எப்பவுமே வீக்கா இருக்கா மாதிரியே தோணுதா?... இத செஞ்சா உடனே சரியாகிடும்...

Posted By: Sathya Karuna
Subscribe to Boldsky

உங்களுக்கு தொடர்ந்து இருமல்,எல்லா நேரத்திலும் காய்ச்சல் மற்றும் எப்போதும் நுகர்தல் சம்பந்தமான தொந்தரவு இருந்தால்,நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறீர்கள் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டிய நேரமாக இருக்கலாம்.

health

உங்கள் நோய் எதிர்ப்பு முறையின் ஆரோக்கியத்தில் வாழ்க்கைமுறை ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்பதால், நீங்கள் நோயைத் தவிர்ப்பதற்காக சில ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணங்கள்

காரணங்கள்

தூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்.நீங்கள் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பைக் கொண்டிருந்தால், உங்கள் உடல் தொற்றுக்கு எதிராக போராட முடியாது.

அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும். வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களின் மாற்றத்தைத் தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுத்துச் செல்லும் போது நல்ல ஊட்டச்சத்து முக்கியமானது. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுடன் உடல் சார்ந்த செயற்பாடானது ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும், நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்கவும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த சுகாதாரத்தை ஊக்குவிக்க முடியும். எனவே, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களில் சிலவற்றை பகிர்ந்துள்ளோம்.

தண்ணீர்

தண்ணீர்

உடலுக்கு போதிய நீர் கிடைத்தால் தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவும். நீரேற்றம் தங்கியிருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். எனவே, ஒவ்வொரு நாளும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று எப்படித் தெரியும்? கூடுதல் பயன்களுக்காக, ஒவ்வொரு நாளும் எட்டு குவளை தண்ணீர் குடிக்க சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. எட்டு குவளை தண்ணீர் என்பது சுமார் 2 லிட்டர் அல்லது அரை கேலன் தண்ணீர்ருக்கு சமமாகும்.

தூக்கம்

தூக்கம்

நீங்கள் போதுமான அளவு தூங்கவில்லை என்றால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படுகிறது மற்றும் நீங்கள் நோயாளிகளாக வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தூங்கும்போது, உடலை நோயிலிருந்து மீளச்செய்யவும், சரிசெய்யவும், புத்துணர்ச்சி பெறவும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சுகாதார நிபுணர்கள் ஒவ்வொரு இரவும் ஆறு முதல் எட்டு மணிநேரம் வரை தூங்குவதை பரிந்துரைக்கின்றனர்.

செல்போன் ஸ்கிரீன்

செல்போன் ஸ்கிரீன்

இதைப் பற்றி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், உங்கள் ஃபோன் திரையில் நீங்கள் நினைத்ததை விட மோசமாக அழுக்கடைந்துள்ளது. ஏனென்றால், தொலைபேசியை எந்த பரப்பில் வைத்தாலும் அது ஏதாவது கிருமிகளை ஈர்த்துகொள்கிறது. மேலும், உங்கள் கைகள் கிருமிகளால் நிரப்பப்படுகின்றன, அவை ஃபோனிலும் மற்ற பொருட்களிலும் மாற்றப்படுகின்றன. அவைகளை தொடர்ந்து தொட்டு, ஆனால் அவற்றை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவது, உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உங்கள் தொலைபேசி திரையை துடைக்க துடைப்பான்கள் பயன்படுத்தலாம்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

நோயெதிர்ப்பு மண்டலத்தில், மன அழுத்தம் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மன அழுத்தம் போக்க வேண்டும். மன அழுத்த அளவை குறைப்பதற்காக தினசரி தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் தொடங்கலாம். மன அழுத்தம் அளவை குறைப்பதை தவிர, யோகா மற்றும் தியானம் உங்கள் உடல் மற்றும் மனநல நலம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். யோகா சமநிலை, நெகிழ்வு மற்றும் பலத்தை மேம்படுத்துகிறது; தியானம் மன அழுத்தம், கவலையை நிவர்த்தி செய்கிறது மற்றும் புத்தி கூர்மையை மேம்படுத்துகிறது.

துத்தநாகத்தை சேர்த்தல்

துத்தநாகத்தை சேர்த்தல்

துத்தநாகம் சளியை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் துத்தநாகத்தை எடுத்துக் கொண்டால், அதை தொண்டையில் தங்க அனுமதிக்கும் ஒரு மருந்து(ஸிரப்) வடிவில் அதை எடுத்துக் கொள்ளுங்கள். துத்தநாக முனை ஸ்ப்ரேஸ் பயன்படுத்தப்படக்கூடாது, அவர்கள் மணத்தை இழக்க நேரிடலாம். கூடுதலாக, நீங்கள் உங்கள் உணவில் சிப்பிகள், மாட்டிறைச்சி, ஆட்டுக்குட்டி, கறுப்பு சாக்லேட், பன்றி இறைச்சி, கோழி, கொட்டைகள், கீரை முதலியன துத்தநாகம் நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம்.

இயற்கை காற்று

இயற்கை காற்று

வெளிப்புற காற்றானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பாதையில் ஒரு நடைக்கு செல்வதும், புதிய காற்று சுவாசிக்கப்படுவதும் மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. புதிய காற்று இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, மன அழுத்ததிலிருந்து நிவாரணம் வழங்குகிறது மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கிறது. வெளியில் இருப்பது உங்கள் உடலுக்கு வைட்டமின் D-யை போதுமான அளவிற்கு அளிக்கும், மற்றும் வெளியில் தரம் திறந்த காற்று நன்றாக இருக்கும்.

சூடான நீர்

சூடான நீர்

உடம்பு சரியில்லாமல் போவதை தடுக்கக்கூடிய அற்புதமான பயன்கள் சூடான நீரில் உள்ளன. சூடான நீரானது மூக்கு வழியாக சளி வெளியேற்றத்தை அதிகரிக்க முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது, இது சைனஸ் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. சூடான தேநீர் அல்லது சூடான நீரைக் குடிப்பதால் அது நோயை எதிர்த்து அதிசயங்களைச் செய்கிறது.

தாவர எண்ணெய்கள் (Essentiaal oils)

தாவர எண்ணெய்கள் (Essentiaal oils)

தாவர எண்ணெய்கள் வலி, மன அழுத்தம் மற்றும் பிற உடல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் குறைக்க உதவும். ஆர்கனோ தாவர எண்ணெய்கள் மற்றும் thieves தாவர எண்ணெய்கள் உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு வலிமையை அதிகரிக்க முடியும் அடி மற்றும் முதுகெலும்புகளின் அடிவாரங்களில் இருந்து பதட்டத்தை நீக்க முடியும். ஆர்கனோ தாவர எண்ணெய் நோயைக் குறைப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு ஒரு பயனுள்ள மாற்று என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

கர்ஷீஃப்

கர்ஷீஃப்

உங்கள் கை துண்டுகள் அல்லது குளியல் துண்டுகள் எவ்வளவு காலத்திற்குள் மாற்றுவீர்கள்? கை துண்டுகளில் கிருமிகளுக்கு அதிக வாய்ப்புள்ளது, ஏனென்றால் தினமும் பல முறை அதைப் பயன்படுத்துகிறீர்கள், மேலும் அவை உங்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை. எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் அவற்றை மாற்ற வேண்டும். ஒரு ஆய்வில், கில்லிஃபார் பாக்டீரியா 89 சதவிகிதம் சமையலறை துண்டுகளிலும் மற்றும் ஈ.கோலி 26 சதவிகிதம் கை துண்டுகளிலும் காணப்பட்டன.

தயிர்

தயிர்

யோகர்ட் ஒரு புரோபயாடிக் உணவு ஆகும், இதில் டன் கணக்கில் சுகாதார நலன்கள் உள்ளன. யோகர்ட் உங்களை உடல்நலக் குறைவு ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உங்கள் குடல் நுண்ணுயிரியில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான குடல் உடலில் வீக்கத்தை குறைக்கிறது, இதனால் சாத்தியமான தொற்றுநோய்களைத் தாக்குவதற்கு இது அனுமதிக்கிறது. மேலும், புரோபயாடிக்குகள் மேல் சுவாசக் குழாய் தொற்றுக்களைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Incorporate These 10 Healthy Habits To Avoid Getting Sick

If you are constantly coughing, feeling feverish all the time and always sniffling, then it may be time to re-evaluate how you are living your life.
Story first published: Monday, April 16, 2018, 16:00 [IST]