வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். இதுவரை டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியுமா?

Surprising Good Facts About White Chocolates

வெள்ளை நிற சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது. ஆகவே வெள்ளை நிற சாக்லேட்டுகள் சற்று வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். டார்க் சாக்லேட்டிற்கும், வெள்ளை சாக்லேட்டிற்கும் உள்ள வித்தியாசம் ஃப்ளேவர் தான்.

அதற்காக வெள்ளை நிற சாக்லேட்டை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவாக சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான். இங்கு வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கால்சியம் அதிகம்

கால்சியம் அதிகம்

வெள்ளை சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார் 169 மிகி கால்சியம் இருக்கும். கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு அவசியமானது. அதோடு கால்சியம் இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும் ஆதரவாக இருக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

வெள்ளை சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கொக்கோ வெண்ணெய் கொக்கோ தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த தாவரத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இரத்த அழுத்த பிரச்சனை

இரத்த அழுத்த பிரச்சனை

வெள்ளை சாக்லேட்டுகளில் பல உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான லினோலியிக் அமிலம் உள்ளது. லினோலியிக் அமிலம் இதயத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவும். அதாவது இரத்தத்தை சீராக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அழுத்துவதோடு, இதயத் துடிப்பை நிலையாக வைத்துக் கொள்ளும்.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

வெள்ளை சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும்.

கீல்வாதம்

கீல்வாதம்

கீல்வாதம் ஒரு வகையான ஆர்த்ரிடிஸ். இது மூட்டு இணைப்புக்களில் அழற்சியை ஏற்படுத்தி, கடுமையான மூட்டு வலியை உண்டாக்கும். இதற்கு காரணம் யூரிக் அமில படிகங்கள் மூட்டுக்களில் படிவது தான். வெள்ளை சாக்லேட்டுகளில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், யூரிக் அமில மூலக்கூறுகளை உடைத்து, கீல்வாதத்தில் இருந்து விடுவிக்கும்.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

ஆய்வு ஒன்றில் வெள்ளை சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெள்ளை சாக்லேட்டில் உள்ள பாலிபீனால்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

தூக்க பிரச்சனை

தூக்க பிரச்சனை

ஒவ்வொருவருக்கும் தூக்கம் மிகவும் அவசியமானது. ஒருவருக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால், மன அழுத்தமும், எரிச்சல் தன்மையும் அதிகரிக்கும். வெள்ளை சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி, மூளையை அமைதியடையச் செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்யும்.

உண்ணுவதில் ஒழுங்கீனம்

உண்ணுவதில் ஒழுங்கீனம்

ஒருவர் சரியாக சாப்பிடாமல் இருந்தால், அதனால் உடல் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். இப்படி உண்ணுவதில் ஒழுங்கீனமாக இருப்பதைத் தடுக்க, அவ்வப்போது சிறிது வெள்ளை சாக்லேட்டை சாப்பிடுங்கள். உண்ணுவதில் ஒழுங்கீனமாக இருக்கும் நோயாளிகள், வெள்ளை சாக்லேட்டை சாப்பிட்டு, இப்பிரச்சனையில் இருந்து குணமாகியுள்ளனர்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

நினைவாற்றல் அதிகரிக்கும்

சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். வெள்ளை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சந்தோஷமான மனநிலை

சந்தோஷமான மனநிலை

உங்கள் மனநிலை சரியில்லையா? அப்படியானால் ஒரு துண்டு வெள்ளை சாக்லேட்டை சாப்பிடுங்கள். உங்களுக்கு ஒரு நாள் மோசமாக சென்றால், வெள்ளை சாக்லேட்டை சிறிது சாப்பிடுங்கள். ஏனெனில் வெள்ளை சாக்லேட் நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவி, சந்தோஷமான மனநிலையைத் தரும். .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Good Facts About White Chocolates

You will be surprised to know that many people are also addicted to white chocolates. Did you know that white chocolate contains a good dose of calcium that keeps the bones strong? Here are some good facts about white chocolates.
Story first published: Tuesday, January 9, 2018, 18:16 [IST]