உடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியமா?

Posted By:
Subscribe to Boldsky

எந்த உணவுப் பொருளினை எடுத்தாலும் அதில் இருக்கிற சத்துக்கள் எல்லாம் என்னென்ன என்று பட்டியலிடுவார்கள் அதே போல அந்த பட்டியலில் பெரும்பாலும் இடம்பெற்றிருக்கிற ஒரு பெயர் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்.

ஆண்டி ஆக்ஸிடண்ட் நம் உடல் நலனுக்கு மிகவும் முக்கியமான ஒன்று எனச் சொல்லப்படுகிறது. அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதனால் பல்வேறு நோய் தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படும்.

என்னவோ சரித்தான். ஆனால் உண்மையில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் என்றால் என்ன? அதற்கான அளவுகோல் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்த சில அடிப்படைக்கேள்விகளுக்கான விடைகளை இதில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆக்ஸிடேஷன் :

ஆக்ஸிடேஷன் :

பொதுவாக இந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பற்றி குறிப்பிடும் போது ஏதோ ஒரு மேஜிக் வித்தையைப் பற்றி சொல்வது போலத்தான் இருக்கும். இது சாப்பிட்டால் போது நோய்கள் அண்டாது, கிருமிகள் தாக்காது என்ற ரீதியில் தான் கேட்டிருப்போம்.

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் நம் உடலில் நடக்கிற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நோய்கள் :

நோய்கள் :

நம் உடலில் இருக்கக்கூடிய செல்களில் நடக்கிற நடைமுறை தான் ஆக்ஸிடேஷன். இந்த நடைமுறையின் போது செல்லில் இருக்கும் எலெக்ட்ரான்கள் அழியத் துவங்கும். இதனால் செல்களின் மூலப் பொருட்களில் மாற்றங்கள் உண்டாகும். இது அப்படியே ஒவ்வொரு செல்லாக பரவத் துவங்கிடும். இது மிகச் சாதரணமாக நம் உடலில் நிகழக்கூடிய ஒரு நிகழ்வு.

ஆனால் இதன் வேகம் அதிகரிக்கும் போது, அசுர வேகத்தில் பிற செல்களையும் தாக்கும் போது தான் நமக்கு பிரச்சனையே.

எடுத்துக்காட்டு :

எடுத்துக்காட்டு :

இதற்கு வெளியில் ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள் பழத்தை நறுக்கி வைத்து விட்டு அப்படியே ஒரு பத்து நிமிடம் வைத்திருந்தால் லேசாக பிரவுன் நிறத்திற்கு மாறும். இரும்பு துருப்பிடிப்பது ஆகியவையெல்லா இப்படித் தான்.

ஆரம்பத்தில் அடையாளம் கண்டு கொண்டால் நாம் இதிலிருந்து தப்பிக்க முடியும். தீவிரமானால் புற்றுநோய் பாதிப்பு வரை நம்மை கொண்டு போய் விடக்கூடிய அளவிற்கு கொடுமையானது இது.

உடலில் :

உடலில் :

நம் உடலிலேயே நமக்குத் தேவையான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உற்பத்தி செய்யும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் உணவு மூலமாகவும் கூடுதலாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தினால் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் உற்பத்தி குறையத் துவங்கும் அப்போது நமக்கு கை கொடுப்பது உணவுகள் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் தான்.

பாதிப்பு :

பாதிப்பு :

விட்டமின் ஏ, சி,இ,கரோடினாய்ட் மற்றும் பினால் ஆகிய சத்துக்கள் நிரம்பிய காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இதனை சப்ளிமெண்ட்டாக எடுத்துக் கொள்ளாமல் உணவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது.

இது பாதிப்பினை சரி செய்வதற்கு பதிலாக கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்வதை தவிர்த்து உணவு மூலமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கூட்டுப்பொருள் :

கூட்டுப்பொருள் :

பல சத்துக்களினால் ஒன்றிணைந்து கிடைக்கக்கூடிய ஆற்றல் தான் நோயெதிர்ப்பு சக்தி. அது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நமக்கு கிடைக்க வேண்டுமானால் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகின்றன.

அத்தியாவசியமாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நியூட்ரிசியன்கள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

விட்டமின் ஏ :

விட்டமின் ஏ :

இது கொழுப்பை கரைக்ககூடிய விட்டமினாகும். அப்படியென்றால் விட்டமின் ஏ இருந்தால் நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது எளிதில் ஜீரணமாக்க உதவுகிறது.

