உங்களுக்கு ஃபுட் பாய்சனா? அத வீட்டிலேயே எளிதில் சரிசெய்யலாம்!

Posted By:
Subscribe to Boldsky

நம் வாழ்நாளில் ஒருமுறையாவது ஃபுட் பாய்சனால் அவஸ்தைப்பட்டிருப்போம். ஒருவருக்கு ஃபுட் பாய்சனானது சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை சரியாகப் பதப்படுத்தாமல் இருத்தல், உண்ணும் தட்டை நன்றாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படும். இன்னும் சில சமயங்களில் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாத உணவுப் பொருட்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம், உடலினுள் அழற்சி ஏற்பட்டு, ஃபுட் பாய்சன் ஏற்படலாம்.

Herbal Remedies For Food Poisoning

ஒருவருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? குமட்டல், வாந்தி, தலைசவி, தலைச்சுற்றல், அடிவயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாகும். ஃபுட் பாய்சன் ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால், அதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. இல்லாவிட்டால் உடல் வறட்சி அதிகரித்து, உடலின் நிலைமை மோசமாகிவிடும். எனவே இப்பிரச்சனையின் போது குடிக்கும் நீரின் அளவை சற்று அதிகரிக்க வேண்டும்.

சரி, ஃபுட் பாய்சனை வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என்று நீங்கள் கேட்கலாம். இக்கட்டுரையில் ஃபுட் பாய்சன் பிரச்சனைக்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

இஞ்சி அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளுடன், ஃபுட் பாய்சனை உண்டாக்குவதையும் சரிசெய்யும்.

* ஃபுட் பாய்சனுக்கான அறிகுறிகள் தெரியும் போது, உணவு உட்கொண்ட பின் ஒரு கப் இஞ்சி டீயை உட்கொள்ளுங்கள். இஞ்சி டீ தயாரிப்பதற்கு, 1 கப் நீரில் 1 டீஸ்பூன் துருவிய இஞ்சியைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், 1 டீஸ்பூன் தேனில் சிறிது இஞ்சி சாறு சேர்த்து, தினமும் பலமுறை உட்கொள்ளுங்கள்.

* இன்னும் எளிமையான வழி வேண்டுமானால், இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் பண்பு, காரத்தன்மையைக் கொண்டது. அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் சுடுநீரில் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்கு முன் குடியுங்கள். இல்லாவிட்டால், 2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே உட்கொள்ளுங்கள்.

வெந்தயம் மற்றும் தயிர்

வெந்தயம் மற்றும் தயிர்

தயிரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், ஃபுட் பாய்சனை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். வெந்தயம் அடிவயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை சரிசெய்ய உதவும். ஆகவே 1 டீஸ்பூன் வேந்தயத்தை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் சேர்த்து அப்படியே உட்கொள்ளுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் நிரம்பியுள்ளது. எலுமிச்சையில் உள்ள அமிலம், ஃபுட் பாய்சனை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும். அதற்கு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை சர்க்கரை சேர்த்து கலந்து, தினமும் 2-3 முறை குடிக்க வேண்டும். இவ்வாலிட்டால், எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து நாள் முழுவதும் குடியுங்கள்.

துளசி

துளசி

* துளசி இலைகளை அரைத்து ஜூஸ் எடுத்து, தேன் சேர்த்து தினமும் பல முறை குடித்து வாருங்கள். வேண்டுமானால், இத்துடன் சிறிது கொத்தமல்லி ஜூஸையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* 4 கப் நீரில் சில துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து கலந்து, அந்நீரை நாள் முழுவதும் மெதுவாக குடித்து வந்தால், அது ஃபுட் பாய்சனால் ஏற்படும் வயிற்று வலி மற்றும் இதர பிரச்சனைகளைத் தடுக்கும்.

* இல்லாவிட்டால் 3 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 3-4 முறை இப்படி சாப்பிட்டால், ஃபுட் பாய்சன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள வலிமையான ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஃபுட் பாய்சனால் ஏற்படும் வயிற்றுப் போக்கு மற்றும் அடிவயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* ஒரு பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு, பின் நீரைக் குடியுங்கள். ஒருவேளை உங்களால் பூண்டின் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாவிட்டால், பூண்டினை சாறு எடுத்து குடியுங்கள்.

* இல்லாவிட்டால், பூண்டு எண்ணெய் மற்றும் சோயாபீன்ஸ் எண்ணெயை ஒன்றாக கலந்து, அந்த எண்ணெய் கலவையை உணவு உட்கொண்ட பின் வயிற்றுப் பகுதியில் தடவுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் வாந்தி மற்றும வயிற்றுப் போக்கினால் இழக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவும். ஆகவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதனால் உடலின் ஆற்றலும் தக்க வைக்கப்படும். இல்லாவிட்டால் வாழைப்பழ மில்க் ஷேக்கை குடியுங்கள்.

சீரகம்

சீரகம்

சீரகம், ஃபுட் பாய்சனால் ஏற்படும் அடிவயிற்று அசௌகரியம் மற்றும் இரைப்பை அழற்சியை சரிசெய்யும்.

* ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் 1 டீஸ்பூன் கொத்தமல்லி ஜூஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், கொதிக்கும் நீரில் சிறிது சீரகம், உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு நாளைக்கு 2-3 முறை குடியுங்கள்.

தேன்

தேன்

தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அஜீரண பிரச்சனைகள் மற்றும் இதர ஃபுட் பாய்சன் அறிகுறிகளைப் போக்கும். தேன் ஒரு சுவையூட்டி என்பதால், ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட வயிற்று பிரச்சனைகள் நீங்கும். அதோடு வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தைக் கட்டுப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal Remedies For Food Poisoning

Here are some home remedies for foods poisoning. Read on to know more...
Story first published: Monday, April 16, 2018, 11:00 [IST]