Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா? எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க...
பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்கள் பயன்படுத்துவது குறித்தும் அதைப்பற்றிய விளைவுகள் பற்றியும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்வதற்கும் சரி, நாம் அலுவலகத்துக்கும் சரி லஞ்ச் எடுத்துச் செல்வதற்கு, கலர் கலராக பிளாஸ்டிக் பாக்ஸ்களையே பயன்படுத்துகிறோம். குழந்தைகளுக்கும் பொம்மைகளைக் காட்டி மனதை மயக்கி அதையே வாங்கித் தருகிறோம்.

அவர்களாகவே அடம்பிடித்தாலும் அதிலுள்ள தீமைகளைச் சொல்ல வேண்டிய நாம் அதை வாங்கிக் கொடுத்து ஆதரிக்கிறோம். அது என்ன அவ்வளவு பெரிய மகாபாதகமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த பாக்ஸ்கள் எந்த மாதிரி பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு இந்த கட்டுரையை நீங்கள் முழுதாகப் படித்துதான் ஆகவேண்டும்.

பிளாஸ்டிக் தரம்
நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களில், BPA அல்லது Bisphenol - A என்ற பொருளின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும். இதிலுள்ள ரசாபயனப் பொருள்களின் கட்டமைப்பு என்பது பெண்களுக்கு சுரக்கும் பெண்மையின் சின்னமான ஈஸ்ட்ரஜோனைப் போன்றது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

சூடான உணவுகள்
காலையில் சமைத்தவுடன் அவசர கதியில் சூடான உணவுகளை இந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்சஜல் வைக்கும்பொழுதும், மதியம் சாப்பிடும்போது, அதை அப்படியே மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடாக்கும்போதும், அதேபோல் சுடுதண்ணீரை, பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி வைக்கும்பொழுது, இந்த BPA வெளியேறி உணவிலும் தண்ணீரிலும் கலந்து விடுகிறது. பிறகு என்ன ஆகும்? என்பதை நாங்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குத் தெரியும்.

விளைவுகள்
இந்த பிளாஸ்டிக் பாக்ஸ்களையும் வாட்டர் பாட்டில்களையும் பயன்படுத்துவதால் கீழ்கண்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம்
ஆண்களுக்கு புரோஸ்டேட் (விதைப்பை) புற்றுநோய்,
பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வருவது குறைந்து போதல்
ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை குறைதல்
குழந்தைகளுக்கு நடத்தை பிரச்சினை
அல்சைமர் என்னும் மறதிநோய்
ஆகிய பிரச்சினைகள் அதிக அளவில் உண்டாகின்றன.

தீர்வு
இதற்கு முன்பாக நாம் பயன்படுத்தி வந்த எவர் சில்வர் என்னும் உலோகத்தால் ஆன லஞ்ச் பாக்ஸ்களைப் பயன்படுத்தலாம்.
தண்ணீருக்கும் இப்போது எவர்சில்வர், செம்பு உலோகங்களால் ஆன வாட்டர் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்தலாம். அதேபோல் கண்ணாடி பாட்டில்களையும் நாம் பயன்படுத்தலாம்.

கட்டாயம்
இல்லை எனக்கு விதவிதமான பொம்மைகள் வரையப்படட பிளாஸ்டிக் பாக்ஸ்கள் தான் வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடித்தால், BPA free என்று குறிப்பிடப்பட்ட பாடடில்களைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆனால் அது இந்தியாவில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
அப்படியே கட்டாயமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவோராக இருநு்தால் மைக்ரோவேவ் அவனில் வைக்கவோ அல்லது பாட்டில்களில் வெந்நீர் ஊற்றிப் பயன்படுத்தவோ கூடாது.

கருவுற்ற பெண்கள்
கருவுற்ற பெண்கள் இந்த பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களின் வழியாக இந்த ரசாயனப் பொருள் குழந்தைக்குச் சென்று சேர்ந்து விடும்.



Click it and Unblock the Notifications