For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவற்றையெல்லாம் இன்றே நிறுத்தி கொள்ளுங்கள்..! இல்லையென்றால், உங்களுக்கு மரணம் கூட நேரலாம்...!

|

செய்கின்ற வேளை எதுவாக இருந்தாலும் நம்மையும் பிறரையும் எந்த விதத்திலும் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஏதோ ஒரு காரணம் இருக்க தான் செய்யும். ஒரு சில அன்றாட பழக்க வழக்கங்கள் நம்மை முற்றிலுமாக பாதிக்க செய்கின்றது.

இந்த செயல்களை இன்றே நிறுத்தி கொள்ளவில்லையென்றால் உங்களுக்கு மரணம் கூட நேரலாம்..!

நாளுக்கு நாள் இந்த பழக்க வழக்கங்கள் நீடித்து கொண்டே போனால், நமது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும். அந்த வரிசையில் நாம் ஒரு சில முக்கிய பழக்க வழக்கங்களை இன்றே நிறுத்தி கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பதை நாம் இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவ்வளவு ஆபத்தா..?

அவ்வளவு ஆபத்தா..?

இன்று நாம் தினமும் செய்கின்ற பல செயல்கள் நமக்கு தீங்கையே பெரிதும் விளைவிக்கின்றது. இந்த பழக்க வழக்கத்தை நாம் உடனே நிறுத்தி கொள்வது சற்றே கடினம் என்றாலும் நாம் இவற்றை நிறுத்தி தான் ஆக வேண்டும். ஏனெனில், நாளுக்கு நாள் இந்த பழக்க வழக்கங்கள் நமக்கு ஆபத்தை கூட ஏற்படுத்தலாம்.

பாத்ரூம் பழக்கம்..!

பாத்ரூம் பழக்கம்..!

நம்மில் பலர் இந்த பழக்கத்தை இப்போதெல்லாம் ட்ரெண்டாக செய்து வருகின்றோம். அதாவது, மொபைலை பாத்ரூமில் பயன்படுத்துவதே. பாத்ரூமில் உள்ள பாக்டீரியா, வைரஸ், E.கோலி போன்ற நுண்ணுயிர்கள் நமது மொபைலில் ஒட்டி கொள்ள கூடும். இவற்றை நாம் பயன்படுத்துவதால் பல தொற்று நோய்கள், வயிற்று போக்கு, சுவாச பிரச்சினை போன்றவை ஏற்பட கூடும்.

எங்கே நிம்மதி..?

எங்கே நிம்மதி..?

இன்று நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினைகளில் இந்த நிம்மதியின்மையும், தூக்கமின்மையும் தான் முதல் இடத்தில உள்ளது. இதற்காக கண்ட தூக்க மாத்திரைகளையெல்லாம் நாம் சாப்பிடுகின்றோம். இது நமது முழு உடலுக்கும் பக்க விளைவு ஏற்படுத்தி, அல்சர், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

அம்புட்டும் விஷம்..!

அம்புட்டும் விஷம்..!

இந்த பழக்கம் பதில் 5 பேருக்கு இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அது வேறெதுவும் இல்லை. நகம் கடிக்கும் பழக்கம் தான். இதனால், வயிற்றில் கோளாறுகள், நகத்தில் தழும்புகள், பற்களில் பிரச்சினை போன்றவை ஏற்படும். மன அழுத்தமாக இருந்தால் நகத்தை இனி கடிக்காதீர்கள் நண்பர்களே.

MOST READ: மருத்துவமனைகள் உங்களிடம் சொல்லாமல் மறைக்கும் அந்த 10 ரகசியங்கள் இதோ..!

புரளி மனிதர்கள்..!

புரளி மனிதர்கள்..!

நம்முடன் இருக்கும் பலர் உண்மையில் நமது வளர்ச்சியை பார்த்து பெருமை அடைபவர்கள் இல்லை. நாம் வளர்ச்சி அடைந்து விட கூடாது என்பதற்காக நம் கூடவே இருந்து கொண்டு இதை செய்யாதே, அதை செய்யாதே என நம்மை நெகட்டிவாக யோசிக்க தூண்டுபவர்கள். முடிந்த அளவு இவர்களை கண்டு கொள்ளாமல் உங்கள் பாதையில் மகிழ்வுடன் பயணியுங்கள்.

வெளியே போனீங்கன்னா...அவ்வளவுதான்..!

வெளியே போனீங்கன்னா...அவ்வளவுதான்..!

வீட்டில் நம் அம்மா ஆசை ஆசையாக செய்கின்ற உணவை நாம் வெறுத்து ஒதுக்கி விட்டு கண்ட வேதி பொருட்களை கலந்து செய்யும் ஜங்க் உணவுகளை நாம் விரும்பி சாப்பிடுகின்றோம். ஆனால், ஜங்க் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுக்குமே தவிர எந்த விதத்திலும் நமக்கு நன்மையை தராது.

முதல்ல இதை நிறுத்துங்க...!

முதல்ல இதை நிறுத்துங்க...!

இப்போதெல்லாம் 15 வயது இளைஞன் முதல் புகை பழக்கத்தை சாதாரணமாக கடைபிடித்து வருகின்றனர். இது அழிவிற்கான பாதையையே நமக்கு தரும். புகை பிடித்தல் புற்றுநோய், இதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை போன்ற ஆயிர கணக்கான நோய்கள் வரும் என தெரிந்தும் நாம் ஏன் இவற்றை செய்ய வேண்டும்...? எனவே, கொஞ்சம் கொஞ்சமாக இதை விட்டு விடுங்கள் நண்பர்களே.

காலை உணவுக்கு நோ நோ..?

காலை உணவுக்கு நோ நோ..?

நீங்கள் காலை உணவை தவிர்த்தால் கட்டாயம் உங்களுக்கு வருகின்ற பிரச்சினைகள் ஏராளம். அதை உணர்ந்து கொள்ளுங்கள். உடல் பருமன், தொப்பை போடுதல், சோர்வு, மன அழுத்தம் ஆகியவை இதனால் ஏற்படும்.

MOST READ: ஆண்களே, நீங்கள் பிறந்த மாதத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் வரும்னு கண்டுபிடிச்சிடலாம்..!

எதுக்கு இந்த பழக்கம்..?

எதுக்கு இந்த பழக்கம்..?

இதை சொன்னவுடன் பலருக்கு, என்ன பழக்கம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. குடி பழக்கத்தை தான் சொல்கின்றேன் தோழர்களே. பலர் இந்த குடி பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி, பிறகு மோசமான நிலைக்கு வந்துள்ளனர். குடித்து குடித்து மரணத்தை எய்தவர்களும் உண்டு. எனவே, முதலில் இந்த குடி பழக்கத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.

தூய்மை இல்லையா..?

தூய்மை இல்லையா..?

சுத்தமாக இருப்பது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை. ஆனால், நம்மில் பலர் இதை ஏதோ மிக பெரிய சாதனையாக கருதுகின்றோம். சுத்தமாக இருந்தால் நாமும் ஆரோக்கியமாக இருந்து, நமது சுற்றத்தையும் நலமாக இருக்க வைக்கலாம்.

எப்போதும் கொறித்தலா..?

எப்போதும் கொறித்தலா..?

நம்மில் பலருக்கு இந்த பழக்கம் உள்ளது. எப்போ பார்த்தாலும் எதையாவது கொறித்து கொண்டே இருப்பது. இது நமக்கு பல வித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சினை, மாரடைப்பு போன்றவை ஏற்படும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 unhealthy Habits You Need to Stop Right Now

Habits that you should definitely stop right now.
Desktop Bottom Promotion