For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 7 விஷயத்த தினமும் செய்தால் நீங்க 100 வருஷம் உயிர் வாழலாம்!

|

யாருக்காக இருந்தாலும் 100 வருஷம் வரை உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். இதற்காக என்னென்னவோ செய்வார்கள். ஆனால், அவை அத்தனையும் பெரிய அளவில் நம்மை தாக்கம் ஏற்படுத்தாது. சில விஷயங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சில விஷயங்கள் நமது ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கும்.

இந்த 7 விஷயத்த தினமும் செய்தால் நீங்க 100 வருஷம் உயிர் வாழலாம்!

நாம் தினமும் ஒரு சில விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தாலே 100 ஆண்டுகளுக்கு மேல உயிர் வாழலாம் என தற்போதைய அறிவியல் கூறுகிறது. எப்படிப்பட்ட விஷயங்களை செய்து வந்தால் 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி

காபி

கொஞ்சம் நேரம் தூங்கி விட்ட பிறகு காபி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு பிறகு காபி அருந்துவது நல்ல மன நிலையை தரும். இது போன்ற பழக்கத்தை வைத்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

வேலை

வேலை

எப்போதுமே உட்கார்ந்து கொண்டே இருக்காமல் அவ்வப்போது நின்று கொண்டு வேலை செய்தால் அதனால் பல பயன்கள் கிடைக்கும். இதய ஆரோக்கியம், உடல் வலிமை, தசைகளில் வலிமை போன்றவை கூடும். மேலும், உடல் எடை கூடும் பிரச்சினையும் இருக்காது.

MOST READ: பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?

அலாரம்

அலாரம்

பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது. அதாவது, அலாரம் வைத்து எழுந்து கொள்வது தான். அறிவியலின் படி அலாரம் வைத்து எழுந்து கொள்ளாதவர்களே அதிக உடல் ஆரோக்கியத்தை பெறுவார்கள். இந்த பழக்கத்தை கடைபிடித்து வந்தால் சீரான உடல் அமைப்பு உண்டாகும்.

மனநிலை

மனநிலை

மனநிலையை எப்போதுமே குழப்பத்துடனே வைத்து கொள்ளாதீர்கள். அப்போது தான் உங்கள் மன நிலை ஆரோக்கியமாக இருக்கும். மன நிலையை சீராக வைத்து கொள்ள உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து வாருங்கள்.

சுத்தம்

சுத்தம்

எப்போதுமே முடிந்தளவுக்கு சுத்தமாக இருக்க கற்று கொள்ளுங்கள். சுத்தமாக இருந்தால் மட்டுமே அதிக நாள் உயிர் வாழ இயலும். உங்களை மட்டும் சுத்தமாக வைப்பதோடு, சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

உணவு

உணவு

கண்ட உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை மாற்றி கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பழகுங்கள். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மீன் போன்ற உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது தான் சீரான உடல் ஆரோக்கியத்தை தரும்.

MOST READ: மருத்துவர்களிடம் இந்த 10 விஷயத்தையும் மறைக்காதீங்க..! அதுக்கு காரணம் இதுதான்!

தூக்கம்

தூக்கம்

அளவான தூக்கம் தான் ஒரு மனிதனை நீண்ட ஆயுளுடன் வைத்து கொள்ளும். நீண்ட நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியம் கெட்டு விடும். சிலருக்கு இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. எனவே, 7 மணி நேரம் தூக்கமே ஒரு மனிதனுக்கு போதுமானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Scientifically Proven Ways to Stay Healthy

Here we listed some of the scientifically proven ways to stay healthy.
Story first published: Thursday, April 4, 2019, 17:48 [IST]
Desktop Bottom Promotion