இந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். ஒருவரது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணம் டயட். இன்று நாம் சாப்பிடும் பல உணவுகள் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வகையில் உள்ளன. எனவே ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், அது தீவிரமான இதய நோய்க்கு வழிவகுக்கும்.

சரி, உங்களுக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது. அதோடு அன்றாடம் உடற்பயிற்சி, மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகள் போன்றவற்றையும் தவறாமல் எடுப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்தத்தை சிரமமின்றி பராமரிக்கலாம்.

இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிப்பதன் மூலும், உடலின் ஒவ்வொரு திசுக்கள் மற்றும் உறுப்புக்களுக்கும் போதுமான இரத்த ஓட்டம் இருக்கும். ஆனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயமானது மிகவும் சிரமப்பட்டு இரத்தத்தை அழுத்தும். இப்படியே நீண்ட நாட்கள் இதயம் கஷ்டப்பட்டு இரத்தத்தை உறுப்புக்களுக்கு அழுத்தத்தினால், இதயம் அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பாதிக்கப்பட்டு, இதய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும். அமெரிக்காவில், இக்காரணத்தினாலேயே பலர் உயிரை இழந்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் 75 மில்லியன் இளைஞர்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயர் இரத்த அழுத்தத்தினால் ஒவ்வொரு நாளும் 1100 பேர் மரணத்தை சந்திக்கின்றனர். இப்போது ஒருவரது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்துக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு மற்றும் இதர செயற்கை சுவையூட்டிகள் உள்ளன. இதனால் தான் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் உள்ளது. ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை உண்டாக்கும். குறிப்பாக இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ஆகவே பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், ஊறுகாய், வேர்க்கடலை, பாப்கார்ன், உறைய வைக்கப்பட்ட கலவைகள், கெட்சப், ட்ரெசிங், சூப் மிக்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகள்

கொழுப்பு அதிகம் நிறைந்த டயட்டுகள், ஒருவரது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை உட்கொள்பவர்களை விட, சைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை குறைவாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏனெனில் காய்கறிகளில் நார்ச்சத்து மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. இந்த இரண்டும் தான் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதற்கு காரணம்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

அளவுக்கு அதிகமாக மது அருந்தினால், அது ஒருவரது இரத்த அழுத்த அளவை அதிகரித்து, ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு நேரத்தில் 3 டம்ளருக்கு அதிகமாக ஆல்கஹாலை அருந்தினால், அது இரத்த அழுத்த அளவை தற்காலிகமாக சட்டென்று உயர்த்தும்.

காபி

காபி

காபியில் உள்ள காப்ஃபைன், தற்காலிகமாக இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதுவும் இதில் உள்ள காப்ஃபைன் அடினோசைன் என்னும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் ஹார்மோன் முடக்கப்படும். இதன் விளைவாக இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்த, இதயம் வேகமாக அழுத்த வேண்டியிருக்கும். இதனால் தற்காலிகமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே காபியை அதிகமாக குடிக்காதீர்கள்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். கொழுப்பின் அளவு அதிகரித்தால், அது இரத்த குழாய்களில் கொழுப்புக்களைப் படிய வைத்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் அதிகரித்தால், அது உடல் பருமனை அதிகரிக்கும்.

சைனீஸ் உணவுகள்

சைனீஸ் உணவுகள்

சைனீஸ் உணவுகளில் சோடியம் தான் அதிகளவு இருக்கும். சைனீஸ் உணவுகள் எப்போதுமே வித்தியாசமான சுவையில் மற்றும் காம்பினேஷனில் தான் இருக்கும். உதாரணமாக மாட்டிறைச்சியுடன், ப்ராக்கோலி சேர்த்து சமைக்கும் போது சுவை நன்றாக இருப்பது போன்று இருக்கலாம். ஆனால் இதில் 3,200 மிகி சோடியம் உள்ளது. இந்த அளவானது ஒரு நாளைக்கு வேண்டிய சோடியத்தின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

பிட்சா

பிட்சா

இன்று ஏராளமானோர் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் தான் பிட்சா. ஆனால் இந்த பிட்சாவில் சோடியம் அதிகம் உள்ளது என்று தெரியுமா? மேலும் பிட்சா கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் ப்ளேவர்கள் மற்றும் இதர உட்பொருட்கள், உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியவை. ஒரு அல்லது 2 துண்டு பிட்சாவில் 1,000 மிகி சோடியம் உள்ளது. ஆகவே ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பிட்சா பக்கமே செல்லாதீர்கள்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த மாட்டிறைச்சியை சமைக்கும் போது, அத்துடன் சுவைக்காக உப்பை சேர்த்து சாப்பிடும் போது, இது உடலில் நினைத்துப் பார்க்க முடியாத பெரிய ஆபத்தை உண்டாக்கும். அதிலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இந்த மாட்டிறைச்சியை ஒரு துண்டு சாப்பிட்டாலே, அது அவர்களது உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படும்திவிடும்.

நூடுல்ஸ்

நூடுல்ஸ்

இன்று கடைகளில் விற்கப்படும் நூடுல்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். மேலும் இது விலைக் குறைவிலேயே விற்கப்படுவதால், சிலர் இதை அடிக்கடி சமைத்து சாப்பிடுவார்கள். இந்த ஒரு பாக்கெட் நூடுல்ஸில் கொழுப்பு 14 கிராமும், சோடியம் 1,580 மில்லிகிராமும் உள்ளது.

டோனட்

டோனட்

டோனட் இனிப்பாகவும், நல்ல சுவையுடனும் இருக்கலாம். ஆனால் இது இருப்பதிலேயே மோசமான ஸ்நாக்ஸ். ஒரு டோனட்டில் 300-க்கும் அதிகமான கலோரிகளும், 43 சதவீதம் கொழுப்பும், 53 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. மேலும் டோனட் வறுத்தது என்பதால், இதில் சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. ஆகவே ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Raise Blood Pressure

Here are some foods that raise blood pressure level. Read on to know more...
Story first published: Friday, March 30, 2018, 11:56 [IST]