For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலும் விஷமாகும்..! இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால்..!

|

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலை தினம்தினமும் குடித்து வருகின்றனர். இது அவர்களின் அன்றாட உணவில் ஒரு அங்கமாக உள்ளது. பால் என்பது அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த ஒரு உணவாகும். எனவேதான், பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்கின்றனர். இது மனித இனத்திற்கு மட்டும் கிடையாது. பூமியில் உள்ள பெரும்பாலன ஜீவராசிகள் இவ்வாறுதான் தங்கள் முதல் கட்ட வாழ்வை தொடங்குகின்றன. மனிதன், ஒரு சில காலம் வரைதான் தாய்ப்பாலை அருந்துவான்.

benefits of eating banana with milk

பிறகு பசும்பாலைத்தான் மிகுதியாக எடுத்து கொள்வான். நம்மில் பலர் பால் சார்ந்த உணவையே அதிகம் உண்ணுவதாக சில அறிக்கை கூறுகிறது. ஆனால் பால் மட்டும் தனியாக குடித்தால் அது உடலுக்கு நன்மை தரும். மாறாக அதனுடன் வேறு சில உணவுகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவுதான். அவ்வாறு எந்தெந்த உணவு பொருட்களை நாம் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் எத்தகைய பக்க விளைவுகள் வரும் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு முதல் இறப்பு வரை..!

பிறப்பு முதல் இறப்பு வரை..!

ஒரு குழந்தையாக பிறந்த முதலே நாம் உண்ணும் முதல் உணவு தாய்ப்பால்தான். இதனின் மகத்துவம் சொல்லுவதற்கரியது. அதே போல ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் நம் கலாச்சார வழக்கப்படி பால் ஊற்றியே இறுதி சடங்கை முடித்து வைப்போம். ஆதலால்தான் பாலுக்கென்றே சில தனித்தன்மை இருக்கிறது. மற்ற உணவுகளை போலவே பாலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

எவ்வாறு நச்சு தன்மையாகும்..?

எவ்வாறு நச்சு தன்மையாகும்..?

பொதுவாகவே எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதனை வேறொரு உணவுடன் சேர்த்து சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை. குறிப்பாக இறைச்சி, மீன், பால் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளும்போது எவற்றுடன் அவற்றை சேர்த்து சாப்பிட கூடாது என்பதை நன்கு ஆராய வேண்டும். குளிர்ச்சி நிறைந்த ஒரு உணவுடன் அதிக வெப்ப தன்மை கொண்ட உணவை உண்டால் அது வயிற்று பகுதியை பெரிதும் பாதிக்கும். ஏனெனில் அதிக அமில தன்மை உடலுக்கே ஆபத்தாகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

பாலும் வாழைப்பழமும் நல்லதா..?

பாலும் வாழைப்பழமும் நல்லதா..?

நம்மில் பலர் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்த மில்க் ஷேக்கை அதிகம் விரும்பி அருந்துவோம். மேலும் சில இந்திய திருமண முறையில் பாலுடன் சேர்த்து வாழை பழத்தை மணமக்களுக்கு தருவார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றே. பாலையும் வாழைப்பழத்தையும் சேர்த்து உண்டால் அது வயிற்றுக்கு எரிச்சலை தரும். பாலில் உள்ள அதிக குளிர்ச்சி தன்மையும், வாழைப்பழத்தில் உள்ள அதிக வெப்ப தன்மையும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செரிமானம் ஆகும்போது நச்சு தன்மையாகி விடும். எனவே இனி இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பாலும் இறைச்சியும் எப்படி..?

பாலும் இறைச்சியும் எப்படி..?

இறைச்சியில் அதிக புரோட்டீன் இருப்பது நம் அனைவரும் அறிந்ததே. சாதாரணமாகவே இறைச்சியை மட்டும் உண்டால் அது செரிமானம் ஆக பல மணி நேரம் எடுத்து கொள்ளும். மேலும், பாலையும் இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் பல வேதி வினைகள் செரிமான மண்டலத்தில் ஏற்படும். எனவே இது செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை தந்து ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். அத்துடன் உடல் உபாதைகளை தரும்.

