For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்

|

டெல்லி: மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2027ஆம் ஆண்டுக்குள் சீனாவை இந்தியா மக்கள் தொகையில் முந்தி விடும் என்கின்றனர். காரணம் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்பாத கிராம மக்கள் ஆணுறை உபயோகிக்கவும் விரும்புவதில்லையாம். இதன் காரணமாகவே மக்கள் தொகை இந்தியாவில் அதிகரிக்கிறது. 15-49 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் ஆணுறை அணியாமல் உறவு கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வயதில் கருத்தரிப்புக்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அந்த வயதில் உறவு கொள்ளும்போது கட்டாயம் ஆணுறை அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே. நமது தாத்தாவிற்கு தாத்தா காலத்தில் இருந்தே ஆணுறையை பயன்படுத்தியுள்ளனர். பால்வினை நோய் என்றால் என்ன என்றே கண்டறியப்படாத காலத்தில், கருத்தரிப்பை தவிர்க்க அவசியமே இல்லாத காலத்திலும் ஆணுறை பயன்படுத்தி வந்துள்ளனர்.

1990களுக்கு பிறகு தான் ஆணுறைகள் பல வகைகளில் கடைகளில் விற்க துவங்கப்பட்டது. ஆணுறை முதன்முறையாக சட்டப்பூர்வமாக கடைகளில், சந்தைகளில் விற்கப்பட்டது அமெரிக்காவில் தான். பொது இடங்களில், பொது மக்களுக்கு முதன்முறையாக ஆணுறை விற்றது இங்கே தான். அடுத்த ஒரே வருடத்தில் ரப்பரால் ஆன ஆணுறை உலகம் முழுக்க விற்க துவங்கியது. பல ஃபிளேவர்கள், லியூப்ரிகென்ட் உடன் மற்றும் டாட்டட் என்று காண்டம் விற்பனை சூடுப்பிடிக்க துவங்கியது. ஊறுகாய் பிளேவர்களில் கூட ஆணுறைகளை விற்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆணுறை அவசியம்

ஆணுறை அவசியம்

ஆணுறை விழிப்புணர்வு

ஆணுறை என்பது நமது நாட்டில் 2000ஆண்டுவரை ஒரு கெட்டவார்த்தை அல்லது தகாத பொருளாக தான் காணப்பட்டது, பிறகு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு பிறகே ஆணுறை பயன்பாடு குறித்த புரிதல் ஏற்பட்டது.

ஆணுறை விழிப்புணர்வு

ஆணுறை விழிப்புணர்வு

ஆணுறை உபயோகிக்க ஆர்வம்

தேசிய அளவில் ஆணுறை குறித்து 54 சதவிகித பெண்களும் 74 சதவிகித ஆண்களும் மட்டுமே விழிப்புணர்வு கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

பாலியல் தொழிலாளர்கள் ஆணுறைகள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆண்டுக்கு 200 முதல் 220 கோடி ஆணுறைகள் விற்பனையாவதாக புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது.

அது கேட்க வெட்கம்

அது கேட்க வெட்கம்

வெட்கப்படும் இந்தியர்கள்

தேசிய அளவில் ஆணுறை வாங்க இந்தியர்கள் பலரும் வெட்கப்படுகின்றனர். எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த அரசே இலவசமாக ஆணுறைகளை விநியோகித்து வருகிறது. நேரில் சென்று ஆணுறைகளை வாங்க தயக்கம் காட்டுவதால் ஆன்லைனில் தொண்டு நிறுவனம் இலவசமாக விற்பனை செய்தது இதனையடுத்து 10 நாட்களில் லட்சக்கணக்கான ஆணுறைகள் விற்றுத்தீர்ந்தன. இதன் மூலம் நேரில் சென்று ஆணுறை வாங்க பலரும் வெட்கப்படுவது தெரியவந்துள்ளது.

அசிங்கமில்லை

அசிங்கமில்லை

காண்டம் அவசியமே

காண்டம் என்பது கர்ப்பத்தடை மட்டுமல்ல நோய் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது. இன்றைக்கும் ஆணுறை என்ற வார்த்தையை பேசுவதைக் கூட ஆபாசமாக நினைக்கின்றனர். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஆணுறையின் தேவை அவசியமான ஒன்று. ஆண் உறுப்பை பாதுகாக்க பண்டைய காலத்தில் இருந்தே பல முயற்சிகளை செய்துள்ளனர்.

