Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
உங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா..? அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..
நாம் வாழும் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு முதலில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு அதிக ஆரோக்கியத்தை தருவது அவரின் எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் எதையுமே நம்மால் செய்ய இயலாது.

எதிர்ப்பு சக்தி கூட வேண்டும் என்றால் அதற்கு மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியதில்லை. மாறாக சில முக்கியமானவற்றை கடைபிடித்தாலே போதும். சக்திமானை போல பலம் பெறுவதற்கு இந்த பதிவில் கூறும் குறிப்புகளே போதுமானது. இனி, எவ்வாறு இரட்டிப்பான எதிர்ப்பு சக்தியை பெறுவது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

நோய் எதிர்ப்பு சக்தி...
ஒருவர் நீண்ட நாள் நோயின்றி இருக்க அவருக்கு உதவும் காரணிகளில் முதன்மையானது இந்த நோய் எதிர்ப்பு சக்தி தான். ஆரோக்கியமற்ற உணவுகள், சத்தற்ற தாய்ப்பால், பரம்பரை ரீதியான பிரச்சினைகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.

சர்க்கரையை தள்ளி வையுங்கள்..!
நாம் சாப்பிட கூடிய சிறிய உணவு பொருளில் கூட ஏராளமான அளவில் சர்க்கரையை சேர்த்துள்ளனர். சர்க்கரையை குறைத்து கொண்டாலே நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் வெள்ளை ரத்த அணுக்களை இவை குறைத்து விடும். எனவே, எளிதில் நோய்கள் உங்களை தாக்க கூடும்.

பாட்டு பாட வா..!
நம்மில் பலர் பாத்ரூம் சிங்கராக நிச்சயம் இருப்போம். இந்த பாடல் கலை ஒருவரை அதிக மகிழ்ச்சியுடன் மாற்றுகிறது. தினமும் பாட்டு பாடினால், வெள்ளை அணுக்கள் அதிகரிக்க செய்யுமாம். மேலும், ரத்தத்தின் செயல்பாடும் சீராக இருக்கும். இனிமே, தினமும் ஒரு பாட்டு பாடுங்க நண்பர்களே.

சுத்தம் சோறு போடும்..!
நாம் சுத்தமாக இருந்தாலே பலவித நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். குறிப்பாக எப்போதும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். ஏனெனில், கையினால் தான் நாம் உணவை உண்கின்றோம். எனவே எந்த ஒரு நோயும் உருவாவதற்கு கை தான் முக்கிய காரணியாகும்.

பாதாம் பிரியர்களா நீங்கள்..?
உங்களின் அன்றாட உணவில் பாதாம் சேர்த்து கொண்டாலே மிக பெரிய நன்மையை அது ஏற்படுத்தும். தினமும் நீரில் ஊற வைத்த பாதாமை 3 அல்லது 5 வரை சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுவுடன் மாற்றலாம். மேலும், இது வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடும்.

தூக்கம் போச்சா..?
எந்த அளவிற்கு உழைக்கிறமோ அதே அளவிற்கு நாம் நமது உடலையும் பார்த்து கொள்ள வேண்டும். முக்கியமாக ஓய்வு நேரம் மிக அவசியமான ஒன்றாகும். நாம் உழைக்கும் அளவிற்கு ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும். நன்றாக தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும்.

சிரிப்பு.. சிரிப்பு..!
சிரிப்பை பற்றிய பல்வேறு ஆராய்ச்சியில் எண்ணற்ற தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் ஒன்று தான், அதிகமாக சிரிப்பதால் எதிர்ப்பு சக்தி மண்டலத்தின் ஆற்றல் இரு மடங்காக கூடுமாம். எனவே, ஆன்டி பாடிஸ்களின் எண்ணிக்கை உயர்ந்தால் நம்மை எளிதில் எல்லா வித கிருமிகளின் இருந்தும் காத்து கொள்ளலாம்.

காளான்
கிருமிகளை அழிக்க கூடிய அருமையான தன்மை இந்த காளானிற்கு உள்ளதாம். இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் சிறந்த மருந்தாக பயன்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

எங்கே நிம்மதி..?
நம்மில் பலருக்கு சம்பாதிக்கும் அளவிற்கு நிம்மதியாய் வாழ தெரிவதில்லை. இது தான் பலரின் பெரும் பிரச்சினையாக உள்ளது. பணம், பதவி எல்லாமே ஒரு மாயை மட்டுமே. மன நிம்மதியும், மகிழ்ச்சியும் தான் ஒருவருக்கு முக்கியமாக தேவைப்படுகிற ஒன்றாகும். எனவே, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

ரன் கண்ணா...ரன்..!
ஒரே இடத்தில உட்கார்ந்து கொண்டே இருப்பவருக்கு பல வித நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். எனவே, முக்கியமாக காலை வேளையில் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்து பழகுங்கள் நண்பர்களே. அதிக ஓட்டம், அதிக ஆரோக்கியத்தை தரும். மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில உட்காராமல் எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.

காய்கனிகள் வேண்டுமே..!
நாம் சாப்பிட கூடிய உணவில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், தாதுக்களும் இருக்கிறதா..? என்பதை முதலில் நீங்கள் உணர வேண்டும். இல்லையெனில் நாம் எளிதாக நோய்களில் தாக்குதலுக்கு ஆளாகி விடுவோம்.
இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