பாலும் ஸ்ட்ராபெர்ரியுமா..!

பாலும் ஸ்ட்ராபெர்ரியுமா..!

சிறிய பழமாக இருந்தாலும் ஸ்ட்ராபெர்ரி உடலுக்கு சில நன்மைகளை தருகின்றது. மற்ற பழங்களை போலவே இதிலும் சத்தான ஊட்டசத்துக்கள் இருக்கிறது. அதற்காக இதனையும் பாலையும் சேர்த்து உண்பது தவறான முடிவே. அவ்வாறு சாப்பிட்டால் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள அமில தன்மை அதிக வெப்பத்தை கொடுக்கும். மாறாக பால் குளிர்ச்சியை தரும். இவை இரண்டும் சேர்த்து ஜீரண பிரச்சினைகளை தருவதோடு அலர்ஜி, சளி, இருமல் ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மீனுடன் பாலா..?

மீனுடன் பாலா..?

சில விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை நாம் உண்ணுவோம். அதிலும் மீன்களை விடுமுறை நாட்களில் சாப்பிடவது வழக்கமாக கொண்டிருப்பார்கள். மீனில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தரும். ஆனால் மீன் சாப்பிட்ட பிறகோ அல்லது அதற்கு சிறிது நேரத்திற்கு முன்போ, பாலை எடுத்து கொள்ள கூடாது. மீறினால் இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும் இவை ரத்த ஓட்ட பிரச்சினை, இதயக்கோளாறு ஆகியவற்றை தரும்.

குளிர்பானத்துடன் பால்...!

குளிர்பானத்துடன் பால்...!

பலருக்கு காலையில் எழுந்த உடன் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வீட்டை விட்டு வெளியில் சென்ற சில மணி துளிகளில், வேறு எதாவது பானங்களை பருகுவார்கள். இதுதான் ஆபத்தாகும். பால் குடித்த அரை மணி நேரத்திற்குள் இது போன்ற பானங்களை குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் சில சமயங்களில் வேறு வித கோளாறுகளை உடலுக்கு தந்து விடும்.

எலுமிச்சையும் பாலும் என்னவாகும்..?

எலுமிச்சையும் பாலும் என்னவாகும்..?

சிலர் எலுமிச்சை ஜுஸ் குடித்துவிட்டு, உடனே பால் குடிப்பார்கள். இது எத்தகைய விளைவை உடலுக்கு உண்டாக்கும் என்பதை உணராமலேயே இதை செய்வார்கள். எலுமிச்சையில் உள்ள அதிக சிட்ரிக் அமில தன்மை பாலுடன் சேர்ந்து வேதி மாற்றங்கள் அடையும். மேலும் அவ்வாறு குடிக்கும் போது, குடலில் அலர்ஜி போன்றவை ஏற்படும். அத்துடன் ஜீரண மண்டலம் பாதிப்படையும்.

உடல் நலமே முதல் ஆதாரம்..!

உடல் நலமே முதல் ஆதாரம்..!

நமக்கு தோன்றுகின்ற உணவுகளை எல்லாம் சாப்பிடாமல், அவற்றிற்கென்று குறிப்பிடப்பட்டுள்ள உணவு தன்மையை அறிந்து உண்டால் எந்தவித பாதிப்பும் உடலுக்கு ஏற்படாது. அவற்றின் தன்மைக்கு எதிரெதிரான உணவுகளை உண்டால் அது உயிருக்கே வினையாகிவிடும். எனவே சாப்பிடும் உணவில் நிச்சயம் கவனம் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of Foods Should Not Consume With Milk

While many would talk about what to eat and what to include in your daily diet, little is conversed about how best to consume these ingredients and what NOT to do with them.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more