For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா..?? இதோ அதற்கான 9 டிப்ஸ்...

நமது உடலின் கழிவு நீக்கியே இந்த கிட்னி தான்.இவை இல்லை என்றால் நாம் அவ்வளவுதான்..! கிட்னியை சீரான வழியில் பாதுகாக்க 9 வழி முறைகள்

|

பொதுவாகவே நாம் அனைவருக்கும் நம்மை விட நம் நண்பர்கள் மீது பாசம், அக்கறை,அன்பு எல்லாமே அதிகம். அதே போன்றுதான் இந்த "இதயம்-கிட்னி" இவர்கள் இரண்டு பேரின் நட்பும். ஆம்..!! இதயம் எவ்வளவு முக்கியமோ அதே போன்றுதான் இந்த கிட்னியும். நமது உடலின் கழிவு நீக்கியே இந்த கிட்னி தான்.இவை இல்லை என்றால் நாம் அவ்வளவுதான்..!

kidney

கிட்னியானது இதயத்தை போன்றே பல முக்கிய பங்கை நமது உடலில் செய்து வருகிறது. நாம் வெளியில் சுத்தமாக இருக்க சோப்பு போட்டு குளிக்கின்றோம்...ஆனால், நமது உள் சுத்தத்தை மிக கவனமாக பார்த்து கொள்வது கிட்னி தான். நம் உடலில் மிக முக்கிய உறுப்பான இந்த கிட்னி நீண்ட நாட்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி இருக்க வேண்டுமா..? இதோ அதற்கான 10 அருமையான டிப்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்

#1 ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ்

கிட்னி விரைவிலையே பாதிப்படைவதற்கு முக்கிய காரணம் அது வீக்கம் அடைவதே. இந்தவிதமான பாதிப்பு பல நாட்கள் நீடித்தே பின்பு பெரிய விளைவுகளை தரும். நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்றழைக்கப்படும் இந்த வித நோயே கிட்னி பாதிப்பிற்கு பெரும் பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஆதலால்,முடிந்தவரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த ஆரஞ்சு,

திராட்சை, செர்ரி,ப்ரோக்கோலி, மாம்பழம்,பீன்ஸ்,கிரான்பெர்ரிகள், அவுரிநெல்லிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகள் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

#2 தண்ணீர்

#2 தண்ணீர்

நாம் உயிர் வாழ மிக முக்கியமான ஒன்று தண்ணீரே..! நம்மில் பலர் இந்த தண்ணீரைக்கூட அவ்வளவு வேக வேகமாக குடித்து கிட்னிக்கு அழுத்தத்தை தருகின்றோம்.கிட்னிக்கு அழுத்தமா..? புதுசா இருக்கேனு நினைக்குறிங்களா..!! ஆம்..! நாம் வேக வேகமாக தண்ணீர் குடிக்கும்போது கிட்னிக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துகின்றோம். அந்த அழுத்தத்தை ஒரே நேரத்தில் கிட்னியால் சமாளிக்க முடியாமல் திணற ஆரம்பித்துவிடும். ஆதலால்,தண்ணீர் குடிக்கும்போது மெல்ல குடிப்பது நன்று.

#3 சூரியஒளி

#3 சூரியஒளி

இப்போதெல்லாம் நாம் சூரிய ஒளியை காண்பதுகூட இல்லை. ஏனென்றால், நாம் தான் AC ரூமிலே இருந்து இருந்து பழகி விட்டோமே..." சூரிய ஒளி நமது உடலுக்கு மிக முக்கிய வைட்டமின்னான வைட்டமின் D-யை அதிக அளவில் தருகிறது. கிட்னி இந்த வைட்டமின் D-யை அக்டிவ் செய்ய உதவுகிறது. கிட்னிக்கு போதுமான அளவு இந்த வைட்டமின் D கிடைக்கவில்லையென்றால் பலவித பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.ஆதலால், தினமும் 15 நிமிடம் சூரிய ஒளியில் இருக்க பழகி கொள்ளுங்கள்.

