For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிடும் போது டிவி பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கைதான் இது

மாறிவரும் நமது வாழ்க்கை முறையில் சாப்பிடும் போதெல்லாம் தொலைக்காட்சியோ அல்லது கணிப்பொறியையோ பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனால் நமது உடலில் பல மாற்றங்களும், பக்கவிளைவுகளும் ஏற்படும்.

|

நோயின்றி வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அதனை பெறாமல் தடுப்பதே நமது உணவுமுறையும், வாழ்க்கைமுறையும்தான். நம் எடை அதிகரிக்கவும், ஆரோக்கியம் பாதிக்கவும் முக்கிய காரணம் நம்முடைய அலட்சியம்தான். நாம் தினசரி செய்யும் சில செயல்கள்தான் நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதில் முக்கியமான ஒன்று சாப்பிடும்போது டிவி பார்ப்பது.

effects of watching TV while eating Food

மாறிவரும் நமது வாழ்க்கை முறையில் சாப்பிடும் போதெல்லாம் தொலைக்காட்சியோ அல்லது கணிப்பொறியையோ பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனால் நமது உடலில் பல மாற்றங்களும், பக்கவிளைவுகளும் ஏற்படும். இந்த பதிவில் சாப்பிடும்போது டிவி பார்ப்பதால் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமாக சாப்பிட வழிவகுக்கும்

அதிகமாக சாப்பிட வழிவகுக்கும்

பல்வேறு சோதனைகளின் மூலம் சாப்பிடும்போது அதிகமாக சாப்பிட தூண்டுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் அதிகம் சாப்பிடுவதை தூண்டுகிறது. இதனால் உடலில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்ற நேரத்தை ஒப்பிடும்போது தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது அதிகம் சாப்பிட தூண்டுவதுடன் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

கவன சிதறல்

கவன சிதறல்

மருத்துவத்தின் படி நீங்கள் சாப்பிடும்போது உங்கள் மூளை அதை கண்காணித்து அதன் சுவை மற்றும் அளவை பற்றிய சிக்னல்களை அனுப்பும். ஆனால் டிவி பார்த்துக்கொண்டு நீங்கள் சாப்பிடும்போது உங்கள் மூளை எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் குழம்பி கவன சிதறல் ஏற்படும், இதனால் மூளை தவறான சிக்னல்களை அனுப்பத்தொடங்கும். இதனால் நீங்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிட தூண்டும்.

வளர்சிதை மாற்றம்

வளர்சிதை மாற்றம்

ஆய்வுகளின் படி தொலைக்காட்சி பார்ப்பது கலோரிகளை குறைக்க உதவாது, அதேசமயம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் செரிமான கோளாறு மற்றும் ஆற்றல் இழப்பு ஏற்படலாம்.

அதிக உணவு நுகர்வுகள்

அதிக உணவு நுகர்வுகள்

அறிக்கைகளின் படி தொலைக்காட்சி பார்த்து கொண்டே மதிய உணவு சாப்பிடுவது அதிக தின்பண்டம் சாப்பிடும் உங்கள் ஆசையை அதிகரிக்கும். நிபுணர்களின் கருத்துப்படி சாப்பிடும்போது கவனச்சிதறல் ஏற்படுவது உங்கள் மூளை சாப்பிடும் உணவை பதிவு செய்யாது, அதனால் உங்களுக்கு பசி விரைவில் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

MOST READ: இராமரின் உயிரை காப்பாற்ற தன் மகனுடனேயே சண்டையிட்ட அனுமன்

திருப்தியில்லா உணர்வு

திருப்தியில்லா உணர்வு

ஒருவேளை உங்களுக்கு இது சந்தோஷமான செய்தியாக இருக்கலாம், மருத்துவ அறிவியலின் படி ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும்போது ஒரு செயலில்தான் மூளை ஈடுபடும், அதனால் மற்றொரு செயல் முழுவதும் வீணாகத்தான் ஆகும். சாப்பிடும் நேரத்தில் டிவி பார்க்கும்போது மூளை டிவியில் தான் கவனம் செலுத்தும், இதனால் உங்களுக்கு உணவில் இருந்து கிடைக்கும் சத்துகள் கிடைக்காது.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள்

தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கொண்டு சாப்பிடுவது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கலாம் ஆனால் இதனை ஒருபோதும் மருத்துவர்கள் ஊக்குவிக்கமாட்டார்கள். டிவி பார்த்துக்கொண்டே ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது இப்பொழுது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இப்படி தொடர்ந்து ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். இன்றைய தலைமுறை குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க இதுதான் முக்கிய காரணம்.

உறவு பிரச்சினைகள்

உறவு பிரச்சினைகள்

நாள் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வேலை செய்யும்போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் ஒரே நேரம் இரவு மட்டும்தான். அந்த நேரமும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு சாப்பிடுவது குடும்பத்தினருக்கு இடையேயான விவாதங்களை குறைக்கும். அதிலும் நம்மில் பலபேரும் இப்பொழுது போனை பார்த்து கொண்டே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். பேச்சுக்கள்தான் குடும்பத்தில் இருக்கும் பாசத்தையும், உறவையும் உயிர்ப்புடன் வைத்திற்கும். அது குறையும்போது உறவுகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

MOST READ: காலை சுத்தமாக வைத்திருந்தாலும் துர்நாற்றம் வீசுகிறதா? பேக்கிங் சோடா இருக்க கவலை எதுக்கு?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

effects of watching TV while eating Food

Eating food while watching TV becomes a daily habit. But it has many side effects.
Desktop Bottom Promotion