For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்க விந்து அடர்த்தி நார்மலா இல்லையா?... எப்படி தெரிஞ்சிக்கலாம்?...

  |

  விந்துவை பொருத்தவரை தண்ணியாக இருக்கிறதா இல்லை கெட்டியாக இருக்கிநதா என்று மட்டும் தான் யோசித்திருப்பீர்கள். ஆனால் அதில் பல்வேறு நிலைகள் உண்டு. அந்த விந்துவின் அடர்த்தி மூலம் உங்களுடைய உடலின் ஆரோக்கியத்தையும் கணக்கிட முடியும் என்பது தெரியுமா உங்களுக்கு? வயதிற்கேற்ப விறைப்புச் செயல்பாடு வீழ்ச்சியுறுவது போலவே, விந்து வெளியேற்றமும் மாறுபடும். அதன் அடர்த்தியிலும் பெரிய மாற்றத்தைக் கண்டறிய முடியும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  எந்த அளவு?

  எந்த அளவு?

  பலவீனமான வெளியேற்றம் உங்கள் உடல்நலத்தில் ஏதோ குறைபாடுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது எனலாம்.

  • உங்கள் விந்தின் அளவு நார்மலா? ஒரு டீஸ்பூனின் மூன்றில் ஒரு பாகத்தை விடக் குறைவாக உற்பத்தி செய்கிறீர்கள் என்றால், அது உங்களின் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளைச் சோதிக்க வேண்டிய நேரமாக இருக்கலாம்.

  • விந்தின் அளவு குறைதல், டெஸ்டோஸ்டிரோன் அல்லது நீரிழிவு போன்ற சுகாதாரப் பிரச்சினைகளின் அடையாளம் ஆகும்.

  • குறைந்த விந்து அளவிற்கான சில காரணங்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்படுகின்றன, எனவே உங்கள் மருத்துவரிடம் இந்த விஷயத்தைக் கொண்டு செல்ல பயப்பட வேண்டாம்.

  நிச்சயமாக, உங்கள் ஆணுறுப்பு உங்கள் இணையுடன் எவ்வாறு பொருந்தும் என்பதைக் காண அளவிட்டிருப்பீர்கள், ஆனால் உடலுறவின் பின் உங்கள் எரப்சன் (வெளியேற்றம்) மற்றவர்களுடன் ஒப்பிடும் போது எவ்வாறுள்ளது என்பதை ஒப்பீடு செய்ய மறந்துவிட்டீர்கள் என்பதே உண்மை.

  நார்மலா?

  நார்மலா?

  நீங்கள் விந்துவை வெளியேற்றும் அளவு சாதாரணமாக இருக்கிறதா? பெரும்பாலான ஆண்கள் , தங்கள் வெளியேற்றத்தின் அளவைக் கொண்டு கவலையுறுகிறார்கள் என்பதை விஸ்கான்சின் விஞ்ஞானம் மற்றும் உடல் ஆரோக்கியப் பள்ளியில் ஆண்கள் இனப்பெருக்க மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியலின் இயக்குநர், சிறுநீரகத் துறை துணைப் பேராசிரியர் டானியல் வில்லியம்ஸ், எம்.டி., கூறுகிறார்.

  உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய அளவுகோல்கள் படி, உங்கள் வெளியேற்றம் தேவையான அளவீட்டை விடக் குறைவாகவே இருந்தாலும், எந்த உடல் குறைபாடின்றி நீங்கள் நார்மலாகவே இருக்கலாம். ஆனால் நீங்கள் 1.5 மி.லி. அல்லது குறைவான விந்தை உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் ( ஒரு டீஸ்பூனின் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவாக) நீங்கள் உடனே விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது .

  குறைந்த விந்து அளவு பிரச்சனையா?

  குறைந்த விந்து அளவு பிரச்சனையா?

  வயதிற்கேற்ப விறைப்புச் செயல்பாடு வீழ்ச்சியுறுவது போலவே, விந்து வெளியேற்றமும் பொதுவாக இதேபோன்ற போக்கைப் பின்பற்றுகிறது என்று டாக்டர் வில்லியம்ஸ் கூறுகிறார்.

