For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்புளில் ஏற்பட்ட தொற்றுக்களை சரிசெய்யும் சில வழிகள்!

இங்கு தொப்புளில் ஏற்பட்ட தொற்றுக்களை சரிசெய்யும் சில வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

ஃபேஷன் என்ற பெயரில் பெண்கள் உடலின் பல இடங்களில் டாட்டூ குத்துவது, துளையிட்டு கண்டதை தொங்க விடுவது என்று இருக்கிறார்கள். அதில் நிறைய பெண்கள் துளையிடும் ஓர் பகுதி தான் தொப்புள். இவ்விடத்தில் துளையிடுவதால், அது அழகிய தோற்றத்தைக் கொடுக்கலாம். ஆனால் தொப்புளில் தொற்றுக்கள் ஏற்பட்டால் என்ன ஆகும் என்று என்றாவது யோசித்ததுண்டா? ஆம், தொப்புளை ஒருவர் தொடர்ச்சியாக தொடும் போது, அதுவும் துளையிட்ட பின்பு அந்த பகுதியை தொடும் போது எளிதில் தொற்றுகள் ஏற்படும்.

Best Ways To Treat A Belly Button Infection Naturally

தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டிருந்து, அதை இயற்கை வழியில் சரிசெய்ய நினைத்தால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். பொதுவாக நம் தொப்புளில் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. பெரும்பாலும் அந்த பாக்டீரியாக்கள் எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் சில காரணிகளால் தொப்புளில் தொற்றுகள் தீவிரமாக ஏற்படலாம்.

தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? ஒருவரது தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், தொப்புளில் வலி, தொப்புளில் வீக்கம் மற்றும் அழற்சி, தொப்புள் பகுதியில் அரிப்பு, தொப்புளில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது ப்ரௌன் நிற திரவம் வெளிவருவது, தொப்புளில் இருந்து துர்நாற்றம் வீசுவது, குமட்டல் மற்றும் தலைச்சுற்றல், தொப்புளில் இருந்து இரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்படும். சரி, இப்போது தொப்புளில் ஏற்பட்ட தொற்றுகளை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை விரலால் தொட்டு தொப்புளில் வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை தொப்புளில் எண்ணெயை வைத்து வந்தால், விரைவில் குணமாகிவிடும். தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடுவதோடு, அழற்சி மற்றும் வீக்கத்தை விரைவில் சரிசெய்துவிடும்.

உப்பு நீர்

உப்பு நீர்

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரை தொப்புளில் தினமும் பலமுறை ஊற்றுங்கள். இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். உப்பு நீர் தொப்புளில் உள்ள ஈரப்பசையைக் குறைக்க உதவி, தொற்றுக்கள் தீவிரமாகாமல் தடுக்கும். மேலும் உப்பில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதல், இது தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்து, விரைவில் விடுபடச் செய்யும்.

சுடுநீர் ஒத்தடம்

சுடுநீர் ஒத்தடம்

மிதமான சூடு கொண்ட நீரில், சுத்தமான துணியை நனைத்து பிழிந்து, அந்த துணியால் தொப்புள் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை ஒத்தடம் கொடுத்து வர வேண்டும். இதனாலும் தொப்புள் தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.

டீ-ட்ரீ எண்ணெய்

டீ-ட்ரீ எண்ணெய்

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 2-3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்த எண்ணெய் கலவையை தொப்புளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்

2-3 துளிகள் புதினா எண்ணெயை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து, தொப்புளில் அந்த எண்ணெயைத் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை என செய்து வந்தால், சீக்கிரம் தொப்புளில் ஏற்பட்ட தொற்றுகள் அகலும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

1 டேபிள் ஸ்பூன் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை 1-2 டேபிள் ஸ்பூன் நீருடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி, தொப்புளில் அந்த கலவையைத் தடவி காய வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர வேண்டும். இதனால் சீழ் நிறைந்த கட்டிகள் இருந்தால், அது விரைவில் குணமாகும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரில், 2 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த கலவையை தொப்புளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வந்தால், சீக்கிரம் தொற்றுகள் சரியாகிவிடும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தொற்றுள்ள தொப்புள் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தொப்புளைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்ய ஒரு நல்ல பலனை விரைவில் காண முடியும். மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், மற்ற வழிகளைப் பின்பற்றுகிறீர்களோ இல்லையோ, கற்றாழை வழியைப் பின்பற்றுங்கள்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை தொற்று ஏற்பட்ட தொப்புளில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி குறைந்தது ஒரு முறையாது செய்ய வேண்டும். இதனால் மஞ்சளில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொற்று ஏற்பட்ட தொப்புளில் உள்ள வீக்கம், அரிப்பு, அழற்சி போன்றவற்றைக் குறைத்து சரிசெய்யும்.

வேப்பிலை

வேப்பிலை

ஒரு கையளவு வேப்பிலையை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தொப்புளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்கவும் அல்லது நன்கு காயும் வரை ஊற வைக்க வேண்டும். பின் நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஒரு பஞ்சுருண்டையில் சில துளிகள் ஆல்கஹாலை எடுத்து, நேரடியாக பாதிக்கப்பட்ட தொப்புள் பகுதியில் தடவி ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை செய்ய வேண்டும். ஆல்கஹாலில் உள்ள ஆன்டி-செப்டின் பண்புகள், தொப்புளில் ஏற்பட்ட தொற்றுகள் பரவராமல் தடுக்கும். ஆனால் ஆல்கஹால் அதிக வறட்சியை உண்டாக்கும் என்பதால், ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Ways To Treat A Belly Button Infection Naturally

Here are some of the best ways to treat a belly button infection naturally. Read on to know more...
Desktop Bottom Promotion