பட்டை தண்ணீரை குடிப்பதால் உடலினுள் என்னென்ன அற்புதங்கள் நிகழும்?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

இலவங்கப் பட்டை என்பது சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதன் ஆரோக்கிய நன்மைகளால் இவை மருத்துவ மற்றும் அழகு பராமரிப்புகளில் பெரிதும் பயன்படுகிறது.

இதிலுள்ள அரோமேட்டிக் பொருட்கள் சமைக்கின்ற உணவுகளில் சுவையை சேர்ப்பதோடு, நல்ல நறுமணத்தையும் கமழச் செய்கிறது. பிரியாணி போன்ற உணவுகளில் முக்கிய மசாலா பொருளாக இது உள்ளது. நாம் பண்டிகைகளின் போது தயாரிக்கும் இனிப்பு மற்றும் பலகாரங்களிலும் இதன் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் கருவுற்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது. எனவே இப்படிப்பட்ட பட்டை தண்ணீரை தினமும் குடிப்பதால் நம் உடலில் உண்டாகும் அற்புத நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடை குறைப்புக்கு நல்லது

உடல் எடை குறைப்புக்கு நல்லது

பட்டை தண்ணீர் மற்றும் தேன் சேர்ந்த கலவை உடல் எடையை குறைக்க சிறந்த மருந்து. இவை நமது உடலில் உள்ள வேண்டாத நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்கிறது. இது நமக்கு வயிறு நிறைந்த தன்மையை கொடுப்பதால் நாம் அதிகமான நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது குறைக்கப்படுகிறது. இதனால் நமது உடல் எடையும் குறைகிறது.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தருதல்

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தருதல்

தேச தாவிரயியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம், அப்போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு பட்டையில் உள்ள அனல்கெஸிக்(வலி நிவாரணி பொருட்கள் ) மற்றும் இரத்த உறைதலுக்கான எதிர்ப்பு பொருள் போன்றவை மாதவிடாய் வலியையும் அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதையும் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இந்த பட்டை தண்ணீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான பாலிஃபீனால் மற்றும் புரோன்தோசயனின்ஸ் போன்றவை நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் ஆன்டி வைரல் பொருட்கள் போன்றவை இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கிறது.

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சனையை குறைத்தல்

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சனையை குறைத்தல்

பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் என்பது ஒரு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினை. இது பொதுவாக பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. எனவே இதற்கு பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இந்த நோய்குறியிலிருந்து தப்பிக்கலாம். மேலும் இவை பெண்களின் இன்சுலின் எதிர்ப்பு பொருளை குறைத்து பாலிசிஸ்டிக் ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினையை குறைக்கிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

பட்டை தண்ணீர் நமது மூளையின் செயல்திறனையையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் பாதிப்புகளால் வரும் நோய்களான பர்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்றவற்றின் வேகத்தை குறைக்கிறது. மேலும் இந்த தண்ணீர் ஓரே செயலில் ஈடுபடுவதற்கான கவனத்தை கொடுக்கிறது.

பல் வலியை குணப்படுத்துகிறது

பல் வலியை குணப்படுத்துகிறது

நீங்கள் பல்வலியால் அவதிப்பட்டால் அதற்கு இந்த பட்டை சிறந்த பலனை கொடுக்கும். தினமும் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கமும் குறையும்.

நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது

நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது

பட்டை தண்ணீரில் பாலிபினோல் என்ற, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.

புற்றுநோயிலிருந்து காக்கிறது

புற்றுநோயிலிருந்து காக்கிறது

பட்டையில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் என்ற பொருள் புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது. எனவே பட்டை தண்ணீர் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

கேட்கும் திறனை அதிகரிக்கிறது

கேட்கும் திறனை அதிகரிக்கிறது

உங்களுக்கு காது கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த பட்டை தண்ணீர் போதும். ஏனெனில் இதிலுள்ள பொருட்கள் காதின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது.

சரும தன்மையை பராமரிக்கிறது

சரும தன்மையை பராமரிக்கிறது

பட்டை தண்ணீர் உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது. எனவே நச்சுகள் நமது சருமத்தில் தங்காமல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Health Benefits Of Drinking Cinnamon Water

Cinnamon is a powerhouse of nutrients and antioxidants. Know about the health benefits of cinnamon water here.