  ஆகையால் கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் விந்து வெளியேற்றம் குறைவது இயல்பானதே. அது வயது தொடர்பான சரிவாகவே இருக்கலாம். இது வாழ்க்கையின் எந்த தசாப்தத்திலும் தொடங்கலாம்.

  சில ஆண்களுக்கு இந்த பிரச்சினை 20 மற்றும் 30 வயதுகளில் தொடங்கலாம், ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு எந்த மாற்றங்களும் தெரிவதில்லை," என்று அவர் கூறுகிறார். நீங்கள் விந்து வெளியாவதில் திடீர் வேறுபாட்டை கவனிக்கிறீர்களானால் ஏதோ அசாதாரண நிகழ்வு நடக்கிறது என்று அர்த்தம்

  அளவு குறைவதற்கான காரணிகள்

  அளவு குறைவதற்கான காரணிகள்

  விந்து வெளியேற்ற அளவு குறைய கீழுள்ள பல அடிப்படைக் காரணிகள் பல உள்ளன.

  இனப்பெருக்க இயக்கக்குறை எனப்படும் ஹைப்போ கொணடிஸம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம் (குறைந்த டெஸ்டோஸ்டிரோனின் உத்தியோகபூர்வ சொல்). விந்து கெட்டியாதல் குறைபாடு, ஆரோக்கியமற்ற விந்து மற்றும் விறைப்புத்தன்மை குறைவோடு, உங்களின் விந்து வெளியாதல் அளவையும் இந்த லோ- டெஸ்டோஸ்டிரோனால் குறைக்க முடியும்.

  அறிகுறிகள்

  அறிகுறிகள்

  குறைந்த அளவில் விந்து வெளியேற்றம் நிகழும்போது, சோர்வு, பலவீனம் அல்லது கவனச் சிதறல் போன்ற பல அறிகுறிகளையும் நீங்கள் உணரலாம்.

  இவையனைத்தும் உங்கள் மருத்துவர் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை பரிசோதிப்பதற்கான தூண்டுதல்களாகும் என்று டாக்டர் வில்லியம்ஸ் கூறுகிறார். மேலும் உங்கள் உங்கள் ஆண்குறி, விதைப்பை மற்றும் விதைகள் சுருக்கம் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

  நீரிழிவு ஆபத்து

  நீரிழிவு ஆபத்து

  நீங்கள் நினைத்துப் பார்க்காத கண்டிஷன் ஒன்றும் உள்ளது, அது, நீரிழிவு நோய். உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சிறிது நேரம் அதிகரித்தால் கூட, அது நரம்புகள் மற்றும் உங்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இந்த நிலை நரம்புகள் சிக்னல்களை கடத்துவதை கடினமாக்குகிறது, எனவே இது விறைப்புத்திறன் மற்றும் விந்து வெளியேறுதல் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கலாம்.

  நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வித்தியாசமான "பிற்போக்கு விந்து வெளியேற்றம்" எனும் நிலையும் உருவாகலாம். இதில் விந்தானது, ஆண்குறி வழியே வெளியேறுவதற்குப் பதிலாக சிறுநீர்ப்பைக்குள் பின் நோக்கிச் செல்லும் வியத்தகு நிலைமையை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

  மல்டி ஸ்க்ளெரோசிஸ் அல்லது முதுகுத் தண்டு காயங்கள் போன்ற மற்ற நரம்பியல் சிக்கல்களும் இதேபோன்று குறைந்த அளவு விந்து வெளியேற்றப் பிரச்சனைக்குக் காரணமாகலாம்.

  புரோஸ்டேட் பெருக்கம் ஏற்படும் போதும் விந்து வெளியேற்ற அளவு குறைவதை நீங்கள் உணரலாம். உயர் இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக பிரச்சினைகளுக்கு ஆல்ஃபா பிளாக்கர்கள் போன்ற மெட்ஸை எடுத்துக் கொண்டால் அல்லது நீங்கள் சமீபத்தில் வயிற்று அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் விந்து வெளியேற்ற அளவு குறைவதை நீங்கள் உணரலாம்.

  என்ன செய்ய வேண்டும்?

  என்ன செய்ய வேண்டும்?

