For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன்? என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்?

குறிப்பிட்ட வயதுக்குப் பின் எலும்பு முறிவு ஏற்படக் காரணம் என்ன, அது எப்படி வாழ்க்கையை பாதிக்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

|

கீழே விழுவது, வீக்கம் போன்றவற்றின் காரணமாக உண்டாகும் சிறிய காயங்களால் ஏற்படும் எலும்பு முறிவு எலும்புப்புரை நோய்க்கு அறிகுறியாக இருக்கலாம். வாழ்வின் எல்லா கட்டத்திலும் ஆரோக்கியமான எலும்புகளின் தேவை உள்ளது.

What Causes Bone Loss

ஆரோக்கியமான எலும்புகள் ஆரோக்கியமான உடலுக்கு அஸ்திவாரம். எலும்பு இழப்பு அல்லது எலும்புப்புரை பாதிப்பு என்பது எலும்புகளைப் பாதிக்கும் ஒரு நோயாகும். ஒரு காலகட்டத்தில் எலும்புப்புரை நோய் உள்ளவர்கள் தங்கள் எலும்பு அடர்த்தியை இழக்கின்றனர். எலும்புப்புரை நோய் என்பது வயதானவர்களை கடுமையாக தாக்கும் ஒரு நோயாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புகள்

எலும்புகள்

மிகவும் பலவீனமாகி உடையத் தொடங்குவதால் எலும்பு முறிவிற்கான அபாயம் அதிகரிக்கிறது. இயற்கையாகவே எலும்புகளில் ஓட்டையும் இடைவெளியும் இருக்கும். அதுவே, எலும்புப்புரை நோய் உள்ளவர்களுக்கு இந்த இடைவெளியும் துவாரமும் சற்று அதிக அளவில் இருக்கும். எலும்பு முறிவு உண்டாகும் வரை ஒருவருக்கு எலும்புப்புரை நோய் இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக இந்த நோய் உள்ளுக்குள்ளேயே அமைதியாக வளர்ச்சி அடையும்.

MOST READ: உங்க பிறந்த நட்சத்திரத்த சொல்லுங்க... உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு சொல்றோம்...

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

எலும்பு முறிவிற்கு முன் இதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாது. கீழே விழுவதால் அல்லது வீக்கம் ஏற்படுவதால் உண்டாகும் சிறிய காயம் மற்றும் இதனால் ஏற்படும் எலும்பு முறிவு, எலும்புப்புரை நோய்க்கான அறிகுறியாகும். ஆனால் சில பொதுவான அறிகுறிகள் இந்த நோய்க்கு உண்டு. அவை, முதுகு தண்டு வளைவு அல்லது உயரம் குறைவது. இந்த நோயை முற்றிலும் தடுப்பது என்பது இயலாத காரியம் என்றாலும், உங்கள் வாழ்வியலில் சில ஆரோக்கியமான மாற்றங்களை முன்னெடுத்து வைப்பதன் மூலம் ஓரளவிற்கு இதன் பாதிப்பை குறைக்க முடியும்.

ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வலிமையான எலும்புகள் மிகவும் அவசியம். ஆகவே எலும்புப்புரை நோயைக் கட்டுப்படுத்த 5 எளிய வழிகள் கீழே உள்ளன. அதனை இப்போது காண்போம்.

வழக்கமான உடற்பயிற்சி

வழக்கமான உடற்பயிற்சி

எலும்புப்புரையை தடுக்க ஒரு மிக முக்கியமான செயல் உடற்பயிற்சி செய்வது. நீச்சல், ஏரோபிக்ஸ், ஜூம்பா, நடைபயிற்சி, ஜாக்கிங் போன்றவை நல்ல தீர்ர்வைத் தரும். இதனை நாள்தோறும் கடைபிடிப்பது நல்ல பலனைத் தரும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

சில வாழ்வியல் மாற்றங்கள் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தி எலும்புப்புரை அபாயத்தை குறைக்க உதவுகிறது. கால்சியம், புரதம், காய்கறிகள், வைடமின் டி, மற்றும் வைடமின் கே ஆகியவை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் வலிமையான எலும்புகள் உருவாகிறது. எலும்புகள் ஒரே நாளில் வலிமை அடையாது. எலும்புகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, இளமை பருவத்தில் வலிமை அடைந்து இருபது களின் மத்தியில் எலும்புகள் உச்ச கட்ட அடர்த்தியை எட்டுகிறது. ஆகவே இளமை பருவத்திலேயே வலிமையான எலும்புகளை அடைவதற்கான ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதால் வலிமையான எலும்புகள் கிடைக்கும்.

MOST READ: வைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு மஞ்சள் எப்படி சாப்பிட வேண்டும்?

ஆரோக்கியமான உடல் எடை

ஆரோக்கியமான உடல் எடை

ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுடன் கூடுதலாக ஆரோக்கியமான உடல் எடையும் அவசியம். எடை குறைவாக இருப்பதால் கூட எலும்புப்புரை அல்லது எலும்பு அடர்த்தி குறைவு நோய் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும்.

கால்சியம் சத்து

கால்சியம் சத்து

எலும்பு வலிமை பற்றி பேசும்போது கால்சியத்தை பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. எலும்புகளில் காணப்படும் மிக முக்கியமான கனிமம் கால்சியம் ஆகும். எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க இதனை தினமும் எடுத்துக் கொள்வது அவசியம். பால், யோகர்ட், காட்டேஜ் சீஸ், பாதாம் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இவை கால்சியம் சத்தின் ஆதாரமாக விளங்குவதால் இவற்றை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

MOST READ: சாப்பிட்டு முடிச்சதும் ஒரு கிராம்பை எடுத்து சப்பி சாப்பிடுங்க... ஏன்னு தெரியுமா?

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் கார்டிசால் அளவு அதிகரிக்கிறது. நீண்ட நேரம் கார்டிசால் அளவு அதிகரிப்பதால் எலும்பு இழப்பு உண்டாகலாம். கார்டிசால் , இன்சுலின் எதிரியாக இருப்பதால், இன்சுலின் எதிர்ப்பு உண்டாகிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த இரத்த சர்க்கரை அதிகரிப்பால், சிறுநீரில் கால்சியம் இழப்பு உண்டாகிறது. ஆகவே மன அழுத்தத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் ஆழமான உறக்கம் கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மேலே கூறிய வழிகளை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதால் வலிமையான எலும்புகளைப் பெறலாம். இளமையில் வலிமையான எலும்புகள் பெறுவதால் முதுமையில் எலும்புப்புரை நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களால் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Causes Bone Loss? Increase Bone Density By Making These Healthy Lifestyle Changes

here we are talking about the Causes Bone Loss? Increase Bone Density By Making These Healthy Lifestyle Changes.
Story first published: Thursday, December 13, 2018, 11:30 [IST]
Desktop Bottom Promotion