For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

இங்கு தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

பழங்களுள் மிகவும் சுவையான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கிய பழம் தான் திராட்சை. திராட்சை அனைவருக்குமே பிடித்த ஓர் பழமும் கூட. இதை பழங்களின் ராணி என்றும் அழைப்பர். திராட்சையில் சர்க்கரை, வைட்டமின் டி மற்றும் அற்புதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை ஒருவர் சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையும் அதிகரிக்கும்.

Reasons Why You Should Eat A Handful Of Black Grapes Everyday

திராட்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் கருப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறம் என நிறங்களின் அடிப்படையில் மூன்று வகையான திராட்சைகள் உள்ளன. மூன்று வகை திராட்சைகளுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கியவை. இருப்பினும் பெரும்பாலானோர் கருப்பு நிற திராட்சையையே அதிகம் விரும்பி சாப்பிடுவர். இதற்கு அதன் சுவையே முக்கிய காரணம். இந்த கருப்பு நிற திராட்சையை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இக்கட்டுரையில் தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அன்றாடம் திராட்சை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்சைமர் நோயைத் தடுக்கும்

அல்சைமர் நோயைத் தடுக்கும்

கருப்பு திராட்சை முதுமையில் தாக்கும் அல்சைமர் நோயில் இருந்து பாதுகாக்கும். இதற்கு இதில் உள்ள பாலிஃபீனால்கள் தான் காரணம். மேலும் கருப்பு திராட்சை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் நரம்பு செல்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

மார்பக புற்றுநோய் அபாயம் குறையும்

மார்பக புற்றுநோய் அபாயம் குறையும்

கருப்பு திராட்சை மிகவும் சிக்கலான நோய்களான மார்பக புற்றுநோய் மற்றும் இதர வகை புற்றுநோய்களையும் எதிர்த்துப் போராடி, உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும். இதற்கு கருப்பு திராட்சையில் உள்ள வளமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். எனவே உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால் கருப்பு திராட்சையை தினமும் சாப்பிடுங்கள்.

செரிமானம் மேம்படும்

செரிமானம் மேம்படும்

கருப்பு திராட்சையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கருப்பு திராட்சை வயிற்றில் ஏற்படும் எரிச்சல், வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுத்து, உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.

சிறுநீரக கோளாறு

சிறுநீரக கோளாறு

கருப்பு திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது யூரிக் அமில அளவைக் குறைத்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் மற்றும் இதய அமைப்பில் இருந்தும் அமிலங்களை வெளியேற்றும். ஆகவே சுவையான திராட்சையை தினமும் சுவைத்து உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கலைத் தடுக்கும்

மலச்சிக்கலைத் தடுக்கும்

கருப்பு நிற திராட்சையில் உள்ள அதிகளவிலான சர்க்கரை, செல்லுலோஸ் மற்றும் ஆர்கானிக் அமிலம் போன்றவை வயிற்றை ஒரு நல்ல அமைப்பில் வைத்து, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து, கழிவுகள் எளிதில் உடலில் இருந்து வெளியேற உதவும். உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுமா? அப்படியானால் கருப்பு திராட்சையை சாப்பிடுங்கள்.

ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்

ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்

கருப்பு திராட்சை ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். அதற்கு கருப்பு திராட்சையைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, காலையில் குடியுங்கள். கருப்பு திராட்சையில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ரிபோஃப்ளேவின், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, அடிக்கடி வரும் ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுவிக்கும்.

கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

கருப்பு திராட்சையில் உள்ள ஜியாஜாந்தின் மற்றம் லுடின் போன்றவை தான் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடல்நல நிபுணர்களும், தினமும் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை ஜூஸ் அல்லது ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு நல்லது

சர்க்கரை நோய்க்கு நல்லது

கருப்பு திராட்சை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை தினமும் ஒரு கையளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள 'Pterpstilbene' என்னும் உட்பொருள், இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்.

இரத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும்

இரத்த கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும்

கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளும். மேலும் கருப்பு திராட்சை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் மேம்படுத்தும்.

முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும்

முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும்

கருப்பு திராட்சையை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆன்டி-ஏஜிங் பொருள் போன்று செயல்பட்டு, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் கருப்பு திராட்சை ப்ரீ-ராடிக்கல்களால் சரும செல்களுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். வேண்டுமானால் கருப்பு திராட்சையைக் கொண்டு சருமத்தை மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும் செய்யலாம்.

மென்மையான சருமம்

மென்மையான சருமம்

உங்கள் சருமம் வறண்டு, மென்மையிழந்து அசிங்கமாக காட்சியளிக்கிறதா? அப்படியெனில் தினமும் கருப்பு திராட்சையை சாப்பிடுங்கள். இதனால் அது சரும செல்களுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி, சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தில் ஈரப்பசையைத் தக்க வைக்கும்.

சரும நிறம் மேம்படும்

சரும நிறம் மேம்படும்

உங்கள் கை, முகம், கழுத்து போன்றவை ஒவ்வொரு நிறத்தில் உள்ளதா? இதை கருப்பு திராட்சைப் போக்கும். எப்படியெனில் கருப்பு திராட்சையில் உள்ள பாலிஃபீனால்கள், சருமத்தில் உள்ள கருமையான தோற்றத்தைத் தரும் இறந்த செல்களைப் போக்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்திக் காட்டும். அதற்கு கருப்பு திராட்சையை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை தினமும் முகம், கை, கால்களில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும்.

சருமத்தின் நெகிழ்வுத்தன்மை தக்க வைக்கப்படும்

சருமத்தின் நெகிழ்வுத்தன்மை தக்க வைக்கப்படும்

கருப்பு திராட்சையில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உருவாக்கி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைத் தக்க வைக்கும். மேலும் கருப்பு திராட்சை சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்க வைக்கும்.

தலைமுடி உதிர்வைத் தடுக்கும்

தலைமுடி உதிர்வைத் தடுக்கும்

தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? அப்படியானால் இந்த பிரச்சனைக்கு கருப்பு திராட்சை நல்ல தீர்வளிக்கும். அதற்கு கருப்பு திராட்சையை சாப்பிட்ட பின்பு, அதன் விதைகளை தூக்கி எறியாமல் அரைத்து, அதனை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதனால் கருப்பு திராட்சையில் உள்ள லிவோலியிக் அமிலம் மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும்.

பொடுகுத் தொல்லை நீங்கும்

பொடுகுத் தொல்லை நீங்கும்

கருப்பு திராட்சை பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இதற்கு கருப்பு திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் தான், பொடுகை நீக்கி, தலைமுடியை பட்டுப் போன்று, மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Eat A Handful Of Black Grapes Everyday

Here are some reasons why you should eat a handful of black grapes everyday. Read on to know more health benefits of eating black grapes.
Story first published: Saturday, March 10, 2018, 11:56 [IST]
Desktop Bottom Promotion