மாதவிடாய் காலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தம் வருகிறதா? அது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் சுழற்சியின் போது பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். சில பெண்களுக்கு இரத்தத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இன்னும் சிலருக்கு இரத்தம் கெட்டி கெட்டியாக வெளிவரும். இது சாதாரணம் தான். பொதுவாக மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பையின் சுவர் கெட்டியாகி, கருத்தரிக்க தயாராக இருக்கும்.

Remedies For Black Blood Discharge During Menstrual/Periods

இக்காலத்தில் உடலானது கருப்பை சுவருடன் இரத்தத்தையும் வெளியேற்றும். பெரும்பாலும் ஒவ்வொரு சுழற்சியின் போதும் 4-12 டீஸ்பூன் அளவு இரத்தம் வெளியேறும். ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களாக இருக்கும். இன்னும் சில பெண்களுக்கு 21 நாட்களாகவும், வேறு சில பெண்களுக்கு 35 நாட்களாகவும் இருக்கும். சாதாரணமாக மாதவிடாய் காலமானது 2-7 நாட்கள் வரை இருக்கும். சராசரியாக 5 நாட்கள் வரை இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் இரத்தம் கருப்பு நிறத்தில் வருகிறது?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் இரத்தம் கருப்பு நிறத்தில் வருகிறது?

கருப்பை பலவீனமாகவோ அல்லது கருப்பை சுவர் மெல்லியதாகவோ இருந்தால், இரத்தத்தை முறையாக வெளியேற்ற முடியாமல், தாமதமாக வெளிவரும் போது, அந்த இரத்தம் அடர் அல்லது கருப்பு நிறத்தில் கெட்டியாக வெளிவரும். இதற்காக மருத்துவரிடம் எல்லாம் செல்ல வேண்டும் என்பதில்லை.

கருப்பையின் வலிமையை அதிகரிக்கும் சில கை வைத்தியங்களைக் கொண்டே, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

வைத்தியம் #1

வைத்தியம் #1

கருஞ்சீரகத்தை கருப்பட்டி சேர்த்து அரைத்து, மாதவிடாய் காலத்தில் சாப்பிட்டு வந்தால், கருப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கலாம். அதுவும் 3 மாதம் இப்படி உட்கொண்டு வந்தால், கருப்பையின் வலிமை அதிகரித்து, மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும்.

வைத்தியம் #2

வைத்தியம் #2

வெதுவெதுப்பான நீரில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும் மூன்று வேளை குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் மாதவிடாய் காலத்தில் கெட்டியாக இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.

வைத்தியம் #3

வைத்தியம் #3

மாதவிடாய் காலத்தில் கருப்பு நிறத்தில் இரத்தக்கசிவை சந்திக்கும் பெண்கள், தினமும் திராட்சை ஜூஸ் குடித்து வர, 3-4 மாதங்களில் இந்த பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

வைத்தியம் #4

வைத்தியம் #4

ஒரு கப் பாலில் 2-3 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் இரவில் குடித்து வந்தால், கருப்பைச் சுவர் வலிமையாகி, கருப்பையில் உள்ள எஞ்சிய இரத்தம் வெளியேறிவிடும்.

வைத்தியம் #5

வைத்தியம் #5

ஒரு கப் மாட்டுப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, குடித்து வர கருப்பு நிறத்தில் இரத்தம் வெளிவருவது தடுக்கப்படும்.

வைத்தியம் #6

வைத்தியம் #6

சோம்பு நீரை தினமும் 3 வேளை குடித்து வர வேண்டும். இதனால் கருப்பையின் சுவர் வலிமையடைந்து, மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வைத்தியம் #7

வைத்தியம் #7

இஞ்சி டீயை மாதவிடாய் காலத்தில் குடித்து வந்தால், வயிற்று வலி மற்றும் இதர மாதவிடாய் கால பிரச்சனைகள் நீங்கும். அதிலும் இஞ்சி சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மாதவிடாய் கால பிரச்சனைகள் அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies For Black Blood Discharge During Menstrual/Periods

Here are some home remedies for black blood discharge during menstrual or periods. Read on to know more...
Story first published: Tuesday, January 2, 2018, 15:00 [IST]