், இணைப்பு திசு மற்றும் எலும்புக்கூட்டை பாதுகாக்கும் ஒரு புரதமாகும். கால்சியம் உங்களின் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் ஒன்றாகும். இது இரண்டும் குறையும் போது அது உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும்.

உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல்

உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல்

நீங்கள் அதிக நேரத்தை கணிப்பொறியின் மீது செலவழிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஆஸ்டோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. உடற்பயிற்சி உங்கள் எலும்புகளை மட்டுமின்றி உங்கள் தசைகளையும் வலிமைப்படுத்துகிறது. நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் உங்கள் எலும்புகளுக்கு நீங்கலே செய்துகொள்ளும் நன்மையாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து அலுவலக்திற்குள்ளேயே நடக்கவும்.

ஈறுகளில் விரிசல்

ஈறுகளில் விரிசல்

நீங்கள் ஈறுகளில் விரிசல் ஏற்படுவதை கண்டு பயப்பட வேண்டாம் ஏனெனில் இது வயதான பிறகு நடக்க போவதுதான். வயதாகும் போது உங்களுக்கு தாடை எலும்புகள் விலகி பலவீனமடையும். உங்கள் தாடை எலும்புகள்தான் உங்களின் பலம் ஆகும். அது பலவீனமடையும் போது உங்கள் ஈறுகளில் விரிசல் ஏற்படும். ஈறுகள் விரிசல் ஏற்படுவது உங்கள் பற்கள் விழப்போவதற்கான அறிகுறி ஆகும். அடிக்கடி உங்கள் ஈறுகளின் ஆரோக்கியத்தை பரிசோதித்து கொள்வது நல்லது.

MOST READ: அங்க சாஸ்திரத்தின் படி உங்களின் எந்த வயதில் அதிர்ஷ்டமும், வெற்றியும் உங்களை தேடிவரும் தெரியுமா?

உயர இழப்பு

உயர இழப்பு

எடை குறையும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். உங்கள் எலும்பின் அடர்த்தி குறையும்போது அது உங்கள் குருத்தெலும்புகளில் பாதிப்பு ஏற்படும் போது சில ஆண்டுகளில் இது நடக்க வாய்ப்புள்ளது. உயரம் குறைவது உங்கள் எலும்புகளின் பலவீனத்தை மட்டும் குறிப்பதில்லை, இது உங்கள் முதுகெலும்பை சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைவதன் அறிகுறியாகும்.

மோசமான பிடிமானம்

மோசமான பிடிமானம்

உங்களால் எந்த பொருளையும் அழுத்தி எடுத்து பிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது தூக்க முடியவில்லை என்றாலோ உங்கள் எலும்புகளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த பிரச்சினை மிகவும் அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், உங்கள் இடுப்பு, முதுகெலும்பு, பிடிமானம் போன்றவற்றிற்கு நேரடி தொடர்பு உள்ளது. உங்கள் கைகளில் பலவீனம் ஏற்படுவது உங்கள் எலும்புகளின் பலவீனத்தின் அடையாளமாகும்.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

எலும்புகளில் முறிவு ஏற்படுவது உங்கள் எலும்பு பலவீனமாக இருப்பதற்கான அறிகுறி ஆகும். சாதாரண அடிகளுக்கு கூட பலமான எலும்பு முறிவு ஏற்பட்டால் அது எலும்புகள் ஆபத்தில் இருப்பது உறுதியாகும். ஆஸ்டாபோரோசிஸ் இருந்தால் உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடையாது.

MOST READ: துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா?

தசைப்பிடிப்புகள் மற்றும் எலும்புகளில் வலி

தசைப்பிடிப்புகள் மற்றும் எலும்புகளில் வலி

தசைப்பிடிப்புகள் மற்றும் வலிகள் வயதான காலத்தில் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அவை உங்கள் எலும்புகளின் பலவீனத்தின் அடையாளமாகும். அடிக்கடி வலி மற்றும் தசைப்பிடிப்புகள் ஏற்படுவது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும். இதனால் எலும்புகளில் தேய்மானம் ஏற்படலாம். இதனால் கால் மற்றும் கைகளில் தசைப்பிடிப்புகள் ஏற்படும். கால்களில் பிடிப்புகள் ஏற்பட காரணம் கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசிய குறைபாட்டினால்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: bone calcium
English summary

Secret Signs Your Bones Are in Trouble

If you have these signs your bones are in big trouble.
Story first published: Tuesday, June 25, 2019, 17:45 [IST]
Desktop Bottom Promotion