தினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தமிழனின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை கம்மங்கூழ் அனைவரது வீட்டிலும் சாதாரணமாக தயாரித்து குடித்து வந்தோம். ஆனால் தற்போது இந்த கம்மங்கூழ் அரிய பானமாக தள்ளுவண்டியில் விற்கப்பட்டு வருகிறது. இன்று வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பலர் அதிக வெப்பத்தால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். குறிப்பாக நிறைய பேர் உடல் சூட்டினால் கஷ்டப்படுவார்கள்.

இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஏராளமான பானங்கள், மருந்துகள் போன்றவை விற்கப்படுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் நிறைய பானங்கள், மருந்துகள் எல்லாம் இல்லை. நம் முன்னோர்கள் வெயிலால் ஏற்படும் தாக்கத்தைத் தணிப்பதற்கு பழங்காலம் முதலாக கம்மங்கூழைத் தான் குடித்து வந்தார்கள்.

Health Benefits Of Drinking Kambu Koozh

தானிய வகைகளுள் ஒன்றான் கம்புவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதில் 15% புரோட்டீன் மற்றும் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின், தையமின், ரிபோஃப்ளேவின் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதோடு அத்தியாவசியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன் மற்றும் லிசித்தின், கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவகளும் அடங்கியுள்ளன.

இப்போது கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் காலையில் கண்ட உணவுகளை உட்கொள்ளாமல், கம்மங்கூழைத் தயாரித்துக் குடியுங்கள். முக்கியமாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையானது. அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் குடிக்க வேண்டிய பானம் என்பதால், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற அற்புதமான காலை உணவாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் சூடு குறையும்

உடல் சூடு குறையும்

வெயில் காலத்தில் உடல் சூட்டால் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். இந்த உடல் சூட்டைத் தணிப்பதற்கு இளநீருக்கு அடுத்தப்படியாக சிறந்த பானம் என்றால் அது கம்மங்கூழ் தான். ஒருவர் கம்மங்கூழை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலின் வெப்பநிலை அளவுக்கு அதிகமாகாமல் சீராக பராமரிக்கப்படும். அதோடு கம்மங்கூழ் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்கும்.

இரத்த சோகை நீங்கும்

இரத்த சோகை நீங்கும்

கம்புவில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த செல்களின் உற்பத்திக்கு அவசியமான ஓர் முக்கிய சத்தாகும். இந்த கம்மங்கூழை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அது இரத்த சோகையை சரிசெய்யும். எனவே உங்கள் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க நினைத்தால், கம்மங்கூழை தினமும் குடித்து வாருங்கள்.

கரோனரி இதய நோய்

கரோனரி இதய நோய்

கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், அது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவும். இது இரத்தத்தின் அடர்த்தியைத் தடுத்து, இரத்தம் உறைவதைத் தடுத்து, பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

வைட்டமின் பி

வைட்டமின் பி

கம்புவில் உள்ள பி வைட்டமின்கள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களை உடைத்தெறிய உதவும். இது இரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டைன் அளவைக் குறைத்து, கொலஸ்ட்ரால்கள் உடலில் படிவதைத் தடுக்கும். கம்புவில் உள்ள நியாசின் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் தேங்குவதைத் தடுத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.

உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்

கம்மங்கூழில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம், பசியுணர்வைக் குறைத்து, உடல் எடையைப் பராமரிக்க உதவும். மேலும் இது மெதுவாக செரிமானமாவதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். கம்புவில் உள்ள அதிகமான நார்ச்சத்து, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், கம்மங்கூழை தினமும் காலையில் குடியுங்கள்.

குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்

குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்

கம்புவில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். இதில் உள்ள லிக்னன் என்னும் பைட்டோநியூட்ரியண்ட், குடலில் மமாலியன் லிக்னனான மாற்றப்பட்டு, மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

கம்புவில் உள்ள மக்னீசியம், தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். அதாவது இது இரத்த நாள சுவற்றை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் கம்பு தீவிரமான ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்.

சர்க்கரை நோயைப் பராமரிக்கும்

சர்க்கரை நோயைப் பராமரிக்கும்

கம்புவில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது செரிமான செயல்பாட்டை தாமதப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடித்தால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

கம்புவில் உள்ள ட்ரிப்டோஃபேன், உடலில் செரடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் முன் ஒருவர் ஒரு கப் கம்மங்கூழைக் குடித்தால், மன அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

மாதவிடாய் கால வலிகள்

மாதவிடாய் கால வலிகள்

கம்புவில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே பெண்கள் கம்மங்கூழைக் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்புக்களைத் தடுக்கலாம். எனவே நீங்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தால், தினமும் காலையில் கம்மங்கூழைக் குடித்து வாருங்கள்.

எலும்புகள் வலிமையாகும்

எலும்புகள் வலிமையாகும்

கம்புவில் கால்சியம் சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. கம்மங்கூழை ஒருவர் அன்றாடம் தவறாமல் குடித்து வந்தால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரித்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். முக்கியமாக ஆர்த்ரிடிஸ் மற்றும் எலும்பு முறிவு உள்ளவர்கள் கம்மங்கூழைக் குடிப்பது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits Of Drinking Kambu Koozh

Here are some of the health benefits of drinking kambu koozh. Read on to know more...
Story first published: Friday, April 13, 2018, 11:32 [IST]