For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...!

உப்பு உணவிற்காக மட்டுமின்றி பல்வேறு வடிவங்களில் நமக்கு உபயோகப்படக்கூடியது. சமையலறை முதல் சரும ஆரோக்கியம் வரை என பலவற்றுக்கு உப்பு பயன்படக்கூடும்.

|

உணவில் எத்தனை பொருட்களை சேர்த்தாலும் அதற்கு முழுமையான சுவையை கொடுப்பது என்னவோ உப்புதான். உப்பு சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவது சுவைக்காக மட்டுமல்ல அது வழங்கும் சில ஆரோக்கிய நன்மைகளுக்கும்தான்.

lesser known uses of salt

உப்பு உணவிற்காக மட்டுமின்றி பல்வேறு வடிவங்களில் நமக்கு உபயோகப்படக்கூடியது. சமையலறை முதல் சரும ஆரோக்கியம் வரை என பலவற்றுக்கு உப்பு பயன்படக்கூடும். இந்த பதிவில் உப்பு உங்கள் வாழ்வில் எப்படியெல்லாம் உதவுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காய்கறிகளை கழுவுவதில்

காய்கறிகளை கழுவுவதில்

உப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. விலை மிகவும் குறைவாக இருக்கும் இது உங்களின் காய்கறிகளில் இருக்கும் பாக்டீரியாக்களை எளிதில் வெளியேற்றக்கூடும். நீங்கள் காய்கறிகளை கழுவும் நீரில் சிறிது உப்பை சேர்த்து கழுவவும்.

சருமத்தில் இருக்கும் கறைகளை நீக்கும்

சருமத்தில் இருக்கும் கறைகளை நீக்கும்

பழங்கள் மற்றும் காய்கறிகளால் உங்கள் சருமத்தில் ஏற்படும் கறைகளை நீக்க உப்பு பயன்படும். உங்கள் கைகளில் சிறிது உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்து ஒரு ஸ்டீல் பாத்திரத்தின் மீது தேய்த்தால் எவ்வளவு வலிமையான கரையாக இருந்தாலும் போய்விடும்.

உலோகங்களை சுத்தம் செய்யும்

உலோகங்களை சுத்தம் செய்யும்

செம்பு, பித்தளை போன்ற உலோகங்களை சுத்தம் செய்ய உப்பு உதவும். கரிக்கட்டையுடன் சிறிது உப்பை சேர்த்து பாத்திரத்தின் மீது தேய்த்தால் உலோகத்தில் இருக்கும் எந்த கரையாக இருந்தாலும் போய்விடும்.

MOST READ: இந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க?

எறும்புகளை விரட்டும்

எறும்புகளை விரட்டும்

எறும்பு தொல்லை என்பது சமையலறையில் இருக்கும் மிகப்பெரிய தொல்லையாகும். இதனை உப்பு கொண்டு எளிதில் விரட்டலாம். உப்பை தண்ணீரில் கரைத்து சமையலறை, வடிகால்கள் மற்றும் எறும்பு அதிகமிருக்கும் இடங்களில் இதனை தெளித்தால் எறும்புகள் தொல்லை இருக்காது.

பால் கெடாமல் இருக்க

பால் கெடாமல் இருக்க

இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால் இது உண்மைதான், பாலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதன் மூலம் நீங்கள் பாலை கெட்டுப்போகாமல் தடுக்கலாம்.

துர்நாற்றத்தை அகற்றும்

துர்நாற்றத்தை அகற்றும்

உப்புக்கு துர்நாற்றத்தை விரட்டும் ஆற்றல் உள்ளது.எனவே சிறிதளவு உப்பை கட்டி துர்நாற்றம் ஏற்படும் இடங்களான ஷூ, கழிவறை, அலமாரிகள் போன்ற இடத்தில் வைப்பது துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பூஞ்சைகளை விரட்டும்.

MOST READ: உங்கள் வாழ்க்கையில் சுக்கிரனின் அருள் பூரணமாக கிடைக்க இந்த பொருட்களை தானமாக கொடுங்கள்...!

வலுவான பற்கள்

வலுவான பற்கள்

உங்களின் வழக்கமான பற்பசையில் சேர்த்தோ அல்லது கடுகு எண்ணெயுடன் சேர்த்து ஈறுகளில் மசாஜ் செய்யவும். இது உங்கள் ஈறுகளை பலப்படுத்தவும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும் செய்கிறது. மேலும் இதிலிருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

lesser known uses of salt

Here are some not-so-common uses of salt that you will be glad to discover.
Story first published: Saturday, July 13, 2019, 15:52 [IST]
Desktop Bottom Promotion