என்னென்ன காண்டம்

என்னென்ன காண்டம்

ஆணுறைகளின் வகைகள்

பண்டைய எகிப்தில் பூச்சிகள், வெப்ப நோய்களில் இருந்து பாதுகாக்க தங்களின் ஆணுறுப்பை சுற்றி ஒருவித இலைகளை கட்டிக்கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆணுறுப்பின் முன் பகுதி மூடப்பட்டு குடும்பக்கட்டுப்பாடு உபகரணமாக பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டின் குடலால் செய்யப்பட்ட ஆணுறை கண்டுபிடிக்கப்பட்டது.

காண்டம் காரணம்

காண்டம் காரணம்

எத்தனை வகை ஆணுறைகள்

காண்டம் எனப்படும் ஆணுறையை தயாரித்த மருத்துவரின் பெயரே காண்டம். அதன் பெயரிலேயே காண்டம் என்று அழைப்பதாக கூறினாலும்

லத்தின் மொழியில் காண்டஸ் என்றால் கிண்ணம் என்று பொருள். ஆணுறை கிண்ணம் போல இருப்பதால் காண்டம் என்று வந்திருக்கலாம்.

ஆமை ஓடுகள், விலங்கின் கொம்புகளைக் கூட ஆணுறைகளாக அணிந்துள்ளனர். சீனர்கள் எண்ணெய் தடவிய பட்டுத்துணிகளை ஆணுறைகளாக கட்டிக்கொண்டனர். ரோமானியர்கள் இதற்காகவே ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தனர் என்கிறது வரலாறு.

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

ஆணுறையின் பயன்பாடு

மக்கள் தொகை அதிகரிப்பு, பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்ற நோய்கள் பாதிப்புகள் அதிகரிக்கவே காண்டம்கள் பயன்பாடு அதிகரித்தது. இன்றைக்கு திருமணமான ஆண்கள் பலரும் மனைவியின் கருத்தரிப்பைத் தள்ளிப்போட ஆணுறையை சிறந்த கருத்தடுப்பு சாதனமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான ஆண்கள் உடல் உறவில் திருப்தி கிடைக்காத காரணத்தால் பலர் இதனைப் பயன்படுத்த விரும்புவதில்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.

ஆணுறை கட்டாயம்

ஆணுறை கட்டாயம்

உறவு கொள்ள ஆணுறை

தேசிய குடும்பநல ஆய்வு அமைப்பு 2015-16-ம் ஆண்டுகளில் நடத்திய ஆய்வின்படி 15-49 வயதுக்குட்பட்ட இந்திய குடிமக்கள் ஆணுறை அணியாமல் உறவு கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வயதில் கருத்தரிப்புக்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அந்த வயதில் உறவு கொள்ளும்போது கட்டாயம் ஆணுறை அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆணுறை பயன்பாடு

இந்தியாவில் ஆணுறை பயன்பாடு

வட இந்தியர்கள் விரும்பவில்லை

ஐநா அறிக்கைப்படி அண்டை நாடுகளான பாகிஸ்தான், மால்டெவிஸ், ஈரான், இலங்கை, சீனா ஆகியவற்றில் ஆணுறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. ஆக, இந்தியாவில்தான் ஆணுறை குறித்த விழிப்புணர்வு மிக மிகக் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் ஆணுறை அதிகமாகப் பயன்படுத்தப் படுவதில்லை என்கிறது இந்த ஆய்வு. தெலுங்கானா மாநிலத்தில் 0.2 சதவீத மக்கள் மட்டுமே ஆணுறை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக பஞ்சாப், ஹரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் 73 சதவீத ஆண்கள் ஆணுறை அணியாதது தெரிய வந்துள்ளது.

ஆணுறை பாதுகாப்பு

ஆணுறை பாதுகாப்பு

ஆணுறை அவசியம்

ஆண்களை எச்ஐவி உள்ளிட்ட கொடிய பாலியல் நோய்த்தொற்றுகளில் இருந்து ஆணுறை காக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆணுறை அணிவதை 94.4 சதவீத இந்திய ஆண்கள் வெறுக்கிறார்களாம். ஆணுறை பற்றி பல விளம்பரங்கள் இன்றைக்கு சுண்டி இழுக்கின்றன. பிரபல நடிகைகள் கூட ஆணுறை விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஆணுறை அணிவதில் பலருக்கும் விருப்பம் இல்லாமலேயே இருக்கிறது. இப்படியே போனால் 2027ஆம் ஆண்டில் சீனாவை மக்கள் தொகையில் இந்தியா முந்திவிடுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian men have a problem they hate condoms

Indian men don't use condom.This selfish and uncaring attitude shifts the burden of family planning almost exclusively on women.Indian men are not only reluctant to use condoms but their reluctance is even stronger towards going for sterilisation which is a very effective method of family planning
Story first published: Thursday, July 18, 2019, 11:00 [IST]