அசைவ உணவுகளில் இவை நிறைந்திருக்கிறது. அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் ஏவை ரெட்டினோல் என்பார்கள். இதில் ஏற்கனவே கொழுப்பு இருக்கும். முட்டை,சால்மன் மீன்,பட்டர்,சீஸ்,ஹெவி க்ரீம் ஆகியவற்றிலிவை அதிகமாக கிடைக்கும்.

சைவ உணவுகள் :

சைவ உணவுகள் :

இவைத் தவிர சைவ உணவுகள் என்று எடுத்துக் கொண்டால் கேரட்,ப்ரோக்கோலியில் அதிகளவு விட்டமின் ஏ இருக்கிறது. இதைத் தவிர மாம்பழம்,தர்பூசணிப்பழம், ஆரஞ்சு ஆகியவற்றிலும் இருக்கிறது.

இவற்றை அடிக்கடி உங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வதால் விட்டமின் ஏ ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உங்கள் உடலில் அதிகரிக்கும்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

இது எளிதாக தண்ணீரில் கரையக்கூடிய விட்டமின். இந்த விட்டமினை எடுத்துக் கொள்ளும் போது வேகமாக உங்கள் உடலில் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் கூடவே தண்ணீரை சேர்த்து குடிக்க வேண்டும்.

பெரும்பாலும் இந்த விட்டமின் சி காய்கறி மற்றும் பழங்களிலேயே அதிகம் கிடைக்கிறது.

உணவுகள் :

உணவுகள் :

விட்டமின் சி என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த பொருட்கள் எவை தெரியுமா? சிகப்பு மற்றும் பச்சை மிளகாய்,முளைகட்டிய தானியங்கள்,சிட்ரஸ் அமிலம் நிரம்பிய பழங்கள்,கீரைகள்,ப்ரோக்கோலி மற்றும் பெர்ரீ பழங்கள் ஆகியவற்றில் விட்டமின் சி அதிகமிருக்கிறது.

சிட்டரஸ் பழமான எலுமிச்சையில் இருந்து சாறு எடுத்தால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாருக்கு ஒரு டம்பளர் தண்ணீரைக் கலந்து சுவைக்காக இனிப்பையோ அல்லது உப்பையோ கலந்து குடிப்பது இதனால் தான்.

விட்டமின் இ :

விட்டமின் இ :

விட்டமின் இ சாப்பிடும் போது உணவுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சேர்த்து சாப்பிட வேண்டும். நட்ஸ்,முழு தானியங்கள்,ஸ்வீட் பொட்டேட்டோ, அவகேடோ,பூசணிக்காய்,பீட்ரூட் ஆகியவற்றில் விட்டமின் இ நிறைய இருக்கிறது.

கரோடினாய்ட் :

கரோடினாய்ட் :

இந்த சத்து இருக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் அதிகமிருக்கும். கேரட்,ப்ரோக்கோலி,தக்காளி ஆகியவற்றில் நிறைந்திருக்கிறது. இதைத் தவிர லைக்கோபென், பீட்டா கரோட்டின்,லியூட்டின் ஆகியவை நிரம்பிய காய்கறிகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சத்துக்கள் நிறைந்திருப்பவை எப்போதும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டிருக்கும்.

பினால்ஸ் :

பினால்ஸ் :

இது ஒரு வகையில் ஃபைட்டோ கெமிக்கல். இவை தான் செடிகளுக்கு நிறம் வழங்குகிறது. சில நேரங்களில் இந்த பினால்ஸ் அதிக அமிலத் தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம். இந்த பினால்ஸ் சில நேரங்களில் நம் உடலில் கேன்சர் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவிடுகிறது.

இவை க்ரீன் டீ, டார்க் சாக்லெட், ரெட் வைன்,பெர்ரீஸ்,ஆலிவ் ஆயில் ஆகியவற்றில் நிறைந்திருக்கிறது.

 உடல் எடை :

உடல் எடை :

உடல் எடையை குறைக்க பலரும் மேற்கொள்கிற டயட் வகைகளில் ஒன்று ப்ரோட்டீன் டயட். ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நம் ரத்ததில் அமிலத்தன்மை அதிகரிக்கும். இது எலும்பு மற்றும் தசைகளுக்கு பாதிப்பினை உருவாக்கும்.

இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதாவது ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் குறைந்திடும். இதனால் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். அதனால் வெறும் ப்ரோட்டீன் டயட் இருக்கும் போதே கூடவே ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Know About Antioxidant

Things You Know About Antioxidant
Story first published: Thursday, April 5, 2018, 16:29 [IST]