  உங்கள் வெளியேற்றம் ஆளை அடித்து வீச வேண்டிய வேகத்தில் வருவதற்கு பதிலாக சொட்டுச் சொட்டாக வருவது போல் நீங்கள் உணர்கிறீர்கள்.

  உண்மையில், சமீபத்திய பிரேசிலிய ஆய்வின் படி, அவர்களது வெளியேற்ற அளவில் திருப்தி இல்லாத ஆண்கள் அதை மனதளவில் கூட எண்ணாத ஆண்களைவிட உளவியல் மற்றும் உறவு ஆரோக்கியத்தில் பின்தங்கியே உள்ளனர்.

  சில ஆண்கள் தங்கள் விறைப்புத் தன்மையின் குறியீடாக விந்து வெளியாகும் அளவைக் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ,அதை ஆண்மைத் தன்மையின் குறியீடாகக் கருதுகிறார்கள் என்கிறார் டாக்டர் வில்லியம்ஸ். அவர்கள் பாலியல் செயல்பாடு குறைந்துவிட்டதாக எண்ண ஆரம்பித்தால் அது அவர்களின் வாழ்வின் மற்ற களங்களைப் பாதிக்கும்.

  எனவே விந்து வெளியேற்ற அளவு குறிப்பிடத்தக்க அளவைவிட குறைவாக இருப்பதை நீங்கள் கவனித்தால், பதட்டமடையாமல் அமைதியாக ஒரு சிறுநீரக மருத்துவருடன் சந்திப்பை ஏற்படுத்துவது நல்லது. அதன் மூலம் உங்கள் எஜுகேலேட்டரி செயலிழப்பை மதிப்பீடு செய்யலாம் என டாக்டர் வில்லியம்ஸ் கூறுகிறார்.

  இதில் டெஸ்டோஸ்டிரோன் குறைவு அல்லது நீரிழிவு போன்ற சில காரணிகளுக்கான சோதனைகள் அடங்கியிருக்கலாம். உங்களுடைய மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை வரலாற்றைக் கொண்டும் உங்கள் விந்தணுக் குறைவுக்கான எந்தவொரு காரணியையும் உங்கள் மருத்துவர் கண்டறியலாம்.

  சிகிச்சை

  சிகிச்சை

  விந்து குறைவுக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால் அதற்கு அடுத்தபடியாக அதை சரிசெய்வதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

  குறைந்த டெஸ்டோஸ்டிரோன் போன்ற குறைந்த விந்து அளவிற்கான சில காரணங்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கப்படுகின்றது .இந்த குறைந்த டெஸ்டோஸ்டிரோனால் உருவாக வாய்ப்புள்ள புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய், மற்றும் இறப்பு ஆகியவற்றின் ஆபத்தை குறைக்க முடியும்.

  ஆண்மை அதிகரிக்க

  ஆண்மை அதிகரிக்க

  எடை இழத்தல், பளுத் தூக்குதல், ஆல்கஹால் நுகர்தலைத் தடுத்தல் ஆகியவை உங்கள் விந்து வெளியேற்ற அளவை மீண்டும் பெற உதவலாம். ஒரு ஆரோக்கியமான வெளியேற்றம் தவிர, மற்ற நல்ல விளைவுகளையும் நீங்கள் கவனிக்கலாம்.

  உங்கள் விறைப்புப் பிரச்சினைகளின் மூலகாரணம் நீரிழிவு நோயாக இருந்தால், இந்த நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க உங்கள் மருத்துவரால் எதையாவது செய்ய முடியுமா எனப் பாருங்கள் என மயோ கிளினிக் உங்களுக்குப் பரிந்துரை செய்கிறது. இந்த நோயைக் கையாளும் அதிக உதவிக்குறிப்புகளுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான உணவுப் பட்டியலைப் பார்க்கவும். உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயிருந்தால், மோசமான நிலையை எளிதாக மாற்றி அமைக்கலாம் என நியூகேஸில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ராய் டெய்லர், எம்.டி கூறுகிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Is Your Semen Volume Normal? Here's How to Tell.

  Low semen volume could be a sign of health issues like low testosterone or diabetes.
  Story first published: Monday, June 25, 2018, 12:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more