உங்க கால் பெருவிரல் இப்படி வீங்கி இருக்கா? இத ஒரு டம்ளர் குடிங்க சரியாயிடும்...

Posted By:
Subscribe to Boldsky

கீல்வாதம் என்பது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகம் இருக்கின்ற ஒரு பிரச்சனையாகும். நம் உடலில் இரண்டு எலும்புகள் இணையும் இடத்தை தான் மூட்டு என்று அழைப்பர். ஒவ்வொரு மூட்டு இணைப்புக்களையும் குருத்தெலும்பு மூடி இருக்கும். இந்த குருத்தெலும்பு சைனோவியல் திரவத்தால் மசகுத்தன்மை அடைகிறது. இதனால் தான் மூட்டுக்கள் தங்குதடையின்றி இயங்குகிறது.

ஆனால் ஒருவருக்கு கீல்வாதம் இருந்தால், மூட்டு இணைப்புக்களில் உள்ள குருத்தெலும்பு தேய்வதோடு, அப்பகுதியில் யூரிக் அமில உப்புகள் படிய ஆரம்பித்து, வீங்குவதோடு, வலியையும் உண்டாக்கும். பெரும்பாலும் கீல்வாதம் கால் பெருவிரலைத் தான் தாக்குகின்றது. இருப்பினும் கணுக்கால், குதிகால், முழங்கால் மணிக்கட்டு, முழங்கை, கை விரல்கள் போன்ற பிற மூட்டுக்களிலும் வரலாம்.

Easy Natural Remedy For Gout With Cherry Juice

இந்த கீல்வாதத்தை செர்ரி ஜூஸ் சரிசெய்யும். செர்ரி ஜூஸில் வைட்டமின் ஏ, சி மற்றும் வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பைட்டோ நியூட்ரியண்ட்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதனை கீல்வாதம் உள்ளவர்கள் குடித்து வந்தால், மூட்டுக்களில் தேங்கிய யூரிக் அமில படிவுகள் நீங்கி, மூட்டு பிரச்சனைகள் அகலும்.

ஆய்வுகளிலும் செர்ரிப் பழ ஜூஸை கீல்வாத அறிகுறிகளைக் கொண்டவர்கள் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைப்பதாக தெரிய வந்துள்ளது. இப்போது செர்ரிப் ஜூஸ் எப்படி கீல்வாத பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது என்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யூரிக் அமில அளவு

யூரிக் அமில அளவு

செர்ரி ஜூஸ் மூட்டுக்களில் தேங்கியுள்ள யூரிக் அமில படிவுகளைப் போக்கும். மேலும் இது உணவுகளில் உள்ள பியூரினை யூரிக் அமிலமாக மாற்றும் நொதிகளான ஜாந்தைன் ஆக்ஸிடேஸைத் தடுக்கும். ஆகவே இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தைக் குறைக்க செர்ரிப் பழ ஜூஸைக் குடியுங்கள்.

மூட்டு வலிகள்

மூட்டு வலிகள்

செர்ரி ஜூஸில் ஆந்தோசையனின்கள் என்னும் உட்பொருள், கீல்வாத ஆர்த்ரிடிஸை எதிர்த்துப் போராட உதவும். மேலும் இது மூட்டுத் திசுக்களில் அழற்சியைத் தூண்டும் மூலக்கூறுகளின் உற்பத்தியைத் தடுக்கும். அதிலும் செர்ரி ஜூஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலியில் இருந்து உடனடி நிவாரணம் வழங்குவதோடு, மூட்டுக்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும்.

விஷத்தன்மை அழுத்தம்

விஷத்தன்மை அழுத்தம்

யூரிக் அமிலம் ஒரு தனிப்பட்ட கலவை. சாதாரண நிலையில் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும். ஆனால் இதன் அளவு அதிகமாகும் போது, இது விஷத்தன்மைமிக்க ஏஜென்ட்டாக மாறும். இதனால் மூட்டுக்களில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு, மூட்டுக்களில் உள்ள வலியையும், அழற்சியையும் மோசமாக்கும். செர்ரி ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூட்டுக்களைப் பாதிக்கும் விஷத்தன்மை அழுத்தத்தைத் தடுக்கும்.

 கீல்வாத மருந்துகள் நன்கு செயல்படும்

கீல்வாத மருந்துகள் நன்கு செயல்படும்

ஆய்வுகளில் கீல்வாதத்திற்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது, செர்ரி ஜூஸைக் குடித்து வந்தால், அந்த மருந்துகள் சிறப்பா செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே கீல்வாத பிரச்சனை உள்ளவர்கள், செர்ரி ஜூஸைக் குடிக்க அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எவ்வளவு குடிக்க வேண்டும்?

எவ்வளவு குடிக்க வேண்டும்?

கீல்வாதத்தில் இருந்து விடுபட, ஒரு நாளைக்கு 2-3 முறை 30 மிலி குடிக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், கீல்வாதத்தில் இருந்து விடுபடுவதோடு, கீல்வாதம் வரும் அபாயத்தையும் தடுக்கும்.

இப்போது செர்ரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் இதர நன்மைகளைக் காண்போம்.

உடற்பயிற்சிக்குப் பின் சிறந்தது

உடற்பயிற்சிக்குப் பின் சிறந்தது

உடற்பயிற்சி செய்து முடித்த பின் செர்ரிப் பழ ஜூஸைக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தம், நீர்ச்சத்து, செரிமானம், இதயத் துடிப்பு மற்றும் தசை மீட்பு போன்றவற்றை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போன்று, செர்ரிப் பழங்களில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் ஆன்டி-வைரல் உள்ளது இதில் உள்ள ப்ளேவோனாய்டு என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவும். அதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக்கும்.

கொழுப்புக்கள் குறையும்

கொழுப்புக்கள் குறையும்

செர்ரிப் பழம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைக்க உவும். இதில் உள்ள ஆந்தோசையனின் என்னும் ப்ளேவோனாய்டு, உடல் பருமனை எதிர்த்துப் போராடச் செய்யும். இது எலியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த செர்ரிப் பழம், தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் உள்ள மெலடோனின் தூக்கத்தை சீராக்குவதோடு, இரவில் நிம்மதியான நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே தினமும் ஒரு டம்ளர் செர்ரி ஜூஸ் குடித்து, இதுவரை இழந்து தவித்துக் கொண்டிருந்த தூக்கத்தைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Easy Natural Remedy For Gout With Cherry Juice

List of surprisingly easy natural remedy for gout with cherry juice. Read on to know...
Story first published: Friday, January 5, 2018, 17:40 [IST]