முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான சில பாட்டி வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வெளியே சொல்ல முடியாமல் ஆண்கள் தவிக்கும் பிரச்சனைகளுள் ஒன்று முன்கூட்டியே விந்து வெளியேறுவது. உலகில் சுமார் 30% ஆண்கள் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். அதிலும் இம்மாதிரியான பிரச்சனையால் 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் தான் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த ஒரு பிரச்சனையால் பல ஆண்கள் தங்கள் துணையை திருப்திப்படுத்த முடியாமல், மிகுந்த மன வருத்தத்திற்கு உட்பட்டு உள்ளனர்.

Natural Remedies To Stop Premature Ejaculation/Early Discharge

மேலும் பல ஆண்கள் தங்களது இந்த பிரச்சனையால் வாழ்க்கை துணையை இழந்தும் நிற்கின்றனர். ஆனால் ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைக்கு வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் தீர்வு காண முடியும். அதோடு நம் பாட்டி வைத்தியங்களும் நல்ல தீர்வை அளிக்கும்.

இக்கட்டுரையில் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போதைப் பழக்கங்கள்

போதைப் பழக்கங்கள்

ஆல்கஹால், புகைப்பிடித்தல் மற்றும் இதர போதைப் பழக்கங்கள் இருந்தால், அதை உடனே கைவிட வேண்டும். ஏனெனில் இப்பழக்கங்களால் நரம்பு மண்டலம் மிகவும் ரிலாக்ஸ் ஆகி, உடலுறவின் போது விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். எனவே இம்மாதிரியான கெட்ட பழக்கங்களை கைவிட்டால், அதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியமான சரிவிகித டயட்

ஆரோக்கியமான சரிவிகித டயட்

உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் மட்டுமின்றி, பாலியல் செயல்பாட்டிலும் சரிவிகித டயட் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் சரியான ஊட்டச்சத்து நிறைந்த டயட்டை மேற்கொள்ளும் போது, உடலின் வலிமை அதிகரிப்பதோடு, பாலியல் பிரச்சனையான முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையும் குணமாகும். சரியான டயட் அனைத்து விதமான ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் சரிசெய்வதோடு, பாலியல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். இதனால் நரம்பு மண்டலம் வலிமையடைந்து, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையும் கட்டுப்படும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் அமைதியாக இருந்து ஒருவரைக் கொல்லும். ஒருவர் அதிகளவு மன அழுத்தத்திற்கு உட்பட்டால், அதனால் மன கவலை அதிகரித்து, முன்கூட்டியே விந்துவை வெளியேற்றும். எனவே மன அழுத்தத்தை எதிர்த்தப் போராட சிறந்த வழி போதிய ஓய்வு. மேலும் தினமும் தவறாமல் யோகா செய்வதன் மூலமும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

உணவுகள்

உணவுகள்

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் தங்கள் டயட்டில் குறிப்பிட்ட சில உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் விரைவில் விடுபடலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உணவுகளை உட்கொள்வதன் மூலம், பாலியல் பிரச்சனைகளான முன்கூட்டியே விந்து வெளியேறுவது, விறைப்புத்தன்மை பிரச்சனை போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

நம் அனைவருக்குமே அஸ்பாரகஸில் ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இது ஆண்களின் பாலியல் வாழ்வில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அஸ்பாரகஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் இதில் உள்ள வைட்டமின் ஈ, ஆண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

முட்டை

முட்டை

ஆய்வுகளில் வைட்டமின் டி ஆண்களின் பாலியல் திறமையுடன் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய வைட்டமின் டி முட்டையில் வளமான அளவில் அடங்கியுள்ளது. ஆகவே ஆண்கள் தங்களது அன்றாட உணவில் முட்டையை சேர்த்துக் கொள்வதன் மூலம், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

கேரட்

கேரட்

கேரட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், ஆண்களின் பாலியல் திறமைகளை மேம்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது. கேரட்டில் உள்ள வைட்டமின்கள் ஆணுறுப்பு தசைகளின் வலிமைக்கு உதவுவதோடு, ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவுகிறது.

ஓட்ஸ்

ஓட்ஸ்

முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த உணவு. ஓட்ஸில் உள்ள அதிகளவு செரடோனின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க உதவுவதோடு, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையையும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகளவிலான புரோட்டீன், ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும்.

