For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்நேரமும் பசி எடுப்பது போன்ற உணர்வு உள்ளதா? இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

நம்மில் பலருக்கும் உணவை பொறுத்தவரையில் பல பிரச்சினை உள்ளது. சிலருக்கு பசியே எடுக்காது, உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். சிலருக்கோ எப்பொழுதும் பசி எடுத்து கொண்டேயிருக்கும். அதிலும் சிலருக்கு சாப்பி

By Saranraj
|

நம்மில் பலருக்கும் உணவை பொறுத்தவரையில் பல பிரச்சினை உள்ளது. சிலருக்கு பசியே எடுக்காது, உணவை பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். சிலருக்கோ எப்பொழுதும் பசி எடுத்து கொண்டேயிருக்கும். அதிலும் சிலருக்கு சாப்பிட்டு முடித்த உடனேயே பசியுணர்வு ஏற்படும். இது உண்மையில் பசி அல்ல.

causes of feeling always hungry

இது பசி போன்ற உணர்வாகும். இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாதது. இதனை நீடிக்க விட்டால் உங்கள் செரிமான மண்டலம் விரைவில் மோசமான பாதிப்புக்கு உள்ளாகும். இதற்கு எளிய தீர்வு யாதெனில் சரியான உணவை சாப்பிடுவது மற்றும் தவறான உணவை தவிர்ப்பதுதான். இந்த பதிவில் இந்த பிரச்சனை ஏற்பட என்ன காரணங்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக கூல்டிரிங்க்ஸ் குடித்தல்

அதிக கூல்டிரிங்க்ஸ் குடித்தல்

நீங்கள் கூல்டிரிங்க்ஸ் குடிப்பதை தவிர்க்க இது மேலும் ஒரு காரணமாகும். அனைத்து குளிர்பானங்களிலும் இருப்பது ப்ரெக்டொஸ் கார்ன் என்னும் இரசாயனம்தான். இது உடலுக்கு கேடுவிளைவிக்க கூடியது. இதன் அளவு உடலில் அதிகரிக்கும் போது இது லெப்டின் ஹார்மோன் மூளைக்கு பசியுணர்வை கட்டுப்படுத்தும் சிக்னலை தடுக்கிறது. இதனால் நமக்கு மேலும் உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருக்கும். இதுதான் நமக்கு பசியாகவே உணரச்செய்கிறது.

டிபன் பாக்ஸ்

டிபன் பாக்ஸ்

டிபன் பாக்ஸ் எனப்படும் உணவகளை அடைக்கும் டப்பாக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் செய்தவையாக இருக்கிறது. இந்த பிளாஸ்டிக் டப்பாக்களில் பிசெப்பினால் - ஏ என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று கூறப்பட்டாலும் இது இடுப்பை சுற்றியுள்ள இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. ஆய்வுகளின் படி இந்த பிசெப்பினால் - ஏ லெப்டின் மற்றும் கெர்லினின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த இரண்டும்தான் நமக்கு உணவு போதும் என்ற தன்னிறைவை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்கள் ஆகும். இதன் அளவு அதிகரிப்பது நமக்கு அதிக பசியுணர்வை ஏற்படுத்தக்கூடும்.

காலை உணவு பிரச்சினைகள்

காலை உணவு பிரச்சினைகள்

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. எனவே வெறும் ஒரு காபி மட்டும் உங்களுக்கு போதுமான ஆற்றலை தந்துவிடாது. ஆய்வுகளின் படி காலை உணவை தவிர்ப்பவர்களின் எடை வழக்கத்தை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே காலை உணவாக புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும்.

போதுமான அளவு சால்ட் சாப்பிடவில்லை

போதுமான அளவு சால்ட் சாப்பிடவில்லை

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிக அளவு வைட்டமின் கே மற்றும் இன்சுலின் சுரப்பை சீராக்கும் சத்துக்கள் உள்ளது. இது உங்களின் பசியுணர்வை கட்டுப்படுத்தும். தினமும் குறைந்தது 120 மைக்ரோகிராம்வைட்டமின் கே - வை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவு குறையும்போது உங்களுக்கு பசி எடுத்துக்கொண்டே இருக்கும்.

தேநீர் குடிக்காமல் இருப்பது

தேநீர் குடிக்காமல் இருப்பது

சமீபத்திய ஆய்வுகளின் படி சாப்பிட்டவுடன் பால் இல்லமால் தேநீர் குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைவு என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிக கார்போஹைடிரேட் உள்ள உணவுகள் சாப்பிட்ட பிறகு ஒரு கப் தேநீர் குடிப்பது அவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பை 10 சதவீதம் குறைக்கிறது. அதாவது இது உங்களுக்கு நீண்ட நேரம் பசியுணர்வை ஏற்படுத்தாது.

போதுமான அளவு நீர் குடிக்காமல் இருத்தல்

போதுமான அளவு நீர் குடிக்காமல் இருத்தல்

உடலில் நீர்சத்து குறைவது பெரும்பாலும் பசியுணர்வை ஏற்படுத்துகிறது. உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும்போது மூளையின் ஹைப்போதலாமஸ் பசி, தாகம் போன்ற கலவையான உணர்வுகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அதிக உணவு சாப்பிட்ட பின்னும் உங்களுக்கு பசி ஏற்பட்டால் உடனடியாக ஒரு டம்ளர் நீர் குடியுங்கள். உடனடியாக உங்கள் பசி காணாமல் போய்விடும்.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

மது அருந்துவது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நாம் நன்கு அறிவோம். குறிப்பாக இது இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை அதிகரிக்க கூடும். ஆனால் அதுமட்டுமின்றி மது அருந்துவது நீங்கள் பசியாக இல்லாவிட்டாலும் உங்கள் மூளையை பசி போன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்த தூண்டும். 2017 ல் நடத்தப்பட்ட ஆய்வில் சிறிது ஆல்கஹால் மூளையில் பசி போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை கண்டறிந்தார்கள்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

அலுவலகத்தில் அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அது உங்களிடையே அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும்.அதிக மனஅழுத்தம் ஏற்படும்போது அது கார்டிசோல் என்னும் ஹார்மோனை சுரக்கும். இது நம்மை இனிப்பு, கொழுப்பு போன்ற உணவுகளை உண்ண தூண்டக்கூடிய ஹார்மோனாகும்.

நோய்கள்

நோய்கள்

எந்நேரமும் பசியாக இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதுபோன்று பசி அதிகம் எடுக்க காரணம் சர்க்கரை நோயாக இருக்கலாம், உங்களின் தூக்கமின்மை கூட இதனை ஏற்படுத்தலாம், நீங்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள், கடினமான டயட், தைராய்டு பிரச்சினை. குறைந்த சர்க்கரை அளவு என இது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

causes of feeling always hungry

Your body relies on food for energy, so it's normal to feel hungry if you don't eat for a few hours. But if your stomach has a constant rumble, even after a meal, something could be going on with your health.
Desktop Bottom Promotion