ஆண்களே! தினமும் தூக்கத்தில் விந்து தானாக வெளியேறுகிறதா? இதோ அதற்கான சில தீர்வுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது விந்து வெளியேறுவது. இந்த பிரச்சனையை நைட்ஃபால் அல்லது வெட் ட்ரீம்ஸ் என்று கூறுவார்கள். உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும் சந்திக்கும் பிரச்சனை தான் இது. இந்த பிரச்சனையால் பல ஆண்கள் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாவார்கள். சில ஆண்கள் தாங்கள் சந்திக்கும் இப்பிரச்சனைக் குறித்து வெளியே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

Best Home Remedies For Nightfall

ஆனால் இந்த பிரச்சனைக் குறித்து ஆண்கள் கவலைப்படவே தேவையில்லை. பெரும்பாலும் இம்மாதிரியான பிரச்சனையால் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பவர்கள், ஆபாச படங்களைக் காண்பவர்கள் அல்லது எந்நேரமும் செக்ஸ் குறித்து நினைப்பவர்கள் தான் கஷ்டப்படுவார்கள்.

தினமும் தூக்கத்தில் விந்து வெளியேறினால், அதை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முடியும். இக்கட்டுரையில் இரவில் தூங்கும் போது விந்து வெளியேறுவதைத் தடுக்கும் சில இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கிய பிரச்சனைகள்

ஆரோக்கிய பிரச்சனைகள்

வெட் ட்ரீம்ஸ் பிரச்சனையை ஆண்கள் சரிசெய்யும் முயற்சியில் இறங்காவிட்டால், அதனால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதில் உடல் பலவீனம், பாலியல் பலவீனம் மற்றும் பல குறிப்பிடத்தக்கவை. உங்களுக்கு இயற்கை வழிகளில் இப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

பூண்டு

பூண்டு

பழங்காலம் முதலாக நாம் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பூண்டு ஆண்கள் சந்திக்கும் வெட் ட்ரீம்ஸ் பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தின் அளவை அதிகரிக்கும். வெட் ட்ரீம்ஸ் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள் சில நாட்கள் 1 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தயிர்

தயிர்

உடல் வெப்பம் அதிகம் இருந்தாலும், வெட் ட்ரீம்ஸ் பிரச்சனையை சந்திக்கக்கூடும். அடிக்கடி வெட் ட்ரீம்ஸ் பிரச்சனையை சந்திக்கும் ஆண்கள், தினமும் 2-3 முறை ஒரு கப் தயிரை உட்கொண்டால், இந்த பிரச்சனையைக் குறைக்கலாம். ஏனெனில் தயிர் உடல் சூட்டைக் குறைக்கும். குறிப்பாக ஒரு பெரிய பௌல் தயிரை உட்கொள்ளுங்கள்.

குளியல்

குளியல்

இரவில் தூங்கும் முன் குளியலை மேற்கொள்ளுங்கள். அதிலும் குளிக்கும் நீரில் சில துளிகள் நறுமண எண்ணெய்களை சேர்த்து கலந்து குளியுங்கள். இந்த முறை பல ஆண்களுக்கு நல்ல தீர்வளித்துள்ளது. வேண்டுமானால் ரோஸ் ஆயில், மல்லிகை ஆயில் அல்லது லாவெண்டர் ஆயிலை குளியல் நீரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் வெட் ட்ரீம்ஸ் தடுக்கப்படுவதோடு, நல்ல தூக்கமும் கிடைக்கும். அதோடு மனநிலையும் ரிலாக்ஸாக இருக்கும்.

ஆபாச படங்களைத் தவிர்க்கவும்

ஆபாச படங்களைத் தவிர்க்கவும்

வெட் ட்ரீம்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே ஆபாச படங்கள் தான். முதலில் இந்த மாதிரியான படங்களைக் காண்பதை நிறுத்துங்கள். இது உங்கள் உடலினுள் பாலுணர்ச்சியைத் தூண்டி, தூக்கத்தில் விந்துவை வெளியேற்றும். முக்கியமாக இரவில் படுக்கும் முன் கடவுளை வணங்கி, நல்ல எண்ணத்துடன் பின் உறங்குங்கள்.

சேஜ் டீ

சேஜ் டீ

வெட் ட்ரீம்ஸ் பிரச்சனைக்கு சேஜ் டீ நல்ல தீர்வை வழங்கும். இந்த டீயை ஆண்கள் தினமும் 2 கப் குடித்து வந்தால், அது வெட் ட்ரீம்ஸ் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன்பும், காலையில் எழுந்ததும், இந்த டீயை குடிப்பது நல்லது.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

இது மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இது ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும். தினமும் 2 டம்ளர் நெல்லிக்காயை ஜூஸை ஆண்கள் குடித்து வந்தால், வெட்-ட்ரீம்ஸ் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடுவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

புத்தகங்களைப் படியுங்கள்

புத்தகங்களைப் படியுங்கள்

இரவில் படுக்கும் முன் புத்தகங்களைப் படிப்பதன் மூலமும் வெட் ட்ரீம்ஸ் ஏற்படுவதைத் தடுக்கும். அதற்காக பாலுணர்ச்சியைத் தூண்டும்படியான புத்தகங்களைப் படிக்கக்கூடாது. மாறாக கடவுள், நட்பு பற்றி பேசும் புத்தகங்களைப் படியுங்கள். அதிலும் தத்துவ புத்தகங்களைப் படிப்பது மிகவும் சிறப்பானது. எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல புத்தகங்களைப் படிக்கிறோமோ, அவ்வளவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் அதிகம் சாப்பிடும் ஆண்களுக்கு வெட் ட்ரீம்ஸ் பிரச்சனை ஏற்படுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே வெட் ட்ரீம்ஸ் பிரச்சனையை அதிகம் சந்திக்கும் ஆண்கள் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது, இப்பிரச்சனைக்கு மிகவும் நல்ல பலனைத் தரும் .

மாதுளை

மாதுளை

வெட் ட்ரீம்ஸால் மிகுந்த தொல்லையை அனுபவிக்கும் ஆண்கள், மாதுளையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. இந்த பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்படுவதோடு, இரத்த ஓட்டத்தை உடலில் ஊக்குவிக்கும். இதனால் ஆண்கள் சந்திக்கும் விறைப்புத்தன்மை குறைபாடு தடுக்கப்படும். இந்த பழத்தை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், 1-2 மாதத்தில் வெட் ட்ரீம்ஸ் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Home Remedies For Nightfall

Nightfall is very uncomfortable in the nights when a person gets wet dreams. There are certain home remedies which can help you cure nightfall.
Story first published: Wednesday, January 3, 2018, 12:30 [IST]