For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயரமாக இருப்பது நல்லதா? உயரம் குறைவாக இருப்பது நல்லதா?

ஆண், பெண் இருவரின் உயரமும் பெரும்பாலும் அவர்களின் மரபணுக்களை பொறுத்தே உள்ளது. இந்த சூழ்நிலையில் உயரம் அதிகமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? அல்லது உயரம் குறைவாக உள்ளவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி

|

வாழ்க்கையில் முன்னேறவோ, சாதிக்கவோ நிறம், முகம், உயரம் என எதுவும் காரணமாக இருக்க போவதில்லை. நமது முன்னேற்றத்திற்கு காரணம் நமது முயற்சியும், ஆர்வமும்தான். ஆனால் பொதுப்படையாக பார்க்கும்போது சிலரின் உயரத்தை வைத்து அவர்களின் குணங்களையும், திறமையையும் அளவீடு செய்யும் பழக்கம் நம்மிடம் உள்ளது. சொல்லப்போனால் உயரம் என்பது மற்றவர்களை உடலளவில் கவர முக்கியமான ஒன்றாக கூட கூறப்படுகிறது.

Which is better to be Tall or Short?

ஆண், பெண் இருவரின் உயரமும் பெரும்பாலும் அவர்களின் மரபணுக்களை பொறுத்தே உள்ளது. இந்த சூழ்நிலையில் உயரம் அதிகமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? அல்லது உயரம் குறைவாக உள்ளவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளதா? என்ற கேள்வி பலரின் மனதிலும் உள்ளது. இருவருமே அவரவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இருவருக்குள்ளேயும் ஒரு எதிர்மறை எண்ணம் இருக்கும். இந்த பதிவில் உயரமாய் இருப்பது மற்றும் உயரம் குறைவாய் இருப்பது இவற்றின் சாதக, பாதகங்களை பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரமாய் இருப்பதால் கிடைக்கும் பயன்கள்

உயரமாய் இருப்பதால் கிடைக்கும் பயன்கள்

உயரமாய் இருப்பவர்கள் அதிக புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள் என்ற பொதுக்கருத்து ஒன்று நிலவி வருகிறது. இது ஒருவகையில் உண்மையும் கூட. 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் உயரமாக இருப்பவர்கள் உயரம் குறைவாய் இருப்பவர்களை விட அதிக புத்திகூர்மை மிக்கவர்கள் என நிரூபிக்கப்பட்டது. ஆனால் இதனை உபயோகப்படுத்துவது அவரவர் தனிப்பட்ட முயற்சியை சார்ந்தது.

சர்க்கரை நோய் ஆபத்து குறைவு

சர்க்கரை நோய் ஆபத்து குறைவு

இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி சமீபத்தில் செய்த ஆராய்ச்சியில் உயரம் அதிகமாக உள்ள பெண்களுக்கு உயரம் குறைவாய் உள்ள பெண்களை விட சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு 15 சதவீதம் குறைவாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

டிமென்சியா வாய்ப்பு குறைவு

டிமென்சியா வாய்ப்பு குறைவு

உயரம் குறைவாக உள்ளவர்களை விட உயரம் அதிகமாக உள்ளவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் வாய்ப்பு குறைவு. உயரத்திற்கும், டிமென்சியாவிற்கும் உள்ள தொடர்பு பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக உள்ளது. அதற்காக உயரம் குறைவாக உள்ள அனைவருக்கும் டிமென்சியா ஏற்படும் என்று அர்த்தமில்லை. உயரமானவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் வாய்ப்பு குறைவு அவ்வளவுதான்.

இதய நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு

இதய நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு

உங்கள் உயரம் உங்களை அட்ரியல் பைபிரில்லேஷன் போன்ற இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும். ஆய்வுகளின்படி உயரம் அதிகமாக உள்ளவர்கள் மாரடைப்பு மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

விளையாட்டு

கூடைப்பந்து, தொடர் ஓட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு உங்களை விட சிறந்தவர்கள் யாருமில்லை. உங்களின் உயரமான கால்கள் உங்களை வெற்றிக்கோட்டை எளிதாக தாண்ட உதவும்.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

ஆரோக்கிய நன்மைகளை தவிர்த்து உயரமாய் இருப்பது உங்களுக்கு பல வகைகளில் நன்மையை தருகிறது. உயரத்தில் உள்ள பொருட்களை எளிதில் எடுப்பது, செல்பி எடுப்பதில் தொடங்கி பெண்களை எளிதாய் கவருவது வரை உங்களின் உயரம் பல நன்மைகளை பெற்றுத்தரும்.

உயரம் குரைவாக இருப்பதால் கிடைக்கும் பயன்கள்

உயரம் குரைவாக இருப்பதால் கிடைக்கும் பயன்கள்

உயரம் குறைவாய் இருப்பவர்கள் அனைத்து இடங்களிலும் முன்னணியில் இருப்பார்கள். இது அவர்களின் உயரத்தினால் மட்டுமல்ல, அவர்களின் தன்னம்பிக்கையாலும்தான். உயரமாய் குறைவாய் இருப்பவர்கள் எப்பொழுதும் நம்பிக்கைகுரியவராக இருப்பார்கள் என்று உளவியாளாலர்கள் கூறுகிறார்கள்.

உடை

உடை

உயரம் குறைவாய் உள்ளவர்களுக்கு உடை என்பது ஒரு பிரச்சினையே கிடையாது. அவர்களால் எந்த அளவில் உள்ள உடையையும் அணிய முடியும். உயரம் அதிகம் உள்ளவர்களால் இதனை செய்ய முடியாது.

வயதான அறிகுறிகள்

வயதான அறிகுறிகள்

உயரம் குறைவாக உள்ளவர்கள் அவர்களின் வயதை விட குறைவாக வயதானது போலவே காட்சியளிப்பார்கள். உயரம் குறைவாக உள்ளவர்களுக்கு வயதான அறிகுறிகள் தாமதமாகவே தோன்றும்.

புற்றுநோய்

புற்றுநோய்

உயரம் குறைவாக உள்ளவர்களின் ஆயுட்காலம் ஆனது உயரமானவர்களை விட 11 சதவீதம் அதிகம். அதேசமயம் உயரம் குறைவானவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைவு.

நகைச்சுவை உணர்வு

நகைச்சுவை உணர்வு

உளவியல்ரீதியாக உயரம் குறைவானவர்கள் அதிக நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள். அதேசமயம் மனதளவில் உறுதியானவர்களாகவும் எந்த விஷயத்தையும் துணிச்சலாக எதிர்கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Which is better to be Tall or Short?

Our height is a simple biological fact that we can do little to change, yet it may be influencing our destiny in ways we didn’t realise. Being tall or small, both things have some benefits.
Story first published: Tuesday, September 4, 2018, 17:47 [IST]
Desktop Bottom Promotion