#4 உடற்பயிற்சி

#4 உடற்பயிற்சி

நாம் நன்கு சாப்பிடுகின்றோம்... அளவுக்கு அதிகமாகவே உறங்குகின்றோம்...ஆனால், இதே அளவில் உடற்பயிற்சி செய்கின்றோமா..? இதற்கு பதில் இல்லை..' தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கும் மிக பெரிய நன்மையை தருகிறது. உடற்பயிற்சி செய்வதன்மூலம் இரத்த குழாய்கள் சீராக வேலை செய்து அத்துடன் கிட்னியின் வேலைகளையும் சரிவர செய்து முடிக்க ஏதுவாக இருக்கும்.

#5 அதிக மன அழுத்தம்

#5 அதிக மன அழுத்தம்

இப்போதெல்லாம் நமக்கு கடமைகள் அதிகம் ஆகி கொண்டே போகிறது.அதற்கு ஏற்றாற்போல மன அழுத்தமும் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது. கிட்னியின் பாதிப்பிற்கு இந்த மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும். 64% நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) இந்த மன அழுத்ததாலே கண்டறியப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, மன அழுத்தமின்றி இயல்பான வாழ்க்கையை வாழ பழகி கொள்ளுங்கள்.

#6 மது பழக்கம்

#6 மது பழக்கம்

மது அருந்துதல் இப்போதெல்லாம் ஒரு பேஷனாக மாறிவிட்டது.இந்த தேவையற்ற பேஷன் கிட்னியின் ஆயுளை குறைக்க வல்லது. கிட்னிக்கு அதிக பாதிப்பை இந்த மது பழக்கம் தான் தருகிறது. அதிக மது பழக்கம் அதிக மன உளைச்சலை தரவல்லது. அடிக்கடி மது அருந்துவதால் அது கல்லீரலையும் சேதப்படுத்திவிடுகிறது. மேலும் இது செல்கள் அதிகமாக இறப்பதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே மது அருந்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

#7 கொட்டைகள் & பருப்பு வகைகள்

#7 கொட்டைகள் & பருப்பு வகைகள்

உடலுக்கு நல்ல ஊட்ட சத்துக்களை தந்து அனைத்து உறுப்புகளையும் நன்கு செயலாற்ற செய்கிறது இந்த கொட்டைகள் & பருப்பு வகைகள். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள்,வைட்டமின் E, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், போன்றவை கிட்னியின் செயல்பாட்டை சீரான முறையில் வைக்க உதவுகிறது.அக்ரூட் மற்றும் பாதாம் போன்றவரை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்து கொண்டால் கிட்னியின் ஆற்றலை அதிகரிக்கும்.

#8 பாஸ்ட் ஃபூட்ஸ்

#8 பாஸ்ட் ஃபூட்ஸ்

பாஸ்ட் ஃபூட்ஸ் எவ்வளவு அதிகமாக சாப்பிடறீங்களோ..அவ்வளவு வேகமாக நீங்கள் உங்கள் கிட்னியின் ஆயுளை குறைக்கிறீர்கள் என்று அர்த்தம். பீட்ஸா ,பர்கர், நூடுல்ஸ், போன்ற நீண்ட நேரம் செரிமானம் ஆக கூடிய உணவுகள் கிட்னியில் செயல்பாடுகளை பாதிக்க செய்யும்.எனவே பாஸ்ட் ஃபூட்ஸ்,குளிர் பானங்கள்,போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.

#9 கொழுப்புகள்

#9 கொழுப்புகள்

கிடைத்த உணவுகளையெல்லாம் உண்பதே நமது வழக்கமாக மாறி வருகின்றது. "உணவே மருந்து" என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதனை பொய்ப்பிக்கும் வகையில் நாம் எக்கசக்க கொழுப்பு நிறைந்த உணவுகளையே உண்கின்றோம். எண்ணெய் நிறைந்த உணவுகளை உண்பதால் இந்த கொழுப்புகள் அதிகம் நமது உடலில் சேர்க்கிறது.ஆதலால்,முடிந்த வரையில் ஆலிவ் எண்ணெய் போன்ற உடலுக்கு நன்மை தரக்கூடிய எண்ணெய்களையே உபயோகிப்பது நன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: kidney health உடல்
English summary

9 ways to boost your kidney function

Don't break up these two friend's friendship...Heart-Kidney..!! yes of course..' kidney also very Vital for our living source. These are the 9 ways to boost your kidney function.
Desktop Bottom Promotion