For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்தரங்கப் பகுதியில் அரிப்போ எரிச்சலோ ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? (ஆண் பெண் இருவருக்கும்)

ஆண்கள் மற்றும் பெண்களுடைய பிறப்புகளில் உண்டாகின்ற அரிப்பு மற்றும் எரிச்சலைப் போக்க செய்ய சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நாம் இறுக்கமான உள்ளாடைகளை அணியும் போது அவை நமது சருமத்துடன் உராயும் போது அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல், நமநமப்பு போன்றவை ஏற்படுகிறது.

அது மட்டுமல்லாமல் உடலுறுவின் போது ஏற்படும் உராய்வினாலும் பிறப்புறுப்பில் வலி மற்றும் அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெஜினல் ஷேப்டிங்

வெஜினல் ஷேப்டிங்

நாம் அணியும் ஆடைகள் சருமத்தில் உரசும் போது ஏற்படும் பாதிப்பு ஷேஃப்டிங் என்று அழைக்கப்படுகிறது. இதனால் அரிப்பு, நமநமப்பு, எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். இந்த மாதிரியான ஷேஃப்டிங் பிரச்சினை தொடை இடுக்குகளில், அக்குள் பகுதிகளில், மார்பக காம்பு களில் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை அவ்வளவு சாதாரணமாக விட்டு விடவும் கூடாது. இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். எல்லார் முன்னிலையிலும் சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.

காரணங்கள்

காரணங்கள்

உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு

சுய இன்பம் காணுதல்

இறுக்கமான உள்ளாடைகள்

நாப்கின்

அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல்.

உடல் பருமன்

கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல்

யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்பு டன் காணப்படும்.

MOST READ: பெயரின் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் எதிர்காலம் எப்படியிருக்கு

அறிகுறிகள்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி , சரும பிளவுகள், சி வத்தல்,தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.

இயற்கை முறைகள்

இயற்கை முறைகள்

தேங்காய் எண்ணெய்

சரும பிரச்சினைகள் அனைத்தையும் போக்கு வதில் போக்குவதில் தேங்காய் எண்ணெய் சிறந்து விளங்குகிறது. இது ஒரு ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு தன்மை காலை கொண்டது. இதில் விட்டமின் ஈ உள்ளது. பாதிப்புகள் அதிகமாகும் முன்பாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.

MOST READ: மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

ஓட்ஸ்

ஓட்ஸ்

இதில் உள்ள அற்புத மருத்துவ குணமான அவனோஆந்திரமைடு பொருட்கள் சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. ஓட்ஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் சூடான நீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இது போன்று நீங்கள் குளிக்கின்ற நீரில் கூட ஓட்ஸை சேர்த்து குளிக்கலாம். இப்படி 20 நிமிடங்கள் குளிக்கும் போது சருமத்தில் ஏற்பட்ட அழற்சி போய்விடும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் கொண்டது. சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பை தீவிரம் ஆக்காமல் உடனடியாக குறைக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 டீ ஸ்பூன் பட்டர், 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதூ ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.

MOST READ: ஒருமுறை பயன்படுத்திய காண்டமை அடுத்தமுறை பயன்படுத்தலாமா?

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் க்வெர்செடின் என்ற மருந்துப் பொருள் உள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. அதனால் தான் இது நிறைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலை சருமத்திற்கு மிகவும் ஏற்ற ஒன்று. இதில் அல்கலைடு இருப்பதால் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி வைரல் தன்மை கொண்டுள்ளது. எனவே இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.

யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு திரும்பவும் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஒரு மேஜிக் தாவரம் என்றே கூறலாம். இதன் ஜெல்லை யோனி பகுதியில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்பட்ட சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகி விடும்.

கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: பித்ரு பட்சத்தின்போது வீட்டில் திதி கொடுக்கலாமா? அதனால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

தடுக்கும் முறைகள்

தடுக்கும் முறைகள்

இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.

குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.

நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.

உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் ரொம்ப தூரம் நடந்து செல்லாதீர்கள்

ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.

பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

இந்த இயற்கை வழிகளை பின்பற்றி எளிதாக யோனிப் பகுதியில் ஏற்படும் அரிப்பை, சரும பிரச்சினைகளை சரி செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Home Remedies For Vaginal Chafing

here we are giving some important home remedies for vaginal chafing.
Story first published: Friday, September 28, 2018, 17:45 [IST]
Desktop Bottom Promotion