For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பானியர்கள் உலக நாடுகளில் இருந்து மறைத்துள்ள அந்த 9 இரகசியங்கள் என்னனு தெரியுமா..?

|

"மேட் இன் ஜப்பான்" இந்த வாசகத்தை பல மின் சாதனங்கள் முதல் சிறிய பொம்மை வரை நாம் பார்த்திருப்போம். எவ்வளவோ போர்கள், நிலநடுக்கம், சுனாமி... இப்படி பலவித இயற்கை சீற்றங்களும், மனித ரூபத்தில் வர கூடிய அழிவுகளையும் எதிர்த்து தாங்கி நிற்கும் நாடு ஜப்பான். வரலாற்று ரீதியாக பல சாதனைகளை செய்து, பல நாடுகளுக்கும் முன்னோடியாக ஜப்பான் திகழ்ந்து வருகிறது.

ஜப்பானியர்களின் இவ்வளவு வலிமைக்கும், திறமைக்கும் என்ன காரணம் என பல நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. அதிக ஆயுளுடன் வாழும் மக்களும் இந்த நாட்டில் தான் இருக்கின்றனர். மற்ற நாடுகள் முதலில் வர வேண்டும் என்று எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் ஜப்பானை முந்த முடிவதில்லை.

இது போல பல விஷயங்கள் ஜப்பானியர்களின் பெருமையை பறைசாற்றும். ஒரே நாளில் ஜப்பானியர்கள் இந்த நிலைக்கு வந்து விட்டார்களா..? இல்லை..! ஜப்பானியர்கள் இந்த ஹிமாலய உயரத்திற்கு வர அவர்களுக்கு இந்த 9 விஷயங்கள் தான் துணையாக இருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலாச்சாரம்

கலாச்சாரம்

மற்ற நாட்டினரின் கலாசாரத்தை விட ஜப்பனீயர்களின் கலாசாரம் முற்றிலுமாக வேறுபட்டது. உணவு முறையிலும் சரி, ஒழுக்கத்திலும் சரி, ஜப்பானியர்கள் தனித்து நிற்கின்றனர்.

ஜப்பானியர்கள் அதிக காலம் வாழ்வதற்கு அவர்கள் உண்ண பயன்படுத்தும் அந்த 2 குச்சிகளும் முக்கிய காரணம். இதிலும் ஜப்பானியர்கள் ஒரு இரகசியத்தை ஒளித்து வைத்துள்ளனர்.

காரணம்..?

காரணம்..?

இவர்கள் உணவை உண்ண பயன்படுத்தும் அந்த 2 குச்சிகளை சாப்ஸ்டிக்ஸ் என்பார்கள். இதை பயன்படுத்துவதால் உடல் எடை கூடாது, செரிமான கோளாறுகள் உண்டாகாது, மூளையின் வளர்ச்சி கூடும். இதனால் தான் ஜப்பானியர்கள் நோய்நொடி இல்லாமல் அதிக ஆயுளுடன் வாழ்கின்றனர்.

பாட்டில்

பாட்டில்

ஜப்பனீயர்கள் எல்லோர் மீதும் அதிக பாசம் கொண்ள்ளனர் என்பதை இந்த பாட்டிலில் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் நிரூபிக்கின்றன. இவை பார்வையற்றவர் பயன்படுத்த கூடிய பிரெய்லி என்கிற எழுத்து முறையாகும். பார்வையற்றவர்களும் இந்த உலகில் உள்ள அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த முறை.

Image courtesy

தட்டுகள்

தட்டுகள்

ஜப்பானியர்கள் பெரும்பாலும் சின்ன சின்ன தட்டுகளையே பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் உணவை சிறிது சிறிதாக பிரித்து உண்டால், மிக எளிதில் ஜீரணம் அடைந்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்குமாம். எப்போதும் சிறிய அளவிலே சத்தான உணவுகளை இவர்கள் உணவார்கள்.

MOST READ: இந்த மாதம் காதலையும் சவால்களையும் வெல்லபோகும் ராசிக்காரர் நீங்கள் தான்..!

