TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்குமே இருக்கும் பிரச்சினை ஆகும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்த பிரச்சினை குறிப்பாக ஆண்களுக்கே அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு எட்டு அல்லது ஒன்பதுஎன்பது முறை சிறுநீர் கழிப்பதே ஆரோக்கியமானதாகும். அதற்கு மேல் கழிக்க நேர்ந்தால் உங்கள் உடலில் பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.
சிலர் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் அல்ல. இது தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல் (Frequent Urination) என்று அழைக்கப்படுகிறது. நமது சிறுநீர்ப்பை 600மிலி அளவிற்கு சிறுநீரை சேர்த்துவைக்க கூடியது. பொதுவாக சிறுநீர்ப்பை 150மிலி அடைந்ததவுடன் சிறுநீர் கழிக்க நமக்கு உணர்வு ஏற்படும். தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல் ஏற்பட என்ன காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்.
காரணங்கள்
தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல் (Frequent Urination) ஏற்பட இரண்டு காரணங்கள் உள்ளது. முதல் காரணம் சிறுநீரின் உற்பத்தி அளவு அதிகரிப்பது. மற்றொன்று சிறுநீர்பை செயலிழப்பு. இதனை ஓவர்ஆக்டிவ் ப்ளேடர் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கான மேலும் சில காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீர்ப்பை தொற்று
நமது உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழாயின் பெயர் யுரேத்ரா ஆகும். யுரேத்ராவிலும் , சிறுநீர் பையிலும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்படும் போது நமக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த தொற்று சிறுநீர்பையை சுத்தம் செய்து கொண்டே இருக்கும்படி செய்யும். இதுவே நாம் தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்க காரணமாகும். இந்த தொற்று ஏற்பட்டால் நீங்கள் வழக்கமாக கழிக்கும் சிறுநீரின் அளவை விட குறைவான அளவே கழிப்பீர்கள்.
சர்க்கரை நோய்
முதல் வகை, இரண்டாம் வகை இரண்டு சர்க்கரை நோய்க்குமே முதல் அறிகுறி தொடர்ச்சியான சிறுநீர் கழித்தல்தான். நமது உடல் பயன்படாமல் இருக்கும் குளுக்கோஸை சிறுநீர் வழியாக வெளியற்றிக்கொண்டே இருக்கும். சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு கோளாறுகளும் சிறுநீர்ப்பையை பாதிக்கும். இதுவும் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும்.
சிறுநீரக செயல்பாடு
இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காகவோ அல்லது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவோ நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம். இந்த மாத்திரைகளில் உள்ள இரசாயனங்கள் சிறுநீரகத்தை அதிகமாக செயல்பட வைத்து உடலில் உள்ள நீரை வெளியேற்ற சிறுநீரகத்தை தூண்டும். அதனில் நீங்கள் அடிக்கடி கழிவறையை நோக்கி ஓடிஏ நேரும்.
புரோஸ்ட்ரேட் பிரச்சினை
புரோஸ்ட்ரேட் சுரப்பியின் அளவு பெரிதாவது யுரேத்ரா மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அதிகமாக சிறுநீர் வெளியேறும்படி செய்யும். இதனால் சிறுநீர் பையின் சுவர்களில் எரிச்சல் ஏற்படும். இதனால் குறைந்த அளவு சிறுநீர் இருந்தாலும் உடனே அதனை வெளியேற்ற சிறுநீர்ப்பை முயற்சிக்கும்.
கர்ப்பகாலம்
ஹார்மோன்கள் மாறுபாடு மற்றும் கருப்பையில் ஏற்படும் வளர்ச்சி இதனால் சிறுநீர் பையில் ஏற்படும் அழுத்தத்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். இது கரு உருவான ஐந்தாவது வாரத்தில் இருந்தே தொடங்கிவிடும். பிரசவத்தின்போது ஏற்படும் அதிர்வுகள் கூட யுரேத்ராவை பாதிக்கும்.
சிறுநீர் முடக்கம்
இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வதை தடுப்பதற்காக நடப்பது, சிரிப்பது, இருமுவது போன்ற இயற்கை செயல்களுக்கும் முட்டுக்காடு போடும்போது அது சிறுநீர் பையில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும். எனவே பெண்கள் முடிந்த வரை சிறுநீர் கழிக்க செல்வதை தள்ளிப்போடாதீர்கள்.
இடுப்புவலி
சிறுநீர்ப்பை மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் வலி கூட தொடர்ச்சியான சிறுநீர் கழித்தலுக்கு காரணமாய் அமைகிறது. இடுப்பு பகுதியில் வலி அதிகம் இருக்கும்போது சிறுநீர் கழிப்பது தற்காலிக வலிநிவாரணியாக அமையும்.
நரம்பியல் கோளாறுகள்
சிறுநீர் பையுடன் தொடர்பில் உள்ள நரம்புகளில் பிரச்சினை ஏற்படும் போது அது சிறுநீர் பையின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தொடர்ச்சியாக சிறுநீர் கழிப்பது அல்லது நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
OAB நோய்
இது ஒவர் ஆக்டிவ் பிளேடர் என்னும் நோயாகும். சிறுநீரகத்தில் தொற்று , சிறுநீரக கல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவை இது ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் சிறுநீர்ப்பை எப்போதும் காலியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே சிறிது நீர் அருந்தினாலும் நீங்கள் உடனடியாக சிறுநீர் கழிக்க நேரிடும்.
செயற்கை காரணங்கள்
தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்க சில செயற்கை காரணங்களும் இருக்கிறது. அதிகளவு மது அருந்துதல், காஃபைன் எடுத்து கொள்ளுதல் போன்றவை இதனை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்கள், அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் போன்றவை கூட சிறுநீர் பையில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.