இத தினமும் 2 ஸ்பூன் சாப்பிட்டா, இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் அட்ரினல் சுரப்பி மிகவும் முக்கியமான பணியை செய்கிறது. இது சிறுநீரகங்களுக்கு மேலே அமைந்துள்ளது. இந்த சுரப்பியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதனால் தூக்க பிரச்சனைகள், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பதோடு, நகங்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

இத்தகைய அட்ரினல் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஓர் அற்புதமான மருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட்ரினல் சுரப்பியின் செயல்பாடு

அட்ரினல் சுரப்பியின் செயல்பாடு

அட்ரினல் சுரப்பியில் இருந்து வெளிவரும் ஸ்டெராய்டு, அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, மெட்டபாலிச அளவை மேம்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும். அதோடு, இந்த ஹார்மோன்கள் தான் மன அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளையும் தடுக்கும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* வால்நட்ஸ்

* உலர்ந்த பார்ஸ்லி இலைகள்

* தேன்

* இஞ்சி பேஸ்ட்

* உலர்ந்த திராட்சை

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் உலர்ந்த பார்ஸ்லி இலைகளையும், வால்நட்ஸையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, பின் அத்துடன் இதர பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை:

உட்கொள்ளும் முறை:

தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நன்மைகள்:

நன்மைகள்:

இந்த கலவையை சாப்பிட்டு வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். மேலும் இதுவரை உங்களுக்கு நகங்கள் உடைந்தால், இனிமேல் நகங்கள் உடைவது தடுக்கப்பட்டு, நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Need To Eat This If You Have Brittle Nails Or You’re Not Sleeping Well

The following natural homemade recipe with Brazilian walnuts will help you to get good sleep.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter