மாதவிலக்கு காலங்களில் அந்த விஷயத்தை செய்யலாமா?... செஞ்சா என்ன ஆகும் தெரியுமா?

Posted By: Sugumar A D
Subscribe to Boldsky

மாதவிலக்கு காலங்களில் அந்த விஷயத்தை செய்யலாமா?... செஞ்சா என்ன ஆகும் தெரியுமா? என்று கேட்ட உடனேயே நீங்கள் எதைப் பற்றி நினைக்கிறீர்கள் என்பது புரிகிறது. எப்போதும் அதே நினைப்பில் இருந்தால் இப்படித்தான். ஆனால் நாங்க சொல்ல வந்தது அதுவே இல்ல. அப்போ வேறென்னன்னு தானே கேட்கிறீங்க. இதோ...

health

மாதவிலக்கின்போது, பேசுவது, வேலை பார்ப்பது போன்றவற்றை எப்போதும் போல மேற்கொள்ளலாம். ஆனால் மாதவிலக்கு காலங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வது சரியா?...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மருந்து மாத்திரைகள் மட்டும் போதுமானது கிடையாது. இவற்றுடன் கூடவே உடற்பயிற்சி செய்வது என்பது அத்தியாவசியமாகி வருகிறது. உடற்பயிற்சி என்றால் உடனே நல்ல ஜிம்மை தேடி அலைய வேண்டியதில்லை. காலை, மாலை நடைபயிற்சியும், அதோடு ஒட்டிய சில கிரவுண்ட் எக்ஸர்சைஸ் சிலவற்றை செய்துவந்தாலே உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். உடல் பருமனாக இருப்பவர்கள் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது கிடையாது. மெலிந்த உடல் கொண்டவர்களும் உடற்பயிற்சி செய்தால் நீண்ட ஆயுள் நிச்சயம் கிடைக்கும் என்று மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர். பல நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் அரணாக உடற்பயிற்சி இருக்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்து தப்ப உடற்பயிற்சி பல விதங்களில் நன்மை அளிக்கின்றன.

நன்மைகள்

நன்மைகள்

பொதுவாகவே உடற்பயிற்சி செய்ய தொடங்கிவிட்டால் சுறுசுறுப்பு தானாக வந்து நம் உடலில் தொற்றிக் கொள்ளும். உடற்பயிற்சி செய்யும் நாள் முழுவதும் இதை நம்மால் உணர முடியும். அதோடு காலை நேரத்தில் நடைபயிற்சியில் மாசற்ற காற்றை சுவாசிப்பதோடு, தாவரங்கள், மரங்களின் இருந்து வெளியேறும் சுத்தமான ஆக்சிஜனை நாம் சுவாசிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும்.

சீராகும் ரத்த அழுத்தம்

சீராகும் ரத்த அழுத்தம்

உடற்பயிற்சியால் நமது உடலின் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருக்கும். ரத்த குழாயின் ஆரோக்கியம் காக்கப்படும். அதோடு மன அழுத்தத்துக்கு குட்பை சொல்லிவிடலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடுவதால் இதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

கொழுப்பு குறையும்

கொழுப்பு குறையும்

நமது உடலில் நல்ல கொழுப்பு, தீய கொழுப்பு என்று இரு வகை உள்ளது. நல்ல கொழுப்பான ஹெச்டிஎஸ் ரத்தத்தில் உள்ள தீய கொழுப்பான எல்டிஎல்ஐ.யை அகற்றும் சக்தி கொண்டது. உடற்பயிற்சி செய்தால் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். தீய கொழுப்பும் குறைந்து உடல் எடை குறையும். ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.

எலும்பு வலுபெறும்

எலும்பு வலுபெறும்

தொடர் உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உறுதிபடும். முதுமை காரணமாக எலும்பு தேய்மானம் மூலம் ஏற்படும் கோளாறுகளை தடுப்பதற்கு உடற்பயிற்சியும் ஒரு காரணமாக அமையும். கால்சியத்தை எலும்புகள் கிரகித்து கொள்ள உடற்பயிற்சி பெரும்பாலும் உதவும்.

ஆழ்ந்த தூக்கம்

ஆழ்ந்த தூக்கம்

உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வருவோருக்கு தூக்கமின்மை என்பது இருக்கவே இருக்காது. இரவு நேரங்களில் படுத்தவுடன் தூங்கும் பாக்கியம் கிடைத்துவிடும். தூக்க மாத்திரைகளை விழுங்கி செய்ற்கையாக தூங்குவதை தவிர்த்து உடற்பயிற்சியால் கிடைக்கும் ஆழ்ந்த தூக்கம் மறுநாளில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

உடல் இழைக்கும்

உடல் இழைக்கும்

பெரும்பாலானவர்கள் நாக்குக்கு அடிமையாகிவிடுவார்கள். அவர்களால் எதை வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும். நாக்கு ருசியை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. திண்பண்டங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பருமனை தடுக்க முடியாது. இதற்கு உடற்பயிற்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடற்பயிற்சி மூலம் அதிகளவு கலோரிகளை எரித்துவிடலாம். இதனால் உடல் பருமன் தடுக்கப்படும். உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருக்கலாம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுவதால் உடல் மெலியும் வாய்ப்பு கிடைக்கும்.

உகந்த நேரம்

உகந்த நேரம்

உடற்பயிற்சிக்கு உகந்த நேரம் காலை நேரம் தான். காலை உடற்பயிற்சி என்பது உடலின் வளர்சிதை மாற்றத்தைஅதிகரிக்க செய்யும். இதனால் அன்றைய தினம் முழுவதும் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்ச்சியோடு இருக்கும். காலை உடற்பயிற்சி மேற்கொள்வோர் வேலையை திறமையுடனும், அமைதியுடனும் செய்வதை பார்க்க முடியும்.

செய்யும் நேரம்

செய்யும் நேரம்

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய இயலாதவர்களுக்கு என்ன தான் வழி?. வேலை செய்யும் சூழலுக்கு ஏற்பட பலருக்கு காலை நேரம் உடற்பயிற்க்கு ஒத்துவராது. இரவு பணி செல்லுபவர்கள், அதிகாலை பணிக்கு செல்பவர்களால் காலையில் உடற்பயிற்சி செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. காலையில் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின்னரோ அல்லது மதியம் சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபடலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உணவுக்கு பின்னர் சுமார் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை இடைவெளி விடுபது வயிறு உபாதைகளை தடுக்கும்.

மாலை, இரவு நேரங்களில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். சாப்பாட்டு முன்பே இதை செய்வது நல்லது. உடற்பயிற்சியின் போது திரவ உணவு அனுமதிக்கப்படுகிறது.

செய்யக் கூடாத நேரம்

செய்யக் கூடாத நேரம்

உடல்நலம் இன்றி இருக்கும் போதும் உடற்பயிற்சி செய்வதை ஒத்திவைக்க வேண்டும். சிறிய தலைவலி, காய்ச்சல், சளி, களைப்பு ஆகிய நேரங்களில் தவிர்த்துவிடலாம். முதல் நாள் இரவு அதிகளவில் மது குடித்திருந்தால் கண்டிப்பாக உடற்பயிற்சி கூடாது. முறையான தூக்கம் இல்லாதவர்களும் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை

அதிகாலையில் உடற்பயிற்சியின்போது டீ, காப்பி குடிப்பது, உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழச்சாறு, முட்டை, மில்க்ஷேக், சீஸ், இறைச்சி பொதி செய்த தானியங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிடக் கூடாது. உடற்பயிற்சி மூலம் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. எனினும் அதை முறையாக செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு பயிற்சியாளரின் ஆலோசனை பெற்று செய்தால் பல பக்க விளைவுகளை தவிர்த்துவிடலாம். உடற்பயிற்சியின் போது ஏற்படும் சிறு சிறு உடல் கோளாறுகளை அவர்களால் தான் உடனடியாக சரி செய்ய முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Exercise During Your Period

Generally speaking, working out during your period is a good thing, because exercise helps relieve period-related annoyingness like anxiety, fatigue, and headaches. But there’s one outlier
Story first published: Monday, April 2, 2018, 18:30 [IST]