For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு பிடித்த கலர் நீலமா, சிவப்பா, வெள்ளையா..? கலர்கள் கூட உங்களை பற்றி சொல்கிறதாம்..!

|

வண்ணங்கள் பல ஆயிரம். அதில் நமக்கு தெரிந்தவை மிக குறைந்த அளவே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான வண்ணம் எப்போதும் பிடிக்கத்தான் செய்யும். எங்கு சென்றாலும் அந்த நிறத்தை பார்த்தால் அவரவர்களுக்கு மனதில் புதுவித சந்தோசம் ஏற்படும்.

உங்களுக்கு பிடித்த கலர் நீலமா, சிவப்பா, வெள்ளையா..? கலர்கள் கூட உங்களை பற்றி சொல்கிறதாம்..! எப்படினு

ஒவ்வொரு நிறத்திற்கும் அறிவியல் பூர்வமான குணாதிசயங்களும், ஆரோக்கிய நலன்களும் உள்ளதாம். உங்களுக்கு பிடித்த நிறம் எதுவோ அதை பற்றிய ரகசிய குறிப்பை இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எனக்கு பிடித்த கலர்..!

எனக்கு பிடித்த கலர்..!

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நிறங்கள் அவர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளது. எழுதும் பேனா முதல் நமது கூடவே வைத்து கொள்ளும் ஸ்மார்ட் போன் வரை எல்லாவற்றிலும் அவரவர்களுக்கு பிடித்தமான நிறத்தை பார்த்தே வாங்குவார்கள். இங்கு உள்ள ஒவ்வொரு நிறமும் பலவித குணாதிசயங்களையும், மன நிலையையும் குறிக்கிறதாம்.

சிவப்பு

சிவப்பு

"புரட்சிகரமான நிறம்" என கருதப்படும் இந்த நிறம் உங்களின் மன நிலையை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை அறிய ஆர்வமா..? ஒற்றை குறிக்கோளை நோக்கமாக வைத்து கொண்டு செயல்படுதல், கோபம், பயம் ஆகியவற்றை இந்த நிறம் குறிக்கிறது. தனது குறிக்கோளில் தீவிரமாக இருப்போர், இதனால் தான் சிவப்பு நிறத்தில் உடை அணிகின்றனர்.

பச்சை நிறமே.. பச்சை நிறமே..!

பச்சை நிறமே.. பச்சை நிறமே..!

பல இடங்களில் தொடக்கத்துக்கான மைய நிறமாக இது கருதப்படுகிறது. நீங்கள் பச்சை நிறத்தை பார்த்தாலோ அல்லது உங்களுக்கு அதிகமாக பிடித்திருந்தாலோ உங்களின் மனநிலை எப்போதும் சாந்தமாக இருக்குமாம். மேலும், நீங்கள் பெரிய இயற்கை விரும்பியாக இருக்க கூடும்.

நீல நிறம்

நீல நிறம்

நீல நிறத்திற்கென்று ஒரு தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதிக புத்தி கூர்மையையும், மென்மையான மனதையும் இந்த நிறம் தரவல்லது. இந்த நிறத்தை விரும்புபவர்கள் சீரான மனநிலை கொண்டவராக இருப்பார்கள்.

MOST READ: ஆண்களே, உங்களின் தசைகளில் இந்த அறிகுறிகள் இருந்தால், நீங்கள் ஆபாயகரமான நிலையில் உள்ளீர்கள்..!

மஞ்சள்

மஞ்சள்

இந்த மஞ்சள் நிறத்திற்கு பின் ஒரு ஆழமான உளவியல் உள்ளது. மஞ்சள் நிறம் நேர்மறையான எண்ணங்களையும், அதிக மன உறுதியையும் தர வல்லது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மஞ்சள் நிற விரும்பிகளுக்கு இந்த நன்மைகள் கிடைக்க கூடும். மேலும், அடர்ந்த மஞ்சள் சிறிது பயத்தையும், எதிர்மறையான எண்ணங்களையும் மூளைக்கு அனுப்ப கூடும்.

கருப்பு

கருப்பு

பலருக்கு பயமுறுத்தும் நிறமாகவே இது கருதப்படுகிறது. எல்லா வகையான நிறங்களும் கலந்த கலவை தான் இந்த கருப்பு நிறம். இவை ஆற்றல்களை உள்வாங்கி கொள்ள கூடிய தன்மை பெற்ற நிறமாகும். கருப்பு நிறத்தை பார்த்தாலே ஏதோ ஒரு தீவிர தன்மை காணப்படும்.

வெள்ளை

வெள்ளை

பொதுவாக வெள்ளை நிறத்தை சமாதான குறியீடாகவே கருதுகின்றனர். வெள்ளை நிறம் ஆரோக்கியமான சூழலை எப்போதும் ஏற்படுத்தி தரும். வெள்ளை நிறத்தை விருப்புபவர்கள் அதிக நேர்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்த கூடிய நிறமாகவும் இது கருதப்படுகிறது.

பிங்க்

பிங்க்

பெண்களுக்கு அதிகம் பிடித்த நிறமாக இது கூறப்பட்டாலும், பிங்கை ஆண்களும் விரும்புவார்கள் என்றே ஆய்வுகள் சொல்கிறது. ஆழ்ந்த மன நிம்மதியை இந்த நிறம் தரவல்லது. மேலும், ரசனைமிக்க நிறமாகவும் இந்த பிங்க் நிறம் கருதப்படுகிறது. மூளைக்கு ஒரு வித புத்துணர்வை தந்து மனதை இலகுவாக்க செய்கிறது.

MOST READ: பாதாம் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக கோளாறு முதல் பல பயங்கர விளைவுகள் உடலில் ஏற்படுமாம்...!

ஊதா நிறம்

ஊதா நிறம்

அடர் நீல நிறத்தையும் சிவப்பு நிறத்தையும் சேர்த்தால் இந்த ஊதா நிறம் கிடைக்கும். நீல நிறத்தில் இருந்து இது கிடைப்பதால் இதுவும் மென்மையான நிறமாகவே கருதப்படுகிறது. ஆன்மீக தன்மையை குறிக்கும் நிறமாக இந்த ஊதா நிறம் உள்ளது.

வண்ணங்களின் உளவியல்

வண்ணங்களின் உளவியல்

மேற்சொன்னபடி ஒவ்வொரு நிறமும் உங்களின் உளவியல் தன்மையை குறிப்பதாகும். மேலும், இது போன்ற நிறங்களில் நீங்கள் உடை அணிந்தாலோ அல்லது வீடுகளில் பெயிண்ட் போன்று பயன்படுத்தினாலோ அதன் தன்மையும் இப்படி தான் இருக்கும்.

இது போன்று, புதிய தகவல்களை பெற எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Colour Affects Our Mood By Psychology

Interesting health facts behind colors
Desktop Bottom Promotion