இயற்கை வைத்தியங்கள்

இயற்கை வைத்தியங்கள்

இந்தியாவில் பழங்காலத்தில் இருந்து பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஓர் மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். ஆயுர்வேத மருத்துவ முறையின் மூலம், எப்பேற்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் இயற்கையாக தீர்வு காண முடியும். கீழே ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சில இயற்கை பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

குங்குமப்பூ மற்றும் பால்

குங்குமப்பூ மற்றும் பால்

குங்குமப்பூவில் இயற்கையாகவே பாலுணர்ச்சியைத் தூண்டும் பண்புகள் நிறைந்துள்ளது. இத்தகைய குங்குமப்பூவை வெதுவெதுப்பான மாட்டுப் பாலுடன் சேர்த்து கலந்து, இரவில் தூங்கும் முன் குடித்து வந்தால், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பாதாம், இஞ்சி, ஏலக்காய்

பாதாம், இஞ்சி, ஏலக்காய்

8-10 பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஊற வைத்த பாதாமை அரைத்து, ஒரு கப் சூடான பாலுடன் சேர்த்து, அதோடு ஒரு சிட்டிகை இஞ்சி பொடி, ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், ஆண்களின் பாலியல் பிரச்சனை நீங்கி, பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

அஸ்பாரகஸ் மற்றும் பால்

அஸ்பாரகஸ் மற்றும் பால்

* பழங்காலம் முதலாக அஸ்பாரகஸ் ஆண்களின் பாலியல் ஸ்டாமினாவை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது மனக் கவலையைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையையும் தடுக்கும்.

* ஒரு பாத்திரத்தில் 1 கப் பால் ஊற்றி, அதில் 2 டீஸ்பூன் அஸ்பாரகஸ் பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். அதுவும் இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது மிகவும் நல்லது.

பூண்டு

பூண்டு

* பூண்டில் உள்ள அல்லிசின் ஆண்களின் பாலியல் வாழ்க்கையை சிறக்க உதவும். முக்கியமாக இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

* அதற்கு 1 துண்டு பூண்டு பல்லை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் பூண்டின் முழு பலனையும் பெறலாம்.

தர்பூசணி

தர்பூசணி

நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும் தர்பூசணி, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையையும் தடுக்கும். அதற்கு தர்பூசணியை துண்டுகளாக்கி, அதன் மேல் சிறிது இஞ்சி பொடி மற்றும் உப்பு தூவி சாப்பிட வேண்டும். இப்படி ஆண்கள் சாப்பிட்டு வந்தால், ஆண்களின் பாலியல் பிரச்சனைகள் குணமாகும்.

பட்டை

பட்டை

பட்டை ஏராளமான மருத்துவ பண்புகளை தன்னுள் கொண்டது. இத்தகைய பட்டை பசியின்மையைப் போக்கும், மாதவிடாய் கால பிடிப்புக்களை சரிசெய்யும், முன்கூட்டி விந்து வெளியேறும் பிரச்சனையைத் தடுக்கும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியை 5 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, தினமும் உணவு உண்ட பின் இரண்டு வேளை குடிக்க வேண்டும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

* அஸ்வகந்தா உடலுறுப்புக்களின் வலிமையை மேம்படுத்துவதோடு, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும். மேலும் இது ஆண் மலட்டுத்தன்மை, ஆண்களின் பாலியல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு நல்ல தீர்வை வழங்கும்.

* அதற்கு 1 டீஸ்பூன் அஸ்வகந்தா வேர் பொடியை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து, சுவைக்கு தேன் கலந்து குடித்து வர, பாலியல் பிரச்சனைகள் சரியாகும்.

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி மற்றும் தேன்

* இஞ்சியிலும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பண்புகள் நிறைந்துள்ளன. இதுவும் பாலியல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதிலும் இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட பாலுணர்ச்சி அதிகரிப்பதோடு, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியும்.

* 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

* 1 1/2 லிட்டர் நீரில் சிறிது பூசணிக்காய் விதைகள், 2 துருவிய உருளைக்கிழங்கு, 5 பூண்டு பற்களை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* 10 நிமிடம் நன்கு கொதித்த பின், பாத்திரத்தை தட்டு கொண்டு மூடி வைத்து, பின் அதில் ஜாதிக்காய் பொடி மற்றும் சிறிது உப்பு சேர்த்து சூப் போன்று குடியுங்கள். இதனால்

அவகேடோ

அவகேடோ

அவகேடோ பழம் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். அதற்கு ஒரு பௌலில் தக்காளி, வெங்காயம், அவகேடோ ஆகியவற்றை துண்டுகளாக்கி, அதன் மேல் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு ஜூஸ், புதினா இலைகள், சிறிது சோம்பு சேர்த்து நன்கு கலந்து, சாலட் போன்று சாப்பிடுங்கள்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். அதில் இதய பிரச்சனைகள், மலச்சிக்கல், இரத்த சோகை, வயிற்றுப் போக்கு, அடிவயிற்று புற்றுநோய் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் பேரிச்சம் பழம் உடல் எடையை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆண்கள் சந்திக்கும் முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனைக்கும் பேரிச்சம் பழம் தீர்வளிக்கும். அதற்கு உலர்ந்த பேரிச்சம் பழத்தை காலை உணவின் போதோ அல்லது இரவில் படுக்கும் முன் பாலில் சேர்த்தோ சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Remedies To Stop Premature Ejaculation/Early Discharge

Here are some natural remedies to stop premature ejaculation or early discharge. Read on to know more...
Story first published: Thursday, January 25, 2018, 14:20 [IST]
Subscribe Newsletter