For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...!

|

இன்று உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோய் என்றால் அது புற்றுநோய்தான். ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளது. இதில் பலரையும் தாக்கும் ஒரு புற்றுநோயென்றால் அது நுரையீரல் புற்றுநோய்தான்.

Smart Habits That Can Prevent Lung Cancer

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. நமது சுற்றுசூழல் பிரச்சினைகள், உணவுப்பழக்கங்கள், தவறான பழக்கவழக்கங்கள் என நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம். இந்த பதிவில் உங்களை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பழக்கங்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைபிடிக்க தொடங்காதீர்கள்

புகைபிடிக்க தொடங்காதீர்கள்

நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க புகைப்பிடிக்க தொடங்காதீர்கள். ஒருவேளை நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் உடனே அதனை நிறுத்திவிடுங்கள். நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 90 சதீவீதம் புகைபிடிப்பதால்தான் ஏற்படுகிறது. புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 23 மடங்கு அதிகமாகும், அதேசமயம் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட நுரையீரல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு 13 மடங்கு அதிகமாகும். 25 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிக்கும், அதேசமயம் 45 வயது முதல் 45 வயது வரை இருபவர்களுக்கு ஆயுட்காலம் 6 ஆண்டுகள் அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஆய்வு கூறுகிறது.

இரண்டாம் நிலை புகை பகுதிகளை தவிர்க்கவும்

இரண்டாம் நிலை புகை பகுதிகளை தவிர்க்கவும்

இரண்டாம் நிலை புகை பகுதிகள் புகைப்பிடிக்கும் அளவிற்கு ஆபத்தானதல்ல. இருப்பினும் நீங்கள் தொடர்ந்து புகையை சுவாசிக்கும் போது அது உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் சிகரெட் புகையை சுவாசிப்பதாலும் உருவாகும். இரண்டாம் நிலை புகை பகுதிகள் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை 20 முதல் 30 சதவீதம் அதிகரிக்கும்.

MOST READ: கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்...!

வீட்டில் ரேடான் சோதனை செய்யுங்கள்

வீட்டில் ரேடான் சோதனை செய்யுங்கள்

நுரையீரல் புற்றுநோய் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று ரேடான் ஆகும். இது வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் நிறமற்ற மற்றும் மனமற்ற வாயு ஆகும். இது பலரின் வீட்டிலும் உருவாகக்கூடிய ஒரு வாயு ஆகும். இது வயர்கள், பைப்கள் மூலம் சுவர்களில் இருக்கும் விரிசல்கள் மூலமாக வீட்டிற்குள் நுழையக்கூடும். அதிகமாக அடித்தளத்தில் இருப்பவர்கள் இந்த ரேடான் வாயுவை அதிகம் சுவாசிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அதிகமாகும்.

தீங்கை ஏற்படுத்தும் கார்சினோஜென்ஸ்

தீங்கை ஏற்படுத்தும் கார்சினோஜென்ஸ்

அதிகமாக தீய கார்சினோஜென்களை உற்பத்தி செய்யும் இடங்களான கட்டுமான இடம், கதிர்வீச்சுகள் வெளிப்படும் இடம் போன்ற இடங்களில் நீங்கள் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் வேலை செய்யும்போது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். உங்கள் பணியிடங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

உணவுப்பழக்கவழக்கம்

உணவுப்பழக்கவழக்கம்

நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய சூப்பர் உணவுகள் இல்லை என்றாலும், ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோயை சமாளிப்பது எளிதாகும். வைட்டமின் ஈ அதிகமிருக்கும் உணவுகளான பாதாம், அவகேடா, மாம்பழம் போன்றவற்றை சாப்பிடுங்கள். கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டையும் மிதமான அளவில் எடுத்து கொண்டு போதுமான அளவு நீர் குடியுங்கள். சரியான உணவுகளை சாப்பிட்டு சிகரெட் புகைக்காமல் இருந்தால் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

MOST READ: இந்த குணங்களை வளர்த்து கொள்ளாமல் திருமணம் செய்தால் உங்கள் திருமண வாழக்கை நிச்சயம் நரகமாகிவிடும்...!

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆரோக்கியமான உணவு மற்றும் சிகரெட் பிடிக்காமல் இருக்கும் போது அதனுடன் உடற்பயிற்சியும் சேரும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். மருத்துவர்களின் கருத்துப்படி வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். உடற்பயிற்சி என்றால் வீட்டிற்குள்ளேயே செய்வது மட்டுமல்ல, நடைப்பயிற்சி, ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits That Can Prevent Lung Cancer

These smart habits can prevent you from lung cancer.
Story first published: Saturday, June 8, 2019, 17:01 [IST]
Desktop Bottom Promotion