பெண்களின் பிறப்புறுப்புகளை சிதைக்க செய்யும் வஜைனல் புற்றுநோயும் அதன் தீர்வுகளும்..!

By Haripriya
Subscribe to Boldsky

தினம்தினமும் புது புது நோய்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறது. மற்ற உயிர்களை காட்டிலும் மனிதனுக்கே அதிக நோய்களின் தாக்கம் இருக்கிறது. இதற்கு எண்ணற்ற காரணிகள் இருந்தாலும், மனிதனின் தேவையற்ற பழக்க வழக்கங்களே இவை அனைத்திற்கும் ஒரு மிக பெரிய ஆரம்ப புள்ளியாக உள்ளது. இதில் ஆண் பெண் என்ற பாகுபாடே இல்லாமல் நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த கொடிய நோயான புற்றுநோய், மிகவும் ஆபத்தானது.

Detailed view on vaginal cancer & its factors

புற்றுநோய் செல்கள் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரலாம். அதிலும் பிறப்புறுப்புகளில் வந்து விட்டால் அவ்வளவுதான். அதிக படியான விளைவை ஏற்படுத்தும்.

ஆண்களின் பிறப்புறுப்புகளை தாக்கும் ப்ரோஸ்டேட் புற்றுநோயை போலவே பெண்களின் பிறப்புறுப்பை இந்த வஜைனல் புற்றுநோய் தாக்குகிறது. இது மிகவும் வித்தியாசமான ஒரு புற்றுநோய் வகையை சார்ந்தது. பெண்களை மட்டுமே இது குறி வைத்து

தாக்க கூடியது. இத்தகைய கொடிய புற்றுநோயின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வஜைனல் புற்றுநோய் :-

வஜைனல் புற்றுநோய் :-

புற்றுநோய் என்றாலே ஒரு வித பயமும் நடுக்கமும் பெரும்பாலான மக்களுக்கு இருக்கதான் செய்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் பிறப்புறுப்புகளில் வரும்வஜைனல் புற்றுநோய் சற்றே விபரீதமானது. ஏனெனில், முதலில்

பெண்களின் பிறப்புறுப்புகளில் புற்றநோய் செல்கள் உருவாகி, பிறகு நீண்ட காலம் கழித்து கல்லீரல், எலும்புகள், நுரையீரல் போன்ற அனைத்து பகுதிகளையும் முற்றிலுமாக சிதைவடைய செய்து விடும்.

வகைகள் :-

வகைகள் :-

இந்தவஜைனல் புற்றுநோய் பல வகையாக உள்ளது.

1. ஸஃவமோஸ் செல் கார்சினோமா (Squamous cell carcinoma)

2. அடினோ கார்சினோமா (Adenocarcinoma)

3.வஜைனல் மெலனோமா (Vaginal melanoma)

4. வஜைனல் சார்க்கோமா (Vaginal sarcoma)

விவரிப்பு :-

விவரிப்பு :-

#1 இந்த வகை புற்றுநோய், பிறப்புறுப்புகளில் ஆரம்ப காலத்தில் உருவாகி, பின் மெல்ல மெல்ல எலும்புகள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றில் பரவும். வயதான பெண்களுக்கு இந்த வகை புற்றுநோய் அதிகம் வரக்கூடும்.

#2 பிறப்புறுப்புகளில் மட்டுமே உருவாகி அந்த இடத்தை மட்டுமே தாக்க கூடிய புற்றுநோய் வகையை சார்ந்தது. இது பிறப்புறுப்புகளில் ஒரு வித வெள்ளையான திரவத்தை வெளியிட்டு கொண்டே இருக்கும்.

#3 மெலனின் சுரப்பியை உருவாக்கும் மெலனின் செல்களில் இந்த வகை புற்றுநோய் வர கூடும். மேலும் இது மெலனின் நிறமியை குறைக்கவும் செய்து விடும்.

#4 பெண்களின் பிறப்புறுப்புகளின் சுவர்களை அதிகம் இது தாக்கும். மேலும் அந்த சுவர்களின் வழியே ஊடுருவி புற்றுநோய் செல்களை பரவ செய்யும்.

