பூஞ்சைத்தொற்று வராம இருக்கணும்னா ஆணுறுப்பை எப்படி சுத்தம் செய்யணும்?...

Subscribe to Boldsky

ஆணுறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் நீங்களே எப்படி சரிசெய்து கொள்ளலாம்?

health

மனித உடலில் பூஞ்சை தொற்று வழக்கமான ஒரு பிரச்னைதான். ஆனால் பூஞ்சை தொற்று என்பது உடலில் எல்லா இடங்களிலும் ஏற்படுவதில்லை. பூஞ்சை தொற்று என்பது குறிப்பாக, நம்முடைய உடலில் நகங்கள், வாய்ப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதிகளில்தான் மிக அதிகமாக பூஞ்சை தொற்றுக்கள் உண்டாகின்றன. ஏனெனில் அந்த அந்தரங்கப் பகுதிகளை நாம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூஞ்சை தொற்று

பூஞ்சை தொற்று

ஈஸ்ட் தொற்றின் காரணமாக அந்தரங்க உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மிக அதிக அளவில் இந்த ஈஸ்ட் தொற்று பெண்ணுறுப்பில் அரிப்பு, அழற்சி போன்ற பல்வேறு பிரச்னைகள் உண்டாகின்றன. அதேபோல் தான் ஆண்களுக்கும் ஆணுறுப்புகளில் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. இதை மற்ற சாதாரண உடலில் இருக்கும் அழுக்கைப் போல நினைத்து விடாதீர்கள். ஏனெனில் உடலில் இருக்கும் அழுக்குகள் உடலுக்குள் கிருமிகளாக உட்செல்ல எடுத்துக் கொள்ளும் காலத்தை விட, அந்தரங்கப் பகுதிகளில் இருக்கும் அழுக்குகள் மிக விரைவாக நம்முடைய உடலுக்குள் சென்று விடும். இந்த கிருமிகளின் தாக்குதலால் உடல் உள்ளுறுப்புகளிலும் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

காரணங்கள்

காரணங்கள்

பூஞ்சை தொற்றுக்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. பொதுவாக உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்வது பற்றி நாம் யோசிப்பதே இல்லை. சுகாதாரம் குறைவான விஷயங்களால் ரத்த சர்க்கரை இருப்பவர்களுக்கும் பாலியல் உறவு மேற்கொள்பவர்க்கும் இந்த தொற்றுக்கள் வேகமாகப் பரவ ஆரம்பிக்கும். இந்த பூஞ்சைத் தொற்றுக்களை அப்படியே சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. இதற்கான சுகாதார முறைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்யது அவசியமான ஒன்று. மற்ற சாதாரண மனிதர்களை விட நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற சுகாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களுக்குப் போல எளிதில் குணமடையாது. அவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளும் சேர்ந்து தேவையில்லாத பிரச்னைகளைத் தோற்றுவித்தால்?... அதனால் எதற்கும் சுகாதாரமாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லையே?

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை

அந்தரங்கப் பகுதிகளில் உண்டாகும் பூஞ்சைத் தொற்றுக்கு கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஈஸ்ட் தொற்று மற்றும் பூஞ்சைத் தொற்றுக்களை தானே சரிசெய்கிறேன் என்று தேவையில்லாமல் எதுவும் செய்யாதீர்கள். முதலில் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, அது பரவாமல் இருப்பதற்கான சிகிச்சையும் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பாலியல் உறவு

பாலியல் உறவு

இது உறுப்புகளின் வழி மற்றவருக்கு ளிதில் பரவ வாய்ப்புண்டு. அதனால் நிறைய பிரச்னைகளும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் உங்கள் துணையுடன் முன் விளையாட்டு, நெருக்கமாக இருப்பதெல்லாம் ஓகே தான். ஆனால் அந்த நோய்த்தொற்று உங்களிடம் முழுமையாக குணமடையும் வரை உடலுறவில் மட்டும் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள்.

ஆணுறை

ஆணுறை

இல்லை. பாலியல் இச்சையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று நினைக்கிறவர்கள் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஆணுறையைப் பயன்படுத்துங்கள். பாதுகாப்பான உடலுறவின் மூலமாக நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

ஆணுறுப்பை சுத்தம் செய்தல்

ஆணுறுப்பை சுத்தம் செய்தல்

பெரும்பாலானவர்களுக்கு சுயஇன்பம் பழக்கம் கட்டாயம் ஒருமுறையாவது இருந்திருக்கும். அதுபோல, கைகளில் ஆணுறுப்பை பிடித்து, மேல் உள்ள தோலை முன்னும் பின்னாக நகர்த்தி இரண்டு மூன்று முறை செய்து, உள்ளே தேங்கியிருக்கும் கழிவுகள், அழுக்குகளை மேல்நோக்கி கொண்டு வர வேண்டும். பின் மென்மையான சோப்பு நீரில் ஆணுறுப்பு, விதைப்பை என முழுமையாக நன்கு சுத்தம் செய்யுங்கள்.

அதன்பின் மென்மையான துணி கொண்டு முழு உறுப்புப் பகுதியையும் விதைப்பை, அதன் இடுக்குகள் என அத்தனையையும் நன்கு ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.

சோப்புக்கு பதிலாக, தற்போது அந்தரங்கப் பகுதிகளைச் சுத்தம் செய்வதற்காகவே சில லிக்விடுகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் இன்னும் நல்லது.

பலபேர் உறவு

பலபேர் உறவு

பலருடன் உறவு கொள்பவராக இருந்தால் கட்டாயம் அதை தவிர்க்க வேண்டும். இதுமாதிரியான சமயங்களில் மிக வேகமாக ஈஸ்ட் தொற்று பரவ ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    things to do when you are suffer from a penile infection

    fungal infection that happens due to candida a type of yeast is known to set off an infection in the moist areas of the body like the mouth or the genital areas.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more