போராட்டம்

போராட்டம்

ஜப்பானியர்கள் பின் பற்ற கூடிய போராட்ட முறை மிக விசித்திரமானது. உதாரணத்திற்கு போக்குவரத்து போராட்டம் நடந்தால் ஜப்பானில் பேருந்துகள் வழக்கம் போல அதே அரசு ஓட்டுனரால் ஓட்டப்படும்.

இதில் ஆச்சரிய படுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா..? நிறைய இருங்குங்க. அதாவது, போக்குவரத்து போராட்டத்தின் போது வண்டிகள் இயங்கினாலும், இலவசமாகவே ஓட்டுவார்களாம். ஏனெனில், இவர்கள் தண்டிக்க விரும்புவது சம்பந்தப்பட்ட அரசை தான், மக்களை அல்ல..!

Image Courtesy

கடல் உணவுகள்

கடல் உணவுகள்

ஜப்பானியர்களின் வாழ்வில் அதிகமான இறைச்சி உணவுகளை சாப்பிட மாட்டார்களாம். இவர்கள் உண்ணும் பலவித உணவுகளும் கடல் உணவுகளாகவே இருக்கும். குறிப்பாக மீனை தினமும் சாப்பிட்டு வருவார்கள்.

இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் அபாயத்தை குறைத்து விடும். இதனால் தான் ஜப்பானியர்கள் புற்றுநோய் தாக்குதல் அதிகம் இல்லாமல் நீண்ட நாள் வாழ்கின்றனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

இந்திய அரசு மருத்துவமனைகளின் நிலை நம் அனைவருக்குமே நன்கு தெரிந்தது தான். ஆனால், ஜப்பானின் மருத்துவமனைகள் செய்யும் இந்த காரியத்தை பார்த்தால் வாயை பிளப்பீர்கள்.

ஆம், ஜப்பானிய மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவசமாகவே சத்தான உணவுகளை அவர்களே சமைத்து வழங்குவார்கள். இவற்றில் சத்தான உணவுகள் மட்டுமே உள்ளது என சுகாதார துறையே சான்று வழங்கி உள்ளது.

சுத்தம்

சுத்தம்

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர் போன்றவர்களுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எவ்வ்ளவு பெரிய ரசிகர்களாக இருந்தாலும் ஜப்பான் ரசிகர்களை முந்த முடியாது.

அப்படி என்ன அவர்கள் செய்து விட்டார்கள் என்ற கேள்விக்கு பதில் இதோ இந்த புகைப்படும் தான். FIFA உலக கோப்பை முடிந்ததும் முழு மைதானத்தையும் ரசிகர்களே சுத்தம் செய்தனர். "நாட்டின் சுத்தம் ஒவ்வொரு குடிமகன்களுக்கு உண்டு" என்பதை இது பறைசாற்றுகிறது.

MOST READ: ஆண்கள் மருத்துவரிடம் கேட்க தயங்கும் 'அந்த' அந்தரங்கமான 10 கேள்விகள் என்னென்ன..?

Image Courtesy

நொதித்த உணவுகள்

நொதித்த உணவுகள்

இந்தியர்கள் பெரும்ப்பாலும் வறுத்த பொரித்த உணவுகளையே சாப்பிடுவோம். ஆனால், ஜப்பானியர்கள் நொதிக்க வைத்த உணவுகளையே உண்பார்கள்.

இப்படி நொதிக்க வைத்த உணவுகள் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வியாதிகள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாமாம்.

இயற்கை

இயற்கை

ஜப்பானிய மருத்துவத்தில் இயற்கை வழி மருத்துவம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடலும் இயற்கையும் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளதை இவர்களின் கலாசாரத்தின் வெளிப்பாடாக உள்ளது. அதே போன்று அன்றாடம் உடற்பயிற்சி செய்யவும் மறக்க மாற்றார்கள்.

மேற்சொன்ன காரணங்களால் தான் இன்று வரை ஜப்பானியர்கள் உச்சத்தில் உள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Food Lessons From Japan That Will Make An Indian Super Healthy

This article about food lessons from Japan that will make an Indian super healthy.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more