ஏற்பட காரணங்கள் :-

ஏற்பட காரணங்கள் :-

வஜைனல்புற்றுநோய் செல்கள் பிறப்புறுப்புகளில் உருவாக பல்வேறு காரணிகள் இருக்கிறது. அவற்றை இனி தெரிந்து கொள்வோம்...

- பிறப்புறுப்புகளில் புற்றுநோய் தொற்று உள்ளவரோடு உடலுறவு வைத்து கொள்வதால்.

- HPV வைரஸ் தொற்று ஏற்கனே உடலில் இருந்தால்

- கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்கும்.

- எய்ட்ஸ் உள்ளவர்களுக்கு

- அதிக மது அருந்துபவர்களுக்கு

- புகை பழக்கம் இருக்கும் பெண்களையும் இந்த புற்று நோய் தாக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அறிகுறிகள் :-

அறிகுறிகள் :-

ஒரு நோய் உடலில் உருவாவதென்றால் அதற்கு முன் நிறைய அறிகுறிகள் உடலில் ஏற்பட கூடும். ஆனால் புற்றுநோயை பொருத்த வரை அது போன்ற காரணிகள் பல சமயம் தென்படாமலே இருக்கும். இந்த வாகினல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

- பிறப்புறுப்புகளில் எப்போதும் ஒருவித வலி இருக்கும்.

- மாதவிடாய் காலங்களை தவிர மற்ற காலங்களில் பிறப்புறுப்புகளில் ரத்தம் வடிதல்

- அடிக்கடி இடுப்பு வலி ஏற்படுதல்

- கர்ப்பப்பையில் ஏதேனும் வலி இருத்தல்.

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.

வருமுன் காப்போமே..!

வருமுன் காப்போமே..!

எந்த நோயாக இருந்தாலும் அதனை வருமுன் காக்க பல வழி முறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதே போல் இந்தவஜைனல் புற்றுநோய் வராமல் தடுக்க சில வழிகள் உள்ளது.

- பருவம் அடைந்த உடனேயே உடலுறவு கொள்ளாமல் இருந்தால் இந்த நோயை தடுக்கலாம்.

- ஒரு ஆணுடன் மட்டும் உடலுறவு வைத்தால், வாகினல் புற்றுநோயில் இருந்து தப்பிக்கலாம்.

- அல்லது காண்டம் போன்ற பாதுகாப்பு உறைகளுடன் பல பேருடன் உடலுறவு கொண்டால், இதனை தடுக்கலாம்.

- சீரான கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்தால், இந்த வகை நோயிடம் இருந்து காக்கலாம்.

- புகை பழக்கத்தை கை விட்டால் இதிலிருந்து உங்களை பாதுகாப்பாக வைக்கலாம்.

தீர்வு #1 :-

தீர்வு #1 :-

வஜைனல்புற்றுநோய் வந்தால், உடனே மருத்துவரை அணுகி அதற்கேற்ற பரிசோதனைகளை தவறாது செய்ய வேண்டும். சீரான உணவு முறையை கடைபிடித்தால் இந்த புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை உங்கள் உடலில் இருந்து குறைக்கலாம். புகை பழக்கம், மது பழக்கம் போன்றவற்றை முற்றிலுமாக விட்டுவிட்டால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.

தீர்வு #2 :-

தீர்வு #2 :-

பல தீவிர சமயங்களில் இந்த வகை புற்றுநோய் செல்களை அறுவை சிகிச்சை செய்தே குணப்படுத்த முடியும். மேலும் கதிர்வீச்சுகளை செலுத்தி இந்த வகை புற்றுநோய் செல்களை அழிக்கலாம். அத்துடன் கீமோதெரபி போன்ற முறைகள் இதற்கு நல்ல தீர்வை தரும்.

எனவே இந்த வகை புற்றுநோய் தொற்றுகள் உங்களுக்கு இருக்கிறதா..? என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்வை மேற் கொள்ளுங்கள். மேலும் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Detailed view on vaginal cancer & its factors

    Vaginal cancer happens when malignant (cancerous) cells form in the vagina. It’s a very uncommon disease. The vagina is also known as the birth canal, is a hollow channel that goes from the opening of your uterus to the outside of your body.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more