For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சண்டே ஸ்பெஷல் சண்டேவா மாற செய்ய வேண்டியவை

By Saranraj
|

சண்டே வராதே ஓய்வெடுக்கத்தான் என்பது உலகம் முழுவதும் உள்ள கருத்து. சொல்லப்போனால் அதுதான் உண்மையும்கூட. ஆனால் மற்றொரு கோணத்தில் பார்த்தால் அடுத்த வாரத்தை வெற்றிகரமாக தொடங்குவதற்கு தயாராக வேண்டிய நாளும் சண்டேதான். சண்டே என்பது கடந்த வார சோம்பல்களில் இருந்து விடுபடவும், அடுத்த வார வேலைக்கு தயராகவும் கார்ப்பரேட் கொடுத்த ஒரு நாள் அவ்வளவுதான்.

how to make Sunday a special day

வேலையே இல்லாமல் இருந்தாலும் சண்டே அன்று ஓய்வெடுப்பது என்பது கூடுதல் சிறப்புதான். ஆனால் வெறும் ஓய்வோடு நிறுத்திவிடாமல் வரப்போகும் நாட்களுக்கு தேவைப்படும் சின்ன சின்ன வேலைகளை முடித்து விட்டால் அந்த வாரம் முழுவதும் நிம்மதியாக இருக்கலாம். இங்கே சண்டேவை ஸ்பெஷல் சண்டேவாகவும், உபயோகமான நாளாக மாற்றவும் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம்

தூக்கம்

சண்டே ஒருநாள்தான் ஓய்வு என்பதற்காக பாதி நாளை தூக்கத்திலியே கழித்து விடாதீர்கள். அதற்காக தூங்க வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. சனிக்கிழமை முழுவதும் விழித்திருந்து விட்டு சண்டே 12 மணிக்கு எழுவதற்கு பதிலாக சனிக்கிழமை இரவு சீக்கிரம் உறங்கி சண்டே கொஞ்சம் தாமதமாக எழுந்தால் பகல் பொழுதில் உங்கள் நாளை மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் செலவழிக்கலாம் அல்லவா?.

பிரிட்ஜை சுத்தப்படுத்தலாம்

பிரிட்ஜை சுத்தப்படுத்தலாம்

இது ஒரு மிகவும் முக்கியமான பணியாகும். சென்ற வாரம் வாங்கிய பாலிலிருந்து பழங்கள் வரை உங்கள் பிரிட்ஜை அடைத்து கொண்டிருக்கும். இந்த வாரம் ஷாப்பிங் சென்று வந்தால் அந்த நேரத்தில் உட்கார்ந்து அதை செய்வதற்கு பதிலாக சண்டே காலையில் ஒரு சூப்பர் காபியை குடித்து விட்டு இந்த வேலையை செய்தால் அடுத்த வாரம் முழுவதும் பிரிட்ஜை பற்றி கவலைப்பட தேவையில்லை அல்லவா?இது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். அதுமட்டுமின்றி வாரம் முழுவதும் வேலை செய்யும் உங்கள் மனைவிக்கு சண்டே ஒருநாளாவது இதுபோன்ற உதவி செய்து ஓய்வு கொடுங்கள். இது உங்களின் மரியாதையையும் அவர்களிடம் உயர்த்தும்.

பர்ஸ் மற்றும் பேக்கை சுத்தப்படுத்துங்கள்

பர்ஸ் மற்றும் பேக்கை சுத்தப்படுத்துங்கள்

வாரம் முழுவதும் சேமித்து வைத்த பஸ் டிக்கட், ஹோட்டல் பில் என பல தேவியில்லாத பொருட்களை உங்கள் பர்ஸில் பொக்கிஷம் போல சேர்த்து வைத்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் முதலில் தூக்கி எறியுங்கள். பர்ஸை பர்ஸ் போல உபயோகிக்க பழகுங்கள்.

ஷாப்பிங்

ஷாப்பிங்

வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்களை சண்டேவே வாங்கி வைத்து விடுவது ஆகச்சிறந்த புத்திசாலித்தனம். பால் மற்றும் காய்கறிகள் தவிர ஏனைய அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துவிடுங்கள். முடிந்தால் மாத ஷாப்பிங்கையே ஒரே சண்டேயில் முடித்து விடுங்கள். இல்லையெனில் அடிக்கடி கடைக்கு ஓட வேண்டியிருக்கும்.

திங்கள் கிழமை உணவு

திங்கள் கிழமை உணவு

சண்டே தொடங்கும்போது இருக்கும் உற்சாகம் அது முடியும்போது இருக்காது. காரணம் அடுத்தநாள் முதல் மீண்டும் இயந்திரமாய் செயல்பட வேண்டும். இதில் முக்கிய கவலை காலையில் எழுந்து சமைப்பது. இதனை சமாளிக்க சண்டே இரவே ஏதாவது எளிதான உணவை சமைத்து வைத்துவிடுங்கள். திங்கள் கிழமையை டென்ஷன் இல்லாமல் வரவேற்க தயாராகுங்கள்.

மாலைக்குள் வீடு திரும்புங்கள்

மாலைக்குள் வீடு திரும்புங்கள்

எந்த வேலையாக இருந்தாலும் அவற்றை முடித்துக்கொண்டு மாலைக்குள் வீடு திரும்பி விடுங்கள். சண்டே மாலை என்பதை குடும்பத்திற்காக ஒதுக்க பழகி கொள்ளுங்கள். மனைவி, குழந்தைக்ளுட்டன் விளையாடுவது, செல்ல சண்டை போடுவது என அவர்களுக்காகவும் உங்கள் நேரத்தை ஒதுங்குகுங்கள். இல்லையெனில் நீங்கள் செல்லும் இடத்திற்கு அவர்களை அழைத்து செல்லுங்கள்.

உணவு

உணவு

சண்டே வருவதே சாப்பிடத்தான் என்னும் எண்ணமும் பரவலாக உள்ளது. அதுவும் உண்மைதான். உங்களுக்கு பிடித்த உணவை பிடித்த அளவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் அதற்காக இருக்கும் இடத்திற்கு உணவு வரவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அன்று ஒருநாளாவது மனைவிக்கு சமயலறையிலிருந்து விடுதலை கொடுங்கள். அவர்களுடன் சேர்ந்து சமைக்க முயலுங்கள் உங்களுக்கு சமைக்க தெரியுமெனில் நீங்களே சமைத்து குடும்ப உறுப்பினர்களுக்கு பரிமாறுங்கள். இவை உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

நண்பர்களை சந்தியுங்கள்

நண்பர்களை சந்தியுங்கள்

இதை சொல்லித்தான் செய்ய வேண்டுமென்றில்லை. சண்டே வந்தாலே நாள் முழுவதும் நண்பர்களுடன் செலவழித்து விட்டு சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரும் பழக்கமே இங்கு பலருக்கும் உள்ளது. சிலர் அன்றுகூட அலுவலக பணி என்று வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவார்கள். இது இரண்டுமே தவறான பழக்கங்கள்தான். எனவே குடும்பத்தினருடன் இருப்பது போல நண்பர்களுடனும் நேரம் செலவிடுங்கள் " அளவாக ". அவர்களும் அவர்களின் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வேண்டுமல்லவா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to make Sunday a special day

Sunday is a very special day is for everyone. Because that is the only day when we are all out from office tension, work pressure, etc., Sunday is the only day we live in our own world.
Story first published: Saturday, August 25, 2018, 18:48 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more