For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலினுள் உள்ள உட்காயங்களை சரிசெய்யும் சில பழங்கால வைத்தியங்கள்!

இங்கு உடலினுள் உள்ள உட்காயங்களை சரிசெய்யும் சில பழங்கால வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

நமது உடலினுள் நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் போது காயங்கள் ஏற்படும். நாம் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போது, இரத்த வெள்ளையணுக்கள் உடலின் இதர பகுதிகளுக்கு பாதுகாப்பளிக்கப் போராடும் போது உட்காயங்கள் ஏற்படலாம். சில சமயங்களில் வேறு சில காரணங்களாலும், உடலினுள் காயங்கள் ஏற்படலாம்.

எப்போது ஒருவர் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, உடலினுள் காயங்கள் அதிகம் உள்ளதோ, அப்போது அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதில் உட்காயம் இருந்தால் வெளிப்படும் பொதுவான அறிகுறி தான் காய்ச்சல். அதோடு தலைவலி, குளிர்வது போன்ற உணர்வு, மூட்டு வலி போன்றவைகளும் வெளிப்படும். மேலும் ஆட்டோ-இம்யூன் நோய்கள் இருந்தால், ஒருவருக்கு உட்காயங்கள் அதிகம் இருக்கும். அதுவும் மிகவும் தீவிரமாக இருக்கும்.

Ancient Indian Natural Remedies for Inflammation That Actually Work

சில சமயங்களில் உட்காயங்கள் சுறுசுறுப்புடன் இல்லாமை அல்லது அளவுக்கு அதிகமான மன அழுத்தத்துடன் இருப்பது போன்றவற்றாலும் ஏற்படும். உணவு அலர்ஜி கூட உட்காயங்களை ஏற்படுத்தும். உடலில் ஏற்படும் உட்காயங்களை மருந்து மாத்திரைகள் மூலம் மட்டுமின்றி, நமது சில இந்திய பாரம்பரிய வைத்தியங்களின் மூலம் வெற்றிகரமாக சரிசெய்ய முடியும். ஒருவேளை ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மருந்துகள் எடுக்க வேண்டியிருந்தால், தவறாமல் எடுங்கள். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழங்கால வைத்தியங்களையும் பின்பற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம்

தூக்கம்

தூக்கத்தின் மூலம் தான் உடல் தன்னைத்தானே சரிசெய்யும். ஒருவர் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், உடல் தன்னைத் தானே சரிசெய்யும் நேரம் கிடைக்காமல் போகும். இதன் விளைவாக உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக செயல்பட வேண்டியிருக்கும். இதனால் உடலினுள் காயங்கள் அதிகரிக்கும். எனவே உங்கள் உடலில் உட்காயங்கள் ஏற்படாமல் இருக்க நினைத்தால், தினமும் 7-8 மணிநேர தூக்கத்தைத் தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

இஞ்சி

இஞ்சி

இந்த சுவையான வேரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது மற்றும் இது உடலினுள் இருக்கும் உட்காயங்களைக் குறைக்க உதவும். ஆகவே உங்கள் உடலில் உள்ள உட்காயங்களின் அளவைக் குறைக்க நினைத்தால், அன்றாட உணவுல் இஞ்சியை சேர்ப்பதோடு, அவ்வப்போது இஞ்சி டீயைக் குடியுங்கள்.

மசாஜ்

மசாஜ்

மசாஜ் செய்வதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம் மற்றும் உட்காயம் அல்லது அழற்சியைக் குறைக்க முடியும். ஆகவே அவ்வப்போது உடலுக்கு சரியான மசாஜைக் கொடுத்து வாருங்கள். மேலும் உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம், உடலினுள் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

அன்றாட சமையலில் சேர்க்கும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த மசாலாப் பொருள் தான் மஞ்சள். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலினுள் இருக்கும் அழற்சி அல்லது உட்காயங்களை சரிசெய்ய உதவும் அற்புதமான உணவுப் பொருள். முக்கியமாக மஞ்சள் ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

தயிர்

தயிர்

நமது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பெரும்பாலானவை குடலில் தான் உள்ளது என்று தெரியுமா? மனித உடலில் குடல் பகுதியில் 70 சதவீத நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளது. ஆகவே குடல் ஆரோக்கியமாக இருந்தால், உடலினுள் ஏற்படும் உட்காயங்களின் அளவைக் குறைக்கலாம். அதுவும் தயிரில் நல்ல பாக்டீரியாக்களான புரோபயோடிக்குகள் ஏராளமான அளவில் உள்ளது. இந்த தயிரை அன்றாடம் ஒருவர் சாப்பிட்டு வந்தால், அது குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சிகளை ஒருவர் அன்றாடம் செய்து வந்தால், உட்காயங்களைக் குறைக்கலாம். அதற்கு கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்பதில்லை. மென்மையான மற்றும் எளிய உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே, உட்காயங்களின் அளவைக் குறைக்க முடியும். ஆகவே நீச்சல், யோகா போன்றவற்றை தினமும் செய்யுங்கள்.

மல்லி, சோம்பு

மல்லி, சோம்பு

மஞ்சளைப் போன்றே சமையலறைப் பொருட்களான மல்லி, சோம்பு போன்றவைகளும், இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த பொருட்கள் உடலினுள் இருக்கும் உட்காயங்களைக் குறைப்பதோடு, குளிர்ச்சிப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த பொருட்கள் உங்கள் சமையலில் அன்றாடம் சேர்ப்பதற்கு மறக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ancient Indian Natural Remedies for Inflammation That Actually Work

Here are some ancient indian natural remedies for inflammation that actually work. Read on to know more...
Desktop Bottom Promotion