For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆச்சரியமான தகவல்... தினமும் பீச்சுக்கு செல்பவர்களுக்கு எந்த நோயும் வராதாம்..!

  |

  "கடல்" - பூமித்தாயின் ஒரு அழகிய பிள்ளை. பூமித்தாய்க்கு பல செல்வங்கள் இருந்தாலும் மிக முக்கிய செல்வம் இந்த கடல்தான். எத்தனையோ சிறப்புகளை தனக்குள்ளே வைத்திருக்கும் ஒரு "தங்க பெட்டகம்" இந்த கடல். பல்வேறு ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சரியங்களும் கடலில் எப்போதும் நிறைந்திருக்கும்.

  health benefits of sea water in tamil

  கடலை பற்றி பேச என்றுமே பல்வேறு வகையான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். இத்தகைய சுவாரசியமான கடலில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. மேலும் தினமும் கடலுக்கு 15 நிமிடம் சென்று வந்தால் நீங்கள் பலவிதமான நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள அதிசய நன்மைகளை பற்றி இந்த பதிவில் அறியலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆதார நீர் :-

  ஆதார நீர் :-

  நமது பூமியில் 70 சதவீதம் கடல் நீரே உள்ளது. பல வகையான நீர் ஆதாரங்களுக்கும் முக்கிய சான்று இந்த கடல் நீர்தான். இதில் சோடியம் குளோரைடு, கால்சைட், ஐயோடின், தாதுக்கள் போன்ற 84 வகை மூல பொருட்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் நலத்தை சீராக வைக்கும். மேலும் உடலில் எந்தவித நோய் தொற்றுகளும் வராமல் பாதுகாக்கும்.

  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :-

  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :-

  கடல் நீர் மிக அருமையான மருத்துவ குணம் கொண்டது. நீங்கள் கடல் நீரில் தினமும் குளித்தால் 20% சிவப்பு ரத்த செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் எளிதில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி, உடலில் எந்தவித நோயையும் வராமல் தடுக்கலாம். அத்துடன் ரத்த சோகையை குணப்படுத்தி, சர்க்கரை அளவை சீராக வைக்கும்.

  மன அழுத்தத்தை குறைக்க :-

  மன அழுத்தத்தை குறைக்க :-

  நம்மில் பலருக்கு அதிகம் இருக்கும் பிரச்சினை இந்த மன அழுத்தம். காலை முதல் மாலை வரை நீங்கள் பார்க்கும் எதையும் ஒரு வெறுப்புடனே பார்க்கிறீர்களா...? இதற்கு தீர்வு உள்ளது. தினமும் பீச்சுக்கு சென்று வந்தால் உங்கள் மன அழுத்தம் நிச்சயம் குறையும். நிம்மதியான நடைபயணம், ஆரோக்கியமான கடல் காற்று ஆகியவை எத்தகைய மனப்பாங்கு உள்ள மனிதர்களையும் சீரான மனம் கொண்டவர்களாக மாற்றி விடும்.

  தைராய்டு பிரச்சினைக்கு :-

  தைராய்டு பிரச்சினைக்கு :-

  இன்று பெண்கள் பலரை பாதிக்கும் பிரச்சினை தைராய்டுதான். இது அவர்களின் மாதவிடாயை பாதித்து, குழந்தையின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். இதற்கு தீர்வாக பல மாத்திரைகளை நாம் தினந்தினமும் சாப்பிட்டுத்தான் கொண்டிருக்கின்றோம். ஆனால் பலன் ஒன்றும் கிடைப்பது இல்லை. இதனையும் சரி செய்கிறது கடல் நீர். இதில் உள்ள அதிக ஐயோடின், தைராய்டு குறைபாட்டை குணப்படுத்தம்.

   சுவாச பிரச்சினைகள் :-

  சுவாச பிரச்சினைகள் :-

  மூச்சு திணறல், சளி தொல்லை, ஆஸ்த்துமா, சுவாச பிரச்சினை இவற்றால் தினமும் சிரமப்படுகிறீர்களா..? இனி உங்களுக்கு கவலையே வேண்டாம். நம்ம கடல் நீர் இருக்க பயமேன். தினமும் பீச்சுக்கு சென்று, சுத்தமான காற்றை சுவாசிப்பதால் உங்கள் நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீங்கி நன்கு மூச்சு விட முடியும்.

  பெருங்குடலை சுத்தம் செய்யும் :-

  பெருங்குடலை சுத்தம் செய்யும் :-

  குடல் மிகவும் சுத்தமாக இருந்தாலே பலவித உடல் சார்ந்த பிரச்சினைகளையும் சரி செய்து விடலாம். கடல் நீர் பெருங்குடலை சுத்தம் செய்து நல்ல செரிமானத்தை தரும். அத்துடன் உங்கள் சோர்வுற்ற உடலை வலுப்படுத்தி புத்துயிர் அளிக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு, கடல் நீர் ஒரு நண்பன் போன்று செயல்படும்.

  கல்லீரல் பிரச்சினைகளுக்கு :-

  கல்லீரல் பிரச்சினைகளுக்கு :-

  கடல் நீர், செல்களை மறு உற்பத்தி செய்து பல நோய்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள அதிக உப்பு தன்மை செல்கள் சிதைவடைவதை முற்றிலுமாக தடுக்கிறது. அத்துடன் கல்லீரல், சீறுநீரகம் போன்றவற்றை சீராக வைக்க உதவும். உடலின் செயல்திறனை செம்மையாக வைக்க கடல் நீர் மிக சிறந்த மருந்து.

  தூக்கமின்மையை போக்கும் :-

  தூக்கமின்மையை போக்கும் :-

  இன்று பலருக்கு வரும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த தூக்கமின்மைதான். ஒவ்வொரு நாளும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு அவதிப்படுபவரின் நிலைமை மிகவும் கொடுமையானது. இதற்கு அருமையான தீர்வு கடல் நீர்தான். தினமும் பீஸுக்கு சென்று வந்தாலே போதும், உங்கள் தூக்கமின்மை பிரச்சினை எளிதில் குணமடையும். கடல் நீர் உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து, உளவியல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்யும். இதனாலையே உங்களுக்கு எளிதில் தூக்கம் வரும்.

  இத்தகைய விலை மதிக்க முடியாத கடல் நீரை பாதுகாத்து, நல்ல பயன்களை அடையுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Secret benefits of sea water

  Sea water can be a natural drug and medicine. It stimulates our body and promotes the feeling of well-being that surfers very well know.
  Story first published: Saturday, August 4, 2018, 15:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more