Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
இந்த பொருட்களை சமைக்கமால் பச்சையாக சாப்பிடுவதுதான் ஆரோக்கியம்
சில காய்கறிகள் மற்றும் உணவுகளை வேகவைத்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும். எனவே அதுபோன்ற காய்கறிகளை சமைக்கும் முன் எச்சரிக்கையாக இருக்கவும்.
ஆரோக்கியமான வாழ்விற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். சில உணவுகளை வேகவைத்து சாப்பிட்டால்தான் ஆரோக்கியம், அதுபோன்ற உணவுகளை வேகவைக்கும்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் வெளிவரும். அதேபோல சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவதுதான் ஆரோக்கியம்.

சில காய்கறிகள் மற்றும் உணவுகளை வேகவைத்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும். எனவே அதுபோன்ற காய்கறிகளை சமைக்கும் முன் எச்சரிக்கையாக இருக்கவும். இந்த பதிவில் நீங்கள் எந்தெந்த காய்கறிகளை நீங்கள் சமைக்காமல் சாப்பிடுவது ஆரோக்கியம் என்பதை பார்க்கலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது. மேலும் இதில் புளோரட் அதிகளவு உள்ளது. ஆனால் இதனை வேகவைக்கும்போது இதிலுள்ள சத்துக்கள் 1/4 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

கீரை
கீரையில் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளது. குறிப்பாக பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஈ, பி6, பி9, போலிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்றவை உள்ளது. ஆனால் இதனை வேகவைக்கும்போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியது.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் நிறைவுறாத கொழுப்புகள் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த பொருளாகும். மேலும் இதில் உள்ள எதிர் அழற்சி பண்புகள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. ஆலிவ் ஆயிலை சூடு பண்ணும்போது அதில் உள்ள நல்ல கொழுப்புகள் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும், மேலும் உடலில் கொழுப்புகளின் அளவையும் அதிகரிக்கும்.

பூண்டு
பூண்டின் மருத்துவ குணங்கள் அனைத்தும் நாம் நன்கு அறிந்த ஒன்றுதான். பூண்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளை குறைப்பதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பூண்டை சூடுபடுத்தும்போது அது அல்லிசின் என்னும் வேதிப்பொருளை வெளியிடுகிறது, இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

வெங்காயம்
வெங்காயம் வெட்டும்போது அது உங்கள் கண்களை எரிய செய்யலாம், ஆனால் இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் சிறந்த எதிர் அழற்சி பொருளாக மாற்றுகிறது. அதனால்தான் வடஇந்தியர்கள் பெரும்பாலும் அவர்கள் உணவில் சமைக்காத வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுகிறார்கள். வெங்காயத்தை வேகவைப்பது அதில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளை மோனோசேக்கரைடுகளாக மாற்றுகிறது. இதுவும் ஒருவகையான சர்க்கரைதான், இதனை தவிர்க்க வெங்காயத்தை சூடுபண்ணுவதை தவிர்க்கவும்.

சாக்லேட்
சாக்லேட்டுகள் அதிக ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும். மேலும் இது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஆனால் இதனை சூடுபண்ணி சாப்பிடும்போது அது தனது அனைத்து ஆரோக்கிய பண்புகளையும் இழந்து வெறும் இனிப்பு சுவையுள்ள பொருளாக மற்றும் மாறிவிடுகிறது.

நட்ஸ்
நட்ஸில் அதிகளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் புரோட்டின் என பல சத்துக்கள் உள்ளது. நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்த இதனை நாம் சூடுபண்ணும்போது அதில் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது. இதை வறுப்பது இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறைக்கிறது மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

தேங்காய்
தேங்காய் ஒரு நீர்சத்துக்கான நல்ல ஆதாரம் ஆகும். இதில் வைட்டமின் சி, பைபர், மக்னீசியம், பொட்டசியம் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை சூடுபண்ணுவதோ, சமைப்பதோ இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை பாதிக்கும். தேங்காயின் முழுமையான சத்துக்கள் கிடைக்கவேண்டுமெனில் அதனை சமைக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது.

பெர்ரீஸ்
பெர்ரீஸ் வகையை சேர்ந்த பழங்களில் வைட்டமின் சி, பைபர் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. அனைத்து பெர்ரீஸ் வகை பழங்களுமே இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனை சூடுபண்ணும்போது இதில் உள்ள பாலிபினால்கள் சிதைவடைய வாய்ப்புள்ளது. எனவே இதனை சூடுபன்னாமல் சாப்பிடுவதே சிறந்தது.



Click it and Unblock the Notifications
