மல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சமையலில் சேர்க்கப்படும் ஓர் மசாலாப் பொருள் தான் மல்லி. கொத்தமல்லியைப் போன்றே மல்லி விதைகளும் நல்ல மணத்துடன் இருக்கும். இது உணவின் மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சமையலில் சேர்க்கும் மல்லி விதைகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. பொதுவாக நாம் சமையலில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுமே பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டிருக்கும். நாம் இதுவரை சீரகம், சோம்பு, மிளகு, கடுகு போன்றவற்றால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பார்த்துள்ளோம்.

Health Benefits of Coriander Seeds Soaked in Water

ஆனால் மருத்துவ குணம் நிறைந்த மல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன், எனர்ஜி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளன என்பது தெரியுமா? இத்தகைய மல்லியை ஒருவர் நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது மல்லி விதையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டிக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

கொத்தமல்லி விதை நீரிழிவு எதிர்ப்பு மருந்தாக பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கொத்தமல்லி விதை இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். மேலும் கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும். சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லி நீரை தினமும் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதற்கு இரவில் தூங்கும் முன் சிறிது கொத்தமல்லி விதைகடிள நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும்.

வெள்ளைப்படுதல் பிரச்சனை

வெள்ளைப்படுதல் பிரச்சனை

வெள்ளைப்படுதல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? கொத்தமல்லி விதைகள் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். அதற்கு கொத்தமல்லி விதைகளை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வடிகட்டி, அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

ஆஸ்டியோபோரோசிஸ்

ஆஸ்டியோபோரோசிஸ்

கொத்தமல்லி விதைகளில் உள்ள ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, நியாசின், கரோட்டீன், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி போன்ற அனைத்துமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படுகிறது. இந்த விதைகளில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும். அதற்கு கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிக்கலாம் அல்லது 3 கிராம் கொத்தமல்லி பொடியை 150 மிலி கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.

செரிமான கோளாறுகள்

செரிமான கோளாறுகள்

கொத்தமல்லி விதைகள் அஜீரண கோளாறுகளில் இருந்து விடுபட உதவும். இதற்கு கொத்தமல்லி விதைகளில் உள்ள போர்னியோல் மற்றும் லினாலோல், செரிமான செயல்பாட்டிற்கு உதவும். அதேப் போல் கொத்தமல்லி விதைகளில் உள்ள உட்பொருட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வயிற்றுப் போக்கை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

அஜீரண பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடுவது எப்படி? 1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது 1/2 டீஸ்பூன் மல்லி பொடியை 150 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் கழித்து, தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள். முக்கியமாக உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.

மாதவிடாய் கால பிரச்சனைகள்

மாதவிடாய் கால பிரச்சனைகள்

6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய் சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும். அதேப் போல் இரவில் மலலி விதைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக்கப்பட்டு, மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலி, வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

இமைப்படல அழற்சி

இமைப்படல அழற்சி

கண் பிரச்சனைகள் உள்ளதா? அப்படியானால் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துங்கள். இந்த விதைகள் கண் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் கண்களைக் கழுவுங்கள். இதனால் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

கொத்தமல்லி விதைகளில் பயனுள்ள பல்வேறு ஆக்டிவ் பண்புகள் உள்ளன. உதாரணமாக, கொத்தமல்லி விதைகளில் உள்ள சினோலி மற்றும் லினோலியிக் அமிலம், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும். ஆகவே கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் குடியுங்கள். இதனால் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி தடுக்கப்படும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கும். சில ஆய்வாளர்கள், கொத்தமல்லி விதைகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக கூறுகின்றனர். அதற்கு 2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். வேண்டுமானால், சுவைக்கு சிறிது தேன் கலந்து கொள்ளலாம்.

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளதா? இதிலிருந்து விடுபட உதவும் ஓர் இயற்கை பொருள் கொத்தமல்லி விதைகள். இந்த கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Coriander Seeds Soaked in Water

Here are some health benefits of coriander seeds soaked in water. Read on to know more...