For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி செய்கிறவர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அதிகப்படியான உடற்பயிற்சி மேற்கொள்வதினால் ஏற்படுகிற சிக்கல்களைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

|

தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது ட்ரக்கிங் செல்கிறவர்கள் இந்த அடிப்படையான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டியதுஅ அவசியம்.

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடலில் லேக்டிக் அமிலம் சுரக்கும் இது தசைகளுக்கு கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜனை தடுத்திடும் என்பதால் போதுமான எனர்ஜி கிடைக்காது அவ்வப்போது பிடிப்பு வலி ஆகியவை ஏற்படும். அதிகமாக இந்தப் பிரச்சனை கால்களுக்குத் தான் ஏற்படுகிறது. தசைகள் கார்போஹைட்ரேட்டிலிருந்து தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும். இதற்கு ப்யுர்வேட் என்ற காம்பவுண்ட் தேவைப்படுகிறது.

ஆக்ஸிஜன் போதுமான அளவு இருக்கும் போது இந்த வேலை எளிதாக நடைபெறும். ஆக்ஸிஜன் அளவு குறைந்தால் இந்த ப்யுர்வேட் லேக்டிக் அமிலமாக மாறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன நடக்கும் :

என்ன நடக்கும் :

தொடர்ந்து அதிகப்படியான வேலையை கொடுப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். லேக்டிக் அமிலம் அதிகரித்தால் நம் உடலில் இருக்கிற செல்களின் அமில அளவு அதிகரிக்கும் அதனால் நம் உடலின் மெட்டபாலிசம் சீர்குலையும் இதைத் தவிர எரிச்சல், பிடிப்பு வலி, சோர்வு ஆகியவை ஏற்படும்.

அதனால் தான் அதீத உடற்பயிற்சியும் செய்யக்கூடாது என்கிறார்கள். இப்படி உடலில் லேக்டிக் அமிலம் சேராமல் தவிர்க்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

அதிக எடை :

அதிக எடை :

தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறவர் என்றாலும் அதீத கனமானவற்றை தூக்கும் போது சற்று கவனமாக இருக்கவும்.பயிற்சியாளர் அறிவுரையின்றி நீங்களாக எதுவும் செய்ய வேண்டாம்.

வெயிட் லிஃப்டிங் செய்கிறவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும். ஏனென்றால் இந்தப் பயிற்சிகளின் போது உங்களுக்கு கூடுதலான ஆக்ஸிஜன் தேவைப்படும்.

ஆயின்மெண்ட் :

ஆயின்மெண்ட் :

பிடிப்பு வலி ஏற்பட்டால் மென்தால் கலந்திருக்கக்கூடிய ஆயின்மெயிண்ட் தடவலாம். இதைத் தடவுவதால் உங்களுக்கு ரத்த ஓட்டம் கிடைப்பதினால் ரத்த ஓட்டம் சீராகிடுவதால் வலி குறைவது போலத் தோன்றுகிறது.

வலி குறைந்தவுடன் அவை சரியாகவிட்டதாக நினைக்க வேண்டாம். திடீரென்று ஒரு நாள் பெரிய பிரச்சனையாகவும் வந்து நிற்க வாய்ப்புள்ளது அதனால் அடிக்கடி இது போன்ற பிடிப்பு வலி ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

சுடுநீர் :

சுடுநீர் :

வெளியே வியர்க்க விறுவிறுக்க விளையாடிவிட்டோ அல்லது பயிற்சி எடுத்துக் கொண்டு திரும்புபவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கவே விரும்புவார்கள் ஆனால் சூடான தண்ணீரில் குளிப்பது தான் மிகவும் நல்லது. இதனால் இறுக்கமான தசைகள் எல்லாம் சற்று தளர்வுறும் லேக்டிக் அமிலம் ஒரேயிடத்தில் சேர்வது தவிர்க்கப்படும். இதனால் வலிகளிலிருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

லேசான சூடு இருப்பதுடன் உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிற அளவுக்கு சற்று அதிக சூடாக குளிக்கலாம்.

ஆழமான மூச்சு :

ஆழமான மூச்சு :

உடற்பயிற்சியோ அல்லது நீண்ட தூர நடை பயணத்திற்கு பிறகு உடல் முழுவதும் கடுமையாக வலித்தால் ரிலாக்ஸாக படுங்கள். உங்களால் முடிந்தளவு மூச்சுக்காற்றினை ஆழமாக சுவாசித்து வெளியிடுங்கள்.

அதாவது உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு மூச்சுக்காற்றை உள்ளிழுக்க வேண்டும். இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தால் லேக்டிக் அமிலம் அதிகரிக்காது.

 மசாஜ் :

மசாஜ் :

அதீத வலி ஏற்படும் போது சட்டென குறைப்பதற்கு இது பயன்படும். ஆயில் அல்லது ஏதேனும் பாம் அப்ளை செய்து மசாஜ் செய்திடுங்கள். தீவிரமாகவும் அழுத்தமாகவும் மசாஜ் செய்யாமல் ஜென்டிலாக செய்யுங்கள் .

உங்களால் முடியவில்லை என்றால் மருத்துவரிடம் சென்றிவிடுங்கள். இது சட்டென அதன் தாக்கத்தை குறைத்திடும். ஒத்தடம் கூட கொடுக்கலாம்.

மக்னீசியம் :

மக்னீசியம் :

அதிகப்படியான மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் எனர்ஜி மீண்டும் கிடைத்திடும். இதனால் லேக்டிக் அமிலம் சேராமல் தவிர்க்க முடியும்.

கீரை, பூசணி விதைகள், கிட்னி பீன்ஸ்,தானியங்கள் ஆகியவற்றில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது.

விட்டமின் பி :

விட்டமின் பி :

விட்டமின் பி உடலில் குலுக்கோஸ் உடல் முழுவதும் கொண்டு சேர்க்க உதவிடும். உடலில் எனர்ஜி அதிகரிக்கும். பச்சை காய்கறிகள், தானியங்கள், பட்டாணி, பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், மீன், முட்டை ஆகியவற்றில் விட்டமின் பி அதிகமாக இருக்கிறது.

செரடின் என்பது இயற்கையான அமினோ அமிலம். இதைத் தவிர ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆண்ட்டிஆக்ஸிடண்ட் :

ஆண்ட்டிஆக்ஸிடண்ட் :

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகமிருக்கும் உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் லேக்டிக் அமிலம் சேராமல் தவிர்க்க முடியும். பெர்ரீஸ்,நட்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாது உணவு விஷயத்திலும் கவனமாக இருந்தால் இது போன்ற அமிலம் சேர்ப்பது தான் முக்கியம்.

கவனம் :

கவனம் :

ஒரு வாரம் செய்வது, பின் ஒரு வாரம் எதுவும் செய்திடாமல் இருப்பது அதன் பிறகு ஒரே நேரத்தில் தீவிரமான பயிற்சி மேற்கொள்வது தவிர்க்க வேண்டும். தினமும் சீரான பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

முக்கியமாக போதுமான அளவு தண்ணீர் குடித்திட வேண்டும் உடலில் தண்ணீரின் அளவு குறைந்தால் அது ஆக்ஸிஜன் அளவு குறைத்திடும். பிறரை விட உங்களுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக ஸ்ட்ரச்சிங் செய்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Things To Note Who Do Extreme Exercise

Important Things To Note Who Do Extreme Exercise
Story first published: Friday, June 15, 2018, 17:47 [IST]
Desktop